Published:Updated:

"அந்த ஒரு நிமிஷம் வாழ்ந்தா போதும்!”

"அந்த ஒரு நிமிஷம் வாழ்ந்தா போதும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
"அந்த ஒரு நிமிஷம் வாழ்ந்தா போதும்!”

ஸ்டார் ஆர்.வைதேகி

மிழ் சினிமாவுக்குத் தாரைவார்க்கப் பட்டிருக்கும் இன்னொரு வட இந்திய அழகி சாக் ஷி. ‘காலாவுக்கு முன்’, ‘காலாவுக்குப் பின்’ என சாக் ஷியின் கிராப் கன்னாபின்னாவென மாறியிருக்கிறது.

‘ககக போ’, ‘திருட்டு விசிடி’, ‘ஜெயிக்கிற குதிரை’ என கதாநாயகியாக நடித்த படங்களில் எல்லாம் வொர்க் அவுட் ஆகாத அதிர்ஷ்டம், ‘காலா’வில் கைகொடுத்ததில் உத்தராஞ்சல் பொண்ணுக்கு உற்சாகம்.
‘`சின்ன வயசுலேருந்து ரஜினி சார் படங்கள் பார்த்து வளர்ந்த ரசிகைகளில் நானும் ஒருத்தி.  நாலஞ்சு தமிழ் படங்கள் பண்ணிட்டு, எதுவும் பெரிசா க்ளிக் ஆகாத நிலையில லாஸ் ஏஞ்சல்ஸ்ல ஒரு வருஷம் ஆக்டிங் கோர்ஸ் படிச்சிட்டு வந்தேன்.

திடீர்னு ஒருநாள் ரஞ்சித் சார் ஆபீஸ்லேருந்து `ஆடிஷனுக்கு வர முடியுமா'னு போன்... அப்போ அது ரஜினி சார் படம்னுகூடத் தெரியாது.  ஏகப்பட்ட சீன்ஸ் கொடுத்து நடிச்சுக் காட்டச் சொன்னாங்க. டயலாக்ஸ் கொடுக்காம நான் அந்த சிச்சுவேஷன்ஸுக்கெல்லாம் எப்படி ரியாக்ட் பண்ணுவேன், என்ன பேசுவேன்னு என் கற்பனைக்கே விட்டாங்க. நடிச்சுக் காட்டினேன். ‘சொல்றோம்’னு ஒற்றை வார்த்தையில என்னை அனுப்பிட்டாங்க. ரெண்டு நாள் எனக்கு சோறு, தண்ணி இறங்கலை. தூக்கமில்லை. பயங்கர நெர்வஸா இருந்தேன். வீட்டுல யாராவது சாப்பிட்டியானு கேட்டாகூட அந்த ஆடிஷனைப் பத்தியே பேசினேன்னா பார்த்துக்கோங்க.

"அந்த ஒரு நிமிஷம் வாழ்ந்தா போதும்!”

மூணாவது நாள் ‘கேன் யு கம் அண்ட் ஜாயின் அஸ்’னு  மறுபடி ஒரு மெசேஜ்.  என் படபடப்பு இன்னும் அதிகமாகிருச்சு. கிட்டத்தட்ட 20 நாள்... வழக்கமான வொர்க் ஷாப் மாதிரி இல்லாம அது வேற லெவல்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வொர்க் ஷாப் முடியற வரைக்கும்கூட நான் அந்தப் படத்துல இருக்கேனா, இல்லையானு தெரியலை. சஸ்பென்ஸோடவே நாள்கள் போச்சு. கடைசி நாள்தான், ‘நீங்க இந்தப் படம் பண்றீங்க... நாளன்னிக்கு ரஜினி சார்கூட போட்டோ ஷூட் இருக்கு’னு சொன்னாங்க....’’ - ‘தட் ஆஸம் மொமென்ட்’டிலிருந்து இன்னமும் மீளவில்லை மிஸ் அகர்வால்.

‘`நம்மூர்ல உள்ள ஒரு சராசரி ரசிகனுக்கு ரஜினி சாரைப் பிடிக்கிறதுல ஆச்சர்யமில்லை. ஆனா,  உலகம் முழுக்க உள்ள மக்களுக்கும் தலைவரைப் பிடிக்குது. நான் இந்தப் படத்துல கமிட் ஆனது தெரிஞ்சு, என்கூட அமெரிக்காவுல ஆக்டிங் கோர்ஸ் பண்ணின அமெரிக்கன்ஸ்கூட போன் பண்ணி வாழ்த்தினாங்க.

"அந்த ஒரு நிமிஷம் வாழ்ந்தா போதும்!”

