Published:Updated:

பாதிக்குப் பாதி லாபம் தரும் பீடட் கார் சீட்!

பாதிக்குப் பாதி  லாபம் தரும் பீடட் கார் சீட்!
பிரீமியம் ஸ்டோரி
News
பாதிக்குப் பாதி லாபம் தரும் பீடட் கார் சீட்!

வீட்டிலேயே செய்யலாம் வெற்றிகரமான தொழில்கள் சாஹா - படங்கள்: தே.அசோக்குமார்

கார்களை அலங்கரிக்கும் பொருள்களை விற்பதற்கென்றே பிரத்யேகக் கடைகள் இருக்கின்றன. அங்கே அதிகம் விற்பனையாகும் பொருள்களில் ஒன்று பீடட் கார் சீட். மணிகள் கோத்துச் செய்த பாய் போன்ற ஒன்றில் அமர்ந்து கார் ஓட்டுபவர்களைப் பார்த்திருப்போம். அந்த மணி பாய்களுக்குத்தான் ‘பீடட் கார் சீட்’ என்று பெயர். இது வெறும் அலங்காரத்துக்கானதல்ல, ஆரோக்கியத்துக்கானது என்பது பலரும் அறியாதது. நீண்டநேரம் உட்கார்ந்தபடி கார் ஓட்டும்போது கடுமையாக முதுகு வலிக்கும். வியர்வையில் உடல் முழுவதும் கசகசவென்றாகும். உடல்சூடு அதிகரிக்கும். ‘பீடட் கார் சீட்’ இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க உதவும்.

கைவினைக் கலைஞரான ராணி, பீடட் கார் சீட் பின்னுவதில் நிபுணர். கார்களின் எண்ணிக்கை பெருகிவிட்ட இன்றைய சூழலில் பீடட் கார் சீட்டுகளுக்கான தேவையும் அதிகரித்துவருவதைக் குறிப்பிடுகிறார் அவர்...

பாதிக்குப் பாதி  லாபம் தரும் பீடட் கார் சீட்!

``நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க கூட இன்னிக்குச் சின்னதாகவாவது ஒரு கார் வெச்சிருக்கிறதைப் பார்க்கிறோம். ஆடம்பரத் தேவையா இருந்த கார், இன்னிக்கு அநேகம் பேருக்கு அவசியத் தேவையா மாறியிருக்கு. பல மணி நேரம் காரில் டிராவல் பண்ண வேண்டிய நிலையில் இருப்பவர்கள்... குறிப்பாக, டிரைவர் வேலையில் இருப்பவர்களுக்குத்தான் கார் ஓட்டறதுல உள்ள சிரமங்கள் தெரியும். காஸ்ட்லியான கார்களும் இதுல அடக்கம். பீடட் கார் சீட் போட்டுக்கிட்டு, அதுக்கு மேல  உட்கார்ந்தபடி, கார் ஓட்டும்போது முதுகுவலி, மூலநோய், தோள்பட்டை வலிகளெல்லாம் தவிர்க்கப்படும். முதுகுப்பக்கம் காற்றோட்டம் இருக்கும். உட்காரவும் வசதியாக இருப்பதோடு,  இதனால் உடல்சூடும் தணியும். இதுவும் ஒருவகையில அக்குபிரஷர்தான்’’ - பீடட் கார் சீட்டின் தேவையை உணர்த்திய ராணி தொடர்கிறார்...

``சின்ன வயசுலேருந்து மணிகள்லயும் வயர்லயும் கைவினைப் பொருள்கள் செய்வேன். புதுசா எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதை செய்து பார்க்க முயல்வேன். எங்க வீட்ல கார் வாங்கினப்ப, பீடட் கார் சீட் வாங்குவது பற்றிய பேச்சு வந்தது. மணிகள்ல நிறைய பொருள்கள் செய்யத் தெரிஞ்சதால, நானே சீட் அளவெடுத்துப் பின்னிப்பார்த்தேன். நல்லா வந்தது. அக்கம்பக்கம் தெரிஞ்சவங்கன்னு கார் வெச்சிருக்கிற பலரும் அது தெரிஞ்சு ஆர்டர் கொடுக்க, இன்னிக்கு நான் அந்த பிசினஸ்ல பிஸி’’ என்கிறவர், கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு வழிகாட்டுகிறார்...

``மரத்தாலான மணிகள் அல்லது பிளாஸ்டிக் மணிகள் (உருண்டை, நீளம் என வேறு வேறு  வடிவங்கள் மற்றும் அளவுகளில்), வயர் என இரண்டே பொருள்களே மூலதனம். மூவாயிரம் ரூபாய் முதலீடு போதுமானது. மணிகளைக் கோக்கிற விதத்துலதான் கற்பனையையும் வித்தியாசத்தையும் காட்ட முடியும். மத்தபடி சீட்டுல உட்காரும் இடத்துக்கு மட்டுமா, முதுகுப்பக்கத்துக்கும் சேர்த்தாங்கிறதைப் பொறுத்து மொத்தம் ரெண்டே மாடல்கள்தான். மரத்தாலான மணிகள்ல செய்யறது பார்வைக்கும் அழகு; சுற்றுச்சூழலுக்கும் ஏற்றது. கொஞ்சம் விலை அதிகம். விலை மலிவா வேணும்னா பிளாஸ்டிக் மணிகள் போதும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பாதிக்குப் பாதி  லாபம் தரும் பீடட் கார் சீட்!

ஒரு கார் சீட் குஷன் செய்ய ஒன்றரை கிலோ மணிகள் தேவை. சின்ன உருண்டை மணிகளுக்கு 1,000 ரூபாய் செலவாகும்.  பெரிய மணிகள்னா 1,200 ரூபாய். அதுவே பிளாஸ்டிக் மணிகள்னா 700 ரூபாய்க்குள் முடியும். காரை அலங்கரிக்கும் பொருள்கள் விற்கிற கடைகள்ல பேசி மொத்தமா ஆர்டர் எடுக்கலாம். அன்பளிப்பா கொடுக்கவும் ஏற்றது.

சிறிய அளவிலான கார் முதல் பெரிய இருக்கைகள்கொண்ட பெரிய கார் வரை எல்லா அளவுகளிலும் சீட் செய்யலாம். உங்களோட வேகத்தையும் நீங்க இதுக்காகச் செலவிடற நேரத்தையும் பொறுத்து ஒரு சீட் பின்ன மூணு முதல் ஏழு நாள்கள் ஆகும்.

50 சதவிகிதம் லாபம் நிச்சயம்...’’ என்கிற ராணி, ஒரே நாள் பயிற்சியில், 1,200 ரூபாய் கட்டணத்தில் தேவையான மெட்டீரியல்களுடன் பீடட் கார் சீட் செய்யக் கற்றுத் தரத் தயாராக இருக்கிறார்.