பார்த்த படம்

மஹிமா நம்பியார், நடிகை

“என் ஃப்ரெண்ட் ஒருத்தி சொல்லி, ‘Miracle from heaven’ என்ற ஆங்கிலப் படம் பார்த்தேன். உண்மைக்கதையை அடிப்படையா வெச்சு எடுக்கப்பட்ட படம். ஒரு தம்பதிக்கு மூணு பெண் குழந்தைகள். லைஃப் செம ஜாலியா போயிட்டிருக்கும்போது, திடீர்னு ஒரு குழந்தைக்கு தாங்கமுடியாத வயிற்றுவலி. டாக்டர்கிட்ட கூட்டிட்டுப்போய் எல்லா டெஸ்ட்டுகளும் எடுப்பாங்க. ஆனாலும், என்ன பிரச்னைன்னு கண்டுபிடிக்கவே முடியாது. ஒருகட்டத்தில் அந்தப் பெண்ணால் சாப்பிட முடியாமலே போயிடும். ‘இனி இந்தப் பெண்ணைக் காப்பாற்ற முடியாது’னு டாக்டர் கை விரிச்சுடுவார். அந்தநேரத்தில் எதிர்பாராதவிதமா ஆக்சிடென்ட் நடக்கும். அதில் அந்தக் குழந்தை இறந்துடுச்சுனு எல்லாரும் நினைக்கும்போது, அவ பிழைச்சு வந்து, ‘நான் பூரணமா குணம் ஆகிட்டேன். இனிமே, எனக்கு உடம்புல எந்தப் பிரச்னையும் இல்லை’னு சொல்லுவாள். அந்தக் குழந்தை பிழைச்சது எப்படி? எப்படிக் காப்பாற்றினாங்க? இதையெல்லாம் ரொம்ப இயல்பாகச் சொல்லியிருப்பாங்க. இதுதான் சமீபத்தில் நான் பார்த்ததில் ரொம்ப ரொம்பப் பிடிச்ச படம்.”

சென்ற இடம்

தன்யா ரவிச்சந்திரன், நடிகை

“ ‘பிருந்தாவனம்’ பட ஷூட்டிங்குக்காக கர்நாடக மாநிலத்தில் உள்ள சகிலேஷ்பூர் போயிருந்தேன். எப்போதுமே லேசாகத் தூறிக்கொண்டே இருக்கும் மழையில், அந்த நகர் அவ்ளோ அழகு. சகிலேஷ்பூரின் உடல் எங்கும் பரவி படர்ந்துகிடக்கும் பச்சைப் பசேல் நிலபரப்பு, ஏதோ நம் மீதே படர்வது போன்ற குளிர்ச்சியைத் தரும்.

ஷூட்டிங் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் அந்த ஊரையே சுற்றிச்சுற்றி வந்தேன். மழையின் மண் வாசமே தனி மயக்கமாக இருந்தது. ‘இது மண் பூக்கும் நேரமோ’னு நினைத்துக்கொண்டேன். அந்த ஊரும் அந்த மக்களும் எனக்கு அவ்வளவு பிடிச்சிருக்கு.”

வாங்கிய பொருள்

வைஷாலி தனிகா, நடிகை

“எங்க அப்பா அம்மாவுக்கு 25-வது கல்யாண நாள் சமீபத்துல வந்தது. அவங்களுக்கு கிஃப்ட் வாங்க நகைக்கடைக்குப் போயிருந்தேன். அங்க, எங்க அப்பாவுக்கு ஒரு பிரேஸ்லெட் பார்த்துட்டு இருந்தேன். அப்ப ஸ்டோன்வொர்க் பண்ணின ஒரு பிரேஸ்லெட் செமையா, அழகா, என் கைக்கு க்யூட்டா இருந்தது. அந்த எட்டு கிராம் பிரேஸ்லெட்டை உடனே வாங்கிட்டேன். எனக்கு எது பிடிச்சிருந்தாலும் வாங்கலாமா, வேண்டாமானெல்லாம் யோசிக்கவே மாட்டேன்... உடனே வாங்கிடுவேன்.

அப்புறம் அப்பாவுக்குக் கொஞ்சம் பட்டையா ஒரு பிரேஸ்லெட், அம்மாவுக்கு தேடித்தேடி அழகா ஹியர் ரிங்ஸ் வாங்கி சர்ப்ரைஸ் பண்ணினேன். எல்லாருக்கும் என் செலெக்ஷன் ரொம்ப பிடிச்சிருந்தது.”

வாங்கிய பரிசு

ஹேமா ராகேஷ், செய்தி வாசிப்பாளர்

“என் கணவர் ராகேஷ் எனக்கு அடிக்கடி சர்ப்ரைஸ் கொடுப்பார். நானும் அவரை சர்ப்ரைஸ் பண்ணுவேன். அவரும் நானும் மீட் பண்ணினது, ப்ரப்போஸ் பண்ணினதுனு எங்க லைஃப்ல நடந்த எல்லா முக்கியமான நிகழ்வுகளையும் வருஷா வருஷம் செலிபிரேட் பண்ணிடுவோம்.

