Published:Updated:

‘வாழ்க்கை நாற்பதில் தொடங்குகிறது!’ - நிரூபிக்கும் டான்ஸ் குரு மனீஷா மேத்தா

‘வாழ்க்கை நாற்பதில் தொடங்குகிறது!’ - நிரூபிக்கும் டான்ஸ் குரு மனீஷா மேத்தா
பிரீமியம் ஸ்டோரி
News
‘வாழ்க்கை நாற்பதில் தொடங்குகிறது!’ - நிரூபிக்கும் டான்ஸ் குரு மனீஷா மேத்தா

கலைச்சேவைஸ்ரீலோபாமுத்ரா

``நடனம், இசை, எழுத்து என்று உங்களின் பேஷனை (passion) உள்ளுக்குள் பூட்டிவைத்துவிட்டு, பொருளீட்டும் வேறு பணிகளில் இருக்கிறீர்களா? பரவாயில்லை... உங்கள் ஆர்வத்தை வெளிக்கொண்டுவரும் காலம் இன்னும் கடந்துவிடவில்லை. மனது வைத்தால் மனம் விரும்பியதுபோல வாழலாம்.சார்ட்டர்டு அக்கவுன்டன்டான நான், இன்று டான்ஸ் ஸ்கூல் நடத்துவதுபோல!’’ 46 வயதாகும் மனீஷா, சுவாரஸ்யமாகப் பேசத்தொடங்குகிறார்.  

‘வாழ்க்கை நாற்பதில் தொடங்குகிறது!’ - நிரூபிக்கும் டான்ஸ் குரு மனீஷா மேத்தா

``ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் பிறந்தேன். மொரீஷியஸில் வளர்ந்தேன்.  நடனத்திலிருந்த ஆர்வத்தால், பரதநாட்டியம், கதக், ஜாஸ், பாலே எனப் பலவித நடனங்களையும் கற்றேன். ஒரு நாளில் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நடன வகுப்புகளுக்குச் செலவு செய்வேன். ஒவ்வொரு வருடமும் பள்ளி இறுதித் தேர்வு முடிந்து இந்தியா வரும்போது, ராஜஸ்தானியப் பாரம்பர்ய கிராமிய நடனத்தையும் விரும்பிக் கற்றேன். சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் கோர்ஸில் சேர்ந்தபோதும், நாடு முழுவதும் நடன நிகழ்ச்சிகளை நடத்தியதுடன், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றுப் பரிசுகள் வென்றேன்.

திருமணத்துக்குப்பின் இரண்டு குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்தபோது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவச நடனம் கற்றுக்கொடுத்தேன். என்னிடம் பயின்ற மாணவ - மாணவிகள் பலர் நடனப் போட்டிகளில் பங்குகொண்டு பரிசுகளை வென்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
‘வாழ்க்கை நாற்பதில் தொடங்குகிறது!’ - நிரூபிக்கும் டான்ஸ் குரு மனீஷா மேத்தா

ஒரு கட்டத்தில் இந்தியா திரும்பி, பெங்களூரில் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியை ஆரம்பித்தேன். நடனத்தில்   என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள விரும்பினேன். ஆனால், அப்போது எனக்கு வயது 40. ‘இனி, புதிய முயற்சிகள் சரிவருமா?’ என்று நான் தயங்கிய நேரத்தில், ‘வாழ்க்கை நாற்பதில் தொடங்குகிறது’ என்ற வாக்கியம் என் கண்ணில்பட்டது. புதிய உத்வேகம் பெற்று, ‘டான்ஸ்கலா’ நடனப்பள்ளியை ஆரம்பித்தேன்’’ என்கிற மனீஷா, தன் நடனத் திறமையைச் சமூக நலனுக்கு அர்ப்பணிக்க முடிவெடுத்தது சிறப்பு.

``ஆதரவற்றோர் இல்லங்களில் வளரும் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து நடனப் பயிற்சி அளிக்கலாம் என்ற முடிவோடு அப்படியோர் இல்லத்துக்குச் சென்றேன். நடனம் கற்க வேண்டும் என்கிற ஏக்கத்தைக் கண்களில் நிறைத்து நின்றிருந்த சில குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நடனப்பயிற்சி கொடுக்க ஆரம்பித்தேன். என் பள்ளியில் பயிலும் மற்ற மாணவர்களுடன்  சேர்த்து அவர்களுக்கும் அனைத்து நடன வகைகளையும் கற்றுக்கொடுத்தேன். அவர்களில் தேர்ச்சிபெற்ற குழந்தைகளை ஒன்றிணைத்து ஒரு நடனக் குழுவை ஆரம்பித்தேன். கடந்த குடியரசு தினத்தன்று, அந்தக் குழந்தைகளின் சிறப்பு நடன நிகழ்ச்சியை நடத்தி, நிதி திரட்டி, அதை அந்தக் குழந்தைகளின் எதிர்கால நலனுக்கு வழங்கினேன். அவர்களுக்கான நடன வகுப்புகளையும் தொடர்ந்து எடுத்துவருகிறேன்’’ என்று புன்னகைக்கும் மனீஷா, தன் சேவையுடன் கூடிய கலை ஆர்வத்துக்காக ‘பப்ளிக் ரிலேஷன் கவுன்சில் ஆஃப் இந்தியா’ வழங்கிய ‘ஷைனிங் ஸ்டார்’ மற்றும் ‘பெண் சாதனையாளர் விருது’ பெற்றிருக்கிறார்.

``ஆதரவற்ற குழந்தைகள் நடன வகுப்புகளின்போது வெளிப்படுத்தும் சந்தோஷம், குரு என்பதைத் தாண்டித் தாய்மைக்கான சந்தோஷத்தையும் எனக்குத் தருகிறது” என மனீஷா சொல்லும்போது அவர் கண்களில் தெரிகிறது, சாதித்துவிட்ட மகிழ்ச்சி!