Published:Updated:

மீனின் கனவுகள்!

மீனின் கனவுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மீனின் கனவுகள்!

பெண் ஓவியம் வரவணை செந்தில், படங்கள்: வீ.நாகமணி

சென்னை லலித்கலா அகாடமியில், ஓவியக் காட்சிகள் தொடர்ந்து நடந்தவண்ணம் இருக்கும். அதில் ஸ்பெஷலான ஒன்றாக, கும்பகோணம் ஓவியக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் 24 பேர் தங்களின் 70 ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருந்தனர். இந்த 24 பேரில் 9 பேர் பெண்கள்.  ஓவியக்காட்சி வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் இருந்த ஓவியப் பெண்களைச் சந்தித்தோம்...

மீனின் கனவுகள்!

ஏற்கெனவே உடலில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது போன்று தோற்றம் உள்ள `கோய் சி’ மீன்களைத் தன் ஓவியங்களில் நீந்தச்செய்கிறார் பிரியங்கா. ``கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்தாலும், அங்கே இப்படி ஒரு கல்லூரி இருப்பதே எனக்கு ப்ளஸ் டூ படித்துமுடிக்கும்வரை தெரியாது. இந்தக் காட்சிக்காகச் சென்னை வந்தது உண்மையில் நல்ல அனுபவமாக இருந்தது. மூன்று ஆண்டுகளாக எங்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கு இந்த ஓவியங்கள் மூலமாகப் பெருமை சேர்த்துள்ளோம்” என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மீனின் கனவுகள்!
மீனின் கனவுகள்!

``எங்கள் ஓவியங்களைப் பெரிய பெரிய ஓவியர்கள் வந்து பார்த்தார்கள். எங்களைப் போன்ற மாணவர்களின் படைப்புகளை அவர்கள் வந்து பார்த்தது எங்களுக்கு நிறைய மகிழ்ச்சியாக இருந்தது” என்று அபிகெயில் வானதி சொல்லிக்கொண்டிருந்தபோதே, ``எப்படி புகழ்பெற்ற ஓவியர்கள் வந்து பார்த்தது மகிழ்ச்சியோ, அதேபோல மகிழ்ச்சியான விஷயம் சென்னை ஓவியக் கல்லூரி மாணவர்கள் வந்து பார்த்தது. ஓர் ஊரில் இரண்டு கல்லூரிகள் இருப்பது சகஜம். ஆனால், ஒரு மாநிலத்தில் இரண்டே கல்லூரிகள்தான் கவின்கலைகளுக்கானது. அதனால், சென்னை ஓவியக் கல்லூரி மாணவ மாணவிகள் வந்து சென்றது செம ஹேப்பி!’’ என்றார் ஆதித்யாதேவி.

தானியங்களை விட்டெறிந்தால் பறந்து வந்துவிடும் அளவுக்கு யதார்த்தமான சிட்டுக்குருவிகளை ஓவியமாக வரைந்துள்ள கார்த்திகா, ``இரண்டு மாதங்களுக்கு முன் இதே அரங்கத்தில் ஓவியர் ஆதிமூலத்தின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.  அப்போதுதான் எங்கள் ஓவியக்காட்சிக்கான விதை விழுந்தது. என்னதான் நாம் நல்ல படங்கள் வரைந்தாலும் அவை அதிகம் பேரைச் சென்று சேர வேண்டும். அப்படிச் சேருவதற்கு வழி, சென்னை போன்ற பெருநகரங்களில் காட்சிக்கு வைப்பதுதான் என முடிவு செய்தேன். எங்களின் பேராசிரியர் வில்வநாதன் மற்றும் கல்லூரி முதல்வர் தேவானந்த் முயற்சியால்தான் இங்கு வர முடிந்தது. இங்கு வந்த பிறகே எங்களின் படைப்புகளில் உள்ள நிறைகளும் குறைகளும் எங்களுக்குத் தெரியவந்தன” என்றார்.

மீனின் கனவுகள்!
மீனின் கனவுகள்!

தமிழ் ஓவியத்துறையில் இருக்கும் முக்கிய ஓவியர்கள் பலரும் வந்து பார்வையிட்டதைச் சின்ன துள்ளலுடன் உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டார் ஸ்வாதி. பரதநாட்டியப் பெண்ணின் முக பாவனைகளை ஓவியமாக வரைந்து இந்தக் காட்சியில் வைத்துள்ளார் இவர். ``ஹாசிப்கான், கார்த்திகேயன் மேடி, பிரேம் டாவின்சி என விகடன் ஆர்டிஸ்ட்கள் அனைவரும் வந்திருந்தனர். ஹாசிப்கான்  கொடுத்த டிப்ஸ் பயனுள்ளதாக இருந்தது. விகடன் ஓவியர் பிரேம் டாவின்ஸி எங்க காலேஜ் சீனியராம். எங்கள் திறமை வெளியில் தெரிவது, நாங்கள் மதிக்கும் ஓவியர்கள் எங்கள் படைப்புகளை வந்து பார்த்தது என்று டபுள் டமாக்கா உற்சாகம் எங்களுக்கு” என்றார் சின்னப் புன்னகையுடன்.

மீனின் கனவுகள்!

ஓவிய ஆசிரியரின் மகளான ஓவியா வரைந்துள்ள மீன் வடிவக் கனவு பிம்ப ஓவியம், தேவிப்பிரியாவின் கோட்டோவியம், யோக ப்ரீதாவின் கரை திரும்பும் கப்பல்கள், ரஞ்சிதாவின் பல கோண வடிவ ஓவியங்கள் எனப் பெண்களின் பங்களிப்பு மூன்றில் ஒரு பங்காக இந்தக் காட்சியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

``உண்மையில் ஆண்டுக்கு ஆண்டு எங்கள் கல்லூரியில் பெண்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. இனி வரப்போகும் ஆண்டுகளில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் பங்கேற்பார்கள்” என்றார்கள்அழகோவியங்கள்!