Published:Updated:

தலைமுடி பராமரிப்பு ரொம்பவே ஈஸி!

தலைமுடி பராமரிப்பு  ரொம்பவே ஈஸி!
பிரீமியம் ஸ்டோரி
News
தலைமுடி பராமரிப்பு ரொம்பவே ஈஸி!

பியூட்டி கானப்ரியா.ந.ப

``பொடுகு, இளநரை, பேன் தொல்லை, முடி உதிர்வு என தலைமுடியில் ஏற்படும் பிரச்னைகள் ஏராளம். கூந்தல் ஆரோக்கியத்தை வைத்தே உடல் ஆரோக்கியத்தைக் கணித்துவிடலாம்’’ என்கிற ஹேர் ஸ்டைலிஸ்ட் சங்கீதா, இவற்றுக்கான தீர்வுகளையும் அளிக்கிறார்.

தலைமுடி பராமரிப்பு  ரொம்பவே ஈஸி!
தலைமுடி பராமரிப்பு  ரொம்பவே ஈஸி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பொடுகு பிரச்னையா?

வறண்ட கூந்தல், பொடுகு கொண்டவர்கள் எலுமிச்சைச் சாற்றைத் தலையில் தேய்த்து ஐந்து நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு மிருதுவான ஷாம்பூவைக் கொண்டு தலைமுடியை நன்கு அலச வேண்டும். மென்மையான சருமம் கொண்டவர்கள் என்றால் எலுமிச்சைச்சாறுடன் சிறிது தயிர் சேர்த்துக் கொள்ளலாம். தொடர்ந்து இவ்வாறு செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

தலைமுடி பராமரிப்பு  ரொம்பவே ஈஸி!

இளநரையா?

ஒரு கப் தேங்காய் எண்ணெயுடன் ஐந்து செம்பருத்திப் பூக்களைப் போட்டு நன்றாகச் சூடாக்கிக் கொள்ளவும்.அதனுடன் சிறிய அளவுள்ள கற்பூரத்தைப் போட்டு குளிர்ந்த பின் இந்தக் கலவையைத் தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். மாதம் ஒருமுறை இவ்வாறு செய்தால் இளநரை குறையும்.

பேன் தொல்லையா?

டீ ட்ரீ எண்ணெய் சிறிதளவு எடுத்து, பஞ்சால் நனைத்துத் தலை முழுக்கத் தேய்க்க வேண்டும். பின் ஒரு டவலால் தலை முழுவதும் சுற்றி, இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் ஷாம்பூ கொண்டு தலையை நன்கு அலச வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்தால் பேன் தொல்லை நீங்கும்.

தலைமுடி பராமரிப்பு  ரொம்பவே ஈஸி!

தலைமுடி உதிர்வா?

இரண்டு டீஸ்பூன் தயிருடன் ஒரு டீஸ்பூன் தேனைக் கலந்து கொள்ளவும். பின் இந்தக் கலவையை நன்கு தலையில் தேய்க்கவும். ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பூ போட்டு அலசவும். வாரம் இருமுறை இதுபோல செய்துவர முடி உதிர்வு குறையலாம்.