Published:Updated:

தனியே தன்னந்தனியே!

தனியே தன்னந்தனியே!
பிரீமியம் ஸ்டோரி
News
தனியே தன்னந்தனியே!

படம்... பயணம்..ரமணி மோகனகிருஷ்ணன்

தனியே தன்னந்தனியே!

``என் சொந்த ஊர் மயிலாடுதுறை. பி.இ, எம்.பி.ஏ முடிச்சுட்டு சென்னையில் மார்க்கெட் ரிசர்ச் வேலை, பெங்களூரில் பி.பி.ஓ வேலைனு பார்த்தேன். திருமணமாகி பஹ்ரைனுக்குப் போனதுக்குப் பிறகுதான், எனக்குள்ளே ஒளிந்திருந்த போட்டோகிராபி ஆர்வத்தை நானே உணர ஆரம்பிச்சேன்’’ - வார்த்தைக்கு வார்த்தை புன்னகை கோத்துப் பேசும் வித்யா தியாகராஜன், பெங்களூரில் வசிக்கும் புகைப்படக் கலைஞர். அவரது ‘பட்டர்ஸ்காட்ச் க்ரியேஷன்ஸ்’ நிறுவனம், `கிட்ஸ் போட்டோகிராபி'க்குப் புகழ்பெற்றது. ஃபிலிம் கேமராவிலிருந்து `டிஎஸ்எல்ஆர்’ டிஜிட்டல் கேமரா வரை   மாற்றங்கள் பல கண்ட அவரது அனுபவப் பகிர்வு இது. 

தனியே தன்னந்தனியே!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``முதலில் ஃபிலிம் கேமராவில் போட்டோ எடுத்துட்டு இருந்தேன். அது ரிப்பேர் ஆனதும், பாயின்ட் ஷூட் கேமரா வாங்கினேன். பஹ்ரைன் போனதுக்கு அப்புறம், புகைப்படம் எடுப்பதே என் பொழுதுபோக்காச்சு. ஒருமுறை `எஃப்1’ கார் ரேஸுக்குப் போயிருந்தேன். அங்கே பெரிய பெரிய கேமராக்களோடு வந்திருந்த புகைப்பட ஜாம்பவான்களுக்கு மத்தியில், குட்டி கேமரா மற்றும் ட்ரைபாடோடு நான் நின்னுட்டிருந்ததைப் பார்த்த என் கணவர், ஒரு `டிஎஸ்எல்ஆர்’ கேமராவை என் பிறந்த நாள் பரிசா வாங்கிக்கொடுத்தார்’’ என்பவர், அதன்பிறகே தன் புகைப்பட நுட்பத்தை மெருகேற்றியுள்ளார். 

தனியே தன்னந்தனியே!

“பஹ்ரைனில் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர்களின் நேரடி உதவியாளர்கள் நடத்தும் வொர்க்‌ஷாப்களில் கலந்துக்கிட்டேன். அங்க நிறைய கத்துக்கிட்டேன். ஈத் விடுமுறைக்காலத்தில் புகைப்பட ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் ‘போட்டோ வாக்' நிகழ்வுகளின்போது பத்து கிலோமீட்டர் தூரம்கூட நடந்தே போட்டோக்கள் எடுத்திருக்கேன்.  

தனியே தன்னந்தனியே!

பெங்களூருக்குத் திரும்பியதும், பி.இ, எம்.பி.ஏ-வை எல்லாம் மறந்துட்டு, போட்டோகிராபிதான் நம்ம ஏரியானு முடிவு பண்ணினேன்’’ என்கிறவர், தன் அடுத்தகட்ட பயணத்தைச் சொல்கிறார்.

தனியே தன்னந்தனியே!
தனியே தன்னந்தனியே!

``பிசினஸ் என்பதைவிட, ஒரு பேஷனாவே (passion) நான் போட்டோகிராபி எடுக்க விரும்பினேன். பிசினஸில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு  காரணமாக, படைப்பாளியின் சுதந்திரம் சுருங்கிவிடக் கூடும். அதனால், எனக்கென்று ஒரு பிரத்யேக ஸ்டைலை உருவாக்கி, அதற்காகவே வாடிக்கையாளர்கள் தேடிவரும் வகையில் ஸ்டுடியோவை நிறுவ முடிவெடுத்தேன். அப்படித்தான் உருவானது ‘பட்டர்ஸ்காட்ச் க்ரியேஷன்ஸ்’ புகைப்பட நிறுவனம். இங்கே என் வாடிக்கையாளர்கள் ‘இப்படி படம் எடுத்துக் கொடுங்க’ என்று டிமாண்ட் செய்யாமல், ஒருவித ஸ்பெஷல் அனுபவத்துக்காகக் காத்திருக்கிறார்கள்.  கிட்ஸ் போட்டோகிராபிதான் என்னுடைய ஸ்பெஷல். குழந்தைகளைப் படமெடுப்பதில் சவாலும் அதிகம், சந்தோஷமும் அதிகம்’’ என்கிறவரின் மனதுக்கு நெருக்கமாக இருப்பதென்னவோ டிராவல் போட்டோகிராபிதான்.

தனியே தன்னந்தனியே!

“போட்டோகிராபிக்காக சீனாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் தனியாகவே சென்று வந்தேன். நான் தனியா வந்திருக்கிறது தெரிஞ்சதும், சீன மக்கள்  அவ்வளவு பாசமாகவும் பத்திரமாகவும் பார்த்துக்கிட்டாங்க. இப்போ நிறுவன வேலைகளில் பிஸியாயிருக்கிறதால,  உலகப் பயணத்தைக் கொஞ்சம் தள்ளிப் போட்டிருக்கேன்’’ என்கிறார் வித்யா.

சீக்கிரமே றெக்கைக் கட்டிப் பறக்க வாழ்த்துகள்!