கல்யாணத்துக்குப்பிறகு ஒவ்வொரு நாளையும் காலண்டர்ல நோட் பண்ணிவெச்சு சரியா கல்யாணமான நூறாவது நாளை கொண்டாடினோம். அன்னிக்கு வீட்டுலயே கேண்டில் லைட் டின்னர் ரெடி பண்ணி அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்தேன். அவரும் எனக்கு கிஃப்ட் கொடுத்தார். எங்க ஒவ்வொரு கல்யாண நாளுக்கும் நாங்க டூர் போவோம். ஆனா, எங்க போகப்போறோம்னு அவர் என்கிட்ட சொல்லவே மாட்டார். செம சஸ்பென்ஸா இருக்கும்.

இப்ப கன்சீவா இருக்கேன். இதுக்குகூட நூறாவது நாளைக் கொண்டாடி, க்யூட் பேபி பில்லோ வாங்கிக்கொடுத்தார். அதைத்தான் இப்ப தலைக்கு வெச்சு தூங்குறேன். நீங்களும் உங்க லைஃப்ல இப்படி நூறாவது நாள்களைக் குறிச்சுவெச்சு செலிபிரேட் செஞ்சு பாருங்க. இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்.”

படித்த புத்தகம்

சுதா, வழக்கறிஞர்

“ ‘எப்பவோ வந்த புத்தகத்தை இப்பதான் படிச்சீங்களா’னு கேட்கக் கூடாது. விகடன் பிரசுரம் வெளியிட்ட ‘வந்தார்கள் வென்றார்கள்’ புத்தகத்தை அண்மையில்தான் படித்தேன். மொகலாய மன்னர்கள் நகமும் சதையும், பாசமும் கோபமும்கொண்டு எப்படி வாழ்ந்தார்கள் என என் கண்முன்கொண்டு வந்த புத்தகம். நமக்குச் சம்பிரதாயமாகச் சொல்லிக்கொடுக்கப்பட்ட சரித்திரத்தில் கேள்விப்பட்ட அக்பர், ஒளரங்கசீப், துக்ளக், சிவாஜி போன்றவர்களின் வரலாற்றை இந்தப் புத்தகத்தில் முழுமையாகப் படித்த போது பிரமித்துப்போனேன். அந்த மன்னர்களின் பின்னணி, வளர்ந்தவிதம், அவர்களின் நிஜரூபம் என முழுமையான தொகுப்பாக மிகச் சுவாரஸ்யமாக இருந்தது. ஒவ்வொருவரும் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.”

கேட்ட இசை

பத்மலதா, பாடகி

“மலையாளத்தில் எந்தப் புதுப்பட ஆல்பம் ரிலீஸானாலும் உடனே கேட்டுடுவேன். இப்ப வந்த ‘உதஹரணம் சுஜாதா’ (Udaharanam Sujatha) பட ஆல்பத்தில் இருந்த அத்தனை பாடல்களும் வேற லெவல். வரிகளுக்குத் தகுந்த மாதிரி இனிமையாக இசையமைத்து இருக்கிறார் இசையமைப்பாளர் கோபி சுந்தர். இவர்தான் என் ஃபேவரைட் மியூசிக் டைரக்டரும்கூட. ‘காட்டில் இல’னு (Kaatil ila) ஒரு மெலோடி பாடலை விஜய் யேசுதாஸ் பாடியிருப்பார். அது அப்படியே நம்மை மெஸ்மரைஸ் பண்ணும். ‘நீ நெஞ்சண்டே’னு ஆரம்பிக்கும் கிராமிய பாடல் ஏற்ற இறக்கத்துடன் ரொம்ப லைவ்வா இருக்கும். கேட்டுப்பாருங்க... உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்!''

சந்தித்த நபர்

சரண்யா பொன்வண்ணன், நடிகை

“நான் விருகம்பாக்கத்தில் ‘DOST’ என்ற ஃபேஷன் டிசைன் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட் நடத்திட்டு இருக்கேன். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுவந்த ஒரு பெண் இங்கே படிப்பதற்காக வந்திருந்தாங்க. `தொடர்ந்து கிளாஸ் இருக்கும். ஹோம்வொர்க் வேற கொடுப்போம். இதையெல்லாம் அவங்களால பண்ண முடியாதே’னு நினைச்சு, எங்க ஸ்கூல்ல இருந்தவங்க ஆரம்பத்தில் அவங்களுக்கு அட்மிஷன் கொடுக்கலை. உடனே, அவங்க என் நம்பர் வாங்கி லைன்ல வந்தாங்க. ‘எனக்கு கேன்சர் என்பதால் என் சொந்தக்காரங்க யாரும் ஒரு நிகழ்ச்சிக்குக்கூட கூப்பிட மாட்டாங்க மேடம். நான் ஃபேஷன் டிசைன் கத்துக்கிட்டு எல்லார் முன்னாடியும் வாழ்ந்து காட்டணும்னு நினைக்கறேன்’னு ரொம்ப நம்பிக்கையா பேசினாங்க. இப்படிப்பட்ட பெண்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். உடனே எங்க கிளாஸ்ல சேர்த்துக்கிட்டேன். இப்ப அவங்க ஹார்டுவொர்க் பண்ணி கத்துக்கிட்டு வர்றாங்க.

