Published:Updated:

நமக்குள்ளே!

நமக்குள்ளே!
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே!

நமக்குள்ளே!

`கடன்பட்டாவது பிள்ளைகளைப் படிக்க வைக்கணும்... நல்லபடியா கல்யாணம் செய்து வைக்கணும்’ என்பன

நமக்குள்ளே!

போன்ற கனவுகளைக் கொண்ட குடும்பங்களே நம்நாட்டில் அதிகம். பெரும்பாலும் பெண்களின் நகைசேமிப்புகூட `அவசரத்துக்கு அடகு வெச்சுக்கலாம்’ என்பது போலத்தான் இருக்கும். `சிறுகச் சிறுகச் சேமித்து மனை வாங்கினேன்; வீடு கட்டினேன்; பிள்ளைகளைப் படிக்க வைத்தேன்; திருமணச் செலவுகள் செய்தேன்...’ என முன்பெல்லாம் நடுத்தரக் குடும்பங்களின் பெரும்பாலான செலவுகள் இப்படியானவையாகவே இருந்தன. `முதலில் சேமிப்பு... பிறகு செலவு’ என்பது போய், `முதலில் செலவுக்குக் கடன் வாங்கு...  பிறகு கடனைக் கட்டு’ என்பது மாதிரியான நவீனயுக நுகர்வுக்கலாசாரத்தின் கரங்களில் சிக்கியபிறகோ, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஈஎம்ஐ, கிரெடிட் கார்டு திட்டங்கள் எனப் பலவற்றிலும் சிக்கி,`கரணம் தப்பினால் மரணம்’ என்பதுபோல் பல குடும்பங்களின் கழுத்து நெரிபட்டுக்கொண்டே இருக்கிறது.

எந்தவொரு தேவையாக இருந்தாலும் அதை இன்றே இப்போதே அடைய வேண்டும் என்று துடிக்காமல் காத்திருந்து சேமித்து, அதன்பின்பாக அதை அடைவோமானால், சிக்கல் இருப்பதில்லை. அதேபோல, சக்திக்கு மீறாமல் அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் கடனை வாங்கி, உரிய வகையில் திருப்பிச் செலுத்தும் எத்தனையோ பேரையும் பார்க்க முடிகிறது. இப்படியெல்லாம்  இல்லாமல், குடும்பத் தலைவன் வாங்கும் சிறிய கடனாக இருந்தாலும், அது ஒட்டுமொத்தக் குடும்பத்தையே நடுத்தெருவுக்கு இழுத்துவிடுகிறது.

சமீபத்தில், கந்துவட்டிக் கடனில் சிக்கிக்கொண்டு, பலரின் கண்முன்னே எரிந்து சாம்பலாகிப் போன நெல்லையைச் சேர்ந்த இசக்கிமுத்துவின் குடும்பம் குறித்த செய்திகள், நம் நெஞ்சங்களைப் பதைபதைக்க வைத்துக்கொண்டிருப்பதை மறுக்கமுடியுமா?

கந்துவட்டி, அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் என அந்தக் குடும்பத்தின் இழப்புக்குக் காரணங்கள் பல சொல்லப்பட்டாலும் பணத்தை முன்னிலைப்படுத்தி நடக்கும் இத்தகைய கோரத்தாண்டவங்கள் இனியும் நடக்கக் கூடாதென்றே நம் அனைவரின் மனங்களும் எதிர்பார்க்கின்றன.

கந்துவட்டிக் கொடூரத்துக்குக் காரணமானவர்கள்மீது கட்டாயமாக நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும் என நாம் போராடும் அதேவேளையில், கடன் வாங்கும் முன்பாகப் பலமுறை யோசித்துச் செயல்படுவதும் அவசியம். தொட்டதுக்கெல்லாம் கடன் வாங்கிக்கொள்ளலாம் என்றில்லாமல், சேமிப்புப் பழக்கத்தின் மூலம் செலவுகளை எதிர்கொள்வதுதான் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையாக இருக்கும். இதை நம் வருங்காலத் தலைமுறை உணரும்வகையில், இன்றே நாம் அடியெடுத்து வைப்போம்!

உரிமையுடன்,

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நமக்குள்ளே!

ஆசிரியர்