முதல் நாள் ரஜினி சார்கூட ஷூட்டிங். ஆசீர்வாதம் வாங்கினேன். அவ்வளவு பெரிய நடிகர், என்னைப் பத்தி விசாரிக்கணும்னு அவசியமே இல்லை. ஆனாலும், அக்கறையா பேசினார். ஆக்டிங் கோர்ஸ் பண்ணினதைப் பத்திச் சொன்னதும் ‘ரொம்ப நல்ல விஷயம். யாருமே பண்ணாததை நீங்க பண்ணியிருக்கீங்க. அவ்வளவு தூரம் போய் படிக்கணும்னு நினைச்சதே பெரிய விஷயம்’னு பாராட்டினார். அதைவிட ஹைலைட் என்ன தெரியுமா? முதன்முறை சாரைப் பார்த்தபோது, ‘சார்... இது எனக்குக் கனவு நனவான தருணம். உங்க படத்துல ஓர் ஓரமாவாவது நின்னுட மாட்டோமானு ஏங்கியிருக்கேன். இப்போ உங்ககூட ஸ்கிரீன் ஸ்பேஸ் ஷேர் பண்ணியிருக்கேன் என்கிறதை என்னாலயே நம்பமுடியலை. ஐ'ம் ரியலி ஹேப்பி டு வொர்க் வித் யு’னு சொன்னேன். அதுக்கு அவர், ‘ஐ'ம் ஆல்சோ ஹேப்பி டு வொர்க் வித் யு’னு சொன்னார். அதுக்குப் பிறகு எனக்குப் பேச்சே வரலை. சார்கூட முதல் சீன்... எனக்கு பில்டிங், பேஸ்மென்ட்டெல்லாம் உதறுது. ஹார்ட் பீட் தாறுமாறா துடிக்குது. ஆனாலும், ஒரே டேக்ல என் சீன் ஓகே ஆயிடுச்சு. அது முடிஞ்சதும் ரஜினி சார், ‘பார்க்கறதுக்குத் தான் நார்த் இந்தியன் பொண்ணு... போயெட் மாதிரி டயலாக்கெல்லாம் பின்னி எடுக்குது’னு சொன்னபோது, அந்த ஒரு நிமிஷம் வாழ்ந்தா போதும்னு இருந்தது...’’ - சாக் ஷியின் வார்த்தை களில் ரஜினி எஃபெக்ட்டின் உச்சம்.

பிசினஸ்மேன் சாந்திலால் அகர்வாலின்  மகளான சாக் ஷி, ஐ.டி இன்ஜினீயரிங், எம்.பி.ஏ பட்டதாரி.

‘`சின்ன வயசுல ஐ.ஏ.எஸ் ஆபீசர் ஆகணும்னு ஆசைப்பட்டேன். ஒரு டைம்ல ஐ.டி-யும் இன்ஜினீயரிங்கும் பீக்ல இருந்தது. அதனால நானும் அதையே படிக்கணும்கிற நிலைமை. அண்ணா யுனிவர்சிட்டியில ஐ.டி இன்ஜினீயரிங் முடிச்சேன். கோல்ட் மெடலிஸ்ட். இன்ஃபோசிஸ்ல நல்ல பேக்கேஜ்ல ப்ளேஸ்மென்ட்கூடக் கிடைச்சது. எக்ஸ்பெரிமென்ட் பண்ணித்தான் பார்ப்போமேனு மாடலிங்குள்ள வந்தேன். அப்படியே நடிப்புக்கு டிரான்ஸ்ஃபர்.

"அந்த ஒரு நிமிஷம் வாழ்ந்தா போதும்!”

எனக்கு சினிமா பின்னணி கிடையாது.  நடிக்க வந்த புதுசுல சினிமாவைப் பத்தி ஒண்ணுமே தெரியாது. எந்த மாதிரி கதைகளைக் கேட்கணும், என்ன கேரக்டர்ஸ் எனக்கு செட் ஆகும்னு ஒரு தெளிவு இல்லாம சில படங்கள்ல நடிச்சேன். இன்னிக்கு இருக்கிற தெளிவு அன்னிக்கு இருந்திருந்தா, நிச்சயம் என் கரியர் வேற மாதிரி டெவலப் ஆகியிருக்கும். ஆனாலும் என்ன...  எல்லாமே அனுபவங்கள்தானே?

‘காலா’ படத்துல நான் ஹீரோயின் இல்லை. நடிக்க வந்தபோது கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள நிறைய வாய்ப்புகள் வந்திருக்கு. ‘ஐயையோ நான் கேரக்டர் ரோல் பண்றதா’னு ‘நோ’ சொல்லியிருக்கேன். அது தப்பான முடிவுங்கிறதை என் படங்களே எனக்குக் கத்துக்கொடுத்தன.

‘இறைவி’ படத்துல மூணு ஹீரோயின்ஸ். மூணு பேருக்கும் சம அளவு முக்கியத்துவம் இருக்கும். அதையெல்லாம் பார்த்த பிறகு, ஹீரோயினா நடிக்கிறதைவிடவும் பர்ஃபார்மர்னு பேர் வாங்கறதுதான் பெரிசுங்கிறதை புரிஞ்சுக்கிட்டேன். காலாவுக்குப் பிறகு எக்கச்சக்கமான ஆஃபர்ஸ் வந்திட்டிருக்கு. பொறுமையா கதைகள் கேட்டுக்கிட்டிருக்கேன். இடையில ஒரு ஹாலிவுட் படம் பண்ணியிருக்கேன். அதுவும் சீக்கிரமே ரிலீஸ்.

‘காலா’ எனக்குக் கடவுள் மாதிரி. இனிமே தப்பா எதுவும் நடக்காது...’’ - காலா பிராமிஸ் பண்ணுகிறார் ரஜினி ரசிகை!