நம் வாழ்க்கையில் என்ன நடந்தாலும், எவ்வளவு தூரம் அடிபட்டாலும் அதிலிருந்து மீண்டுவர முடியும் என்கிற நம்பிக்கை இவர்களைப் போன்ற மனிதிகளைச் சந்திக்கும்போதுதான் அதிகரிக்குது.”

தீராத ஆசை

ஜோதிமணி, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்

“இங்குள்ள அரசியல் கட்சிகள் அறுபது ஆண்டுகாலமாக பல விஷயங்களைச் செய்திருக்கிறார்கள். எனினும், அரசியல் சிஸ்டத்தை மாற்றாமல் எந்த மாற்றத்தையும் நிகழ்த்திவிட முடியாது. மக்களின் முழுமையான பங்களிப்பு, அரசியலுக்குள் என்று வருகிறதோ அன்றுதான் ஊழல் ஒழிப்பு உள்பட அனைத்தும் சாத்தியம். இன்று வேட்பாளரைக் கட்சியே அறிவித்துவிடுகிறது. கொள்கைகளையும் அந்தக் கட்சியே முடிவு செய்கிறது. நன்மை, தீமைகளை மட்டுமே மக்கள் அனுபவிக்க வேண்டிய நிலை. இனி, அரசியல் கட்சிகள் திறந்த அமைப்பாக - மக்களால் முடிவு செய்யப்படும் அமைப்பாக மாற வேண்டும். மக்களால் வழிநடத்தப்படும் அமைப்பாகச் செயல்பட வேண்டும். அரசியலுக்குள் மக்கள் பிரதிநிதித்துவம் முழுமையாக இருக்க வேண்டும். இதுவே என் தீராத ஆசை!”

கடைப்பிடிக்கும் பழக்கம்

லலிதா ஷோபி, நடன இயக்குநர்

“ஆடம்பரமா வாழணும்னு நான் என்னிக்கும் ஆசைபட்டதில்லை. என்ன இருக்கோ அதை வெச்சு மனசுக்குத் திருப்தியா வாழணும்னு நினைப்பேன். ‘மிடில் கிளாஸ்ல இருந்துட்டு, ஹை கிளாஸ் வாழ்க்கை வாழமுடியலையே’னு வருத்தப்பட்டதே கிடையாது. அதேமாதிரி கடன் வாங்கி லைஃப் நடத்தக் கூடாதுன்னும் நினைப்பேன். கடன் நம்ம மனநிலையையும், குடும்பத்தோட சந்தோஷத்தையும் ஒட்டுமொத்தமாக சீரழிச்சுடும். நான் ஓர் இக்கட்டான நிலையில் கடன் வாங்கவேண்டிருந்தது. அதிலிருந்து மீண்டுவருவதற்கு ரொம்ப சிரமப்பட்டேன். ஒருவழியா அந்தக் கடனை அடைச்சிட்டேன். நம்மகிட்ட இருக்கும் பொருளாதாரத்தை வெச்சு வாழ்வதுதான் நமக்கும் நம்ம குடும்பத்துக்கும் நல்லது.”

நெகிழ்ந்த நிமிடம்

காயத்ரி, தடகள வீராங்கனை

“ஸ்போர்ட்ஸ் எனக்கு உயிர். அதனால், எல்லா ஸ்போர்ட்ஸ் நியூஸையும் தவறாமல் படிச்சுடுவேன். இந்தியாவிலிருந்து எந்த விளையாட்டில் யார் வென்றாலும் எனக்கு மகிழ்ச்சியாவும் நெகிழ்ச்சியாவும் இருக்கும். அண்மையில் டென்மார்க் சூப்பர் சீரியஸ் பேட்மின்டன் போட்டியில் கிடம்பி ஸ்ரீகாந்த் வென்றார். ரொம்பப் பெருமையா இருந்துச்சு. நம் தேசிய விளையாட்டான ஹாக்கியில் பல வருடங்களுக்குப் பிறகு ஆசிய கோப்பையை நாம் ஜெயிச்சோம். இப்படி இந்திய அணியும் இந்திய வீரர்களும் வெற்றி பெறும் தருணங்கள் ஒவ்வொன்றுமே என்னை நெகிழ்த்தும் நிமிடங்கள்தாம்!”