டீன் ஏஜின் இறுதிப் படியைக் கடந்துவரும் பெண்களை, பூங்கொத்தோடு புதிய வாழ்வுக்கு வரவேற்கும் வயது 20. இந்தப் பருவத்தில் எல்லா பெண்களுக்கும் ஒரு கனவு உதிக்கும், கதவு திறக்கும், தெளிவு பிறக்கும். இந்த இன்ஸ்டா காலத்துப் பெண்களின் 20-ம் வயது எப்படி இருக்கிறது? அவர்களின் விருப்பங்கள் என்னவாக இருக்கின்றன? கோவை, கிருஷ்ணா இன்ஜினீயரிங் கல்லூரிப் பெண்களிடம் ஒரு மெர்சல் சாட்டிங்!

``ஹேப்பி 20-வது பொறந்த டே அவள் விகடன். சேம் பின்ச்!’’ - கோரஸ் வாழ்த்து வருகிறது முதலில்.

``இன்னமும் இங்க யாரும் மாறவே இல்லை. பொண்ணுங்க ஜீன்ஸ் போட்டா குத்தம், பைக் ஓட்டினா குத்தம், வெளியூருக்கு வேலைக்குப் போனா குத்தம், கல்யாணத்தைத் தள்ளிப்போட்டா குத்தம்னு அதே பல்லவி தொடர்ந்துட்டு தானிருக்கு. சமூகத்தை மாற்ற காலம் ஆகும். ஆனா, ‘எங்களோட நியாயமான ஆசைகளை நாங்க யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம்’னு எங்க வீடுகளை கன்வின்ஸ் பண்றதில் பொண்ணுங்க வெற்றிகரமா முன்னேறிட்டிருக்கோம். ஆங்... `லவ்'வுன்னு சொல்லிட்டு வழியில வர்ற பசங்களெல்லாம் கொஞ்சம் விலகிக்கோங்க பாஸ்... எங்களுக்கு வேலையிருக்கு’’ என்று என்ட்ரியிலேயே எனர்ஜெட்டிக்காகப் பேசுகிறார் சஃபானா பானு. ``சூப்பரா சொன்னேடி செல்லம்’’ என்றபடி யாழினி, சுபலக்ஷ்மி, திவ்யஸ்ரீ, ஸ்வேதா, சுனந்தா, வர்ஷா, பிரியதர்ஷினி என அனைவரும் அரட்டைக்குத் தயாரானார்கள்.

``என்னது, வாழ்க்கையில பசங்களே வரக்கூடாதா? கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்க டியூட்” என்று ஆஷிகா, க்ரித்திக் ரூபா, பூவிழி, சந்தியதர்ஷினி, ஸ்வர்ணதீபா, கவிமலர், ஸ்ரீநிதி என இன்னொரு டீம் கைகோக்க, ஆரம்ப மானது கச்சேரி.

``நான் ஒண்ணும் ‘மின்சாரக் கண்ணா’ குஷ்பு மாதிரி ஆண்கள்னாலே வெறுக்கிற டைப் இல்ல. பொண்ணுங்களுக்கு ஓர் இலக்கு இருக்கும். ஆனா, கமிட்மென்ட், சண்டை, பிரேக்-அப்னு காதல் அதோட வேகத்தைக் குறைச்சுடும். அல்லது மொத்தமாவே நம்ம லட்சியத்துக்குச் சங்கு ஊதிட்டுப்போயிடும். அதனால் நாங்க வேலைக்குப் போகணும், நிறையச் சம்பாதிக்கணும். அதுவரை யாரும் எங்க கேட்டுக்குள்ளே வரக் கூடாது’’ என்று சஃபானா மிரட்ட, சாதுவாக ஆரம்பிக் கிறார் திவ்யஸ்ரீ.

“ஆதரவற்றவர்களுக்காக ஆசிரமம் ஆரம்பிக்கணும், ரெண்டு குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கணும்னு ரொம்ப நாளா எங்க அம்மாகிட்ட சொல்லிட்டிருக் கேன். ஆனா, அவங்க அதை சீரியஸாவே எடுத்துக்க மாட்டேங்குறாங்க. ஆனாலும், ‘இந்த வயசுல நமக்கு இப்படி ஓர் எண்ணம் வந்ததே நல்ல விஷயம்’னு எனக்கு நானே சொல்லிட்டிருக்கேன்’’ என்கிற திவ்யஸ்ரீயைக் கட்டியணைத்தபடி ஆரம்பிக்கிறார் ஆஷிகா.

“இந்த செல்போன், கம்ப்யூட்டர், சோஷியல் மீடியா, சொந்தபந்தம்னு எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு, ஃப்ரெண்ட்ஸ் கூட ஒரு டூர் போயிட்டு வரணும்னு எங்க வீட்டுல சொன்னா, ‘நீ என்ன ஸ்ட்ரெஸ்ஸை பார்த்துட்ட? என்ன கஷ்டத்தை அனுபவிச்சிட்ட? உனக்குத் தேவையானதையெல்லாம் வாங்கித் தர்றோம்ல, அப்புறம் என்ன?’னு பதறிப்போறாங்க. தேவையானதை யெல்லாம் கொடுத்து வளர்க்கிறதுக்கு நாங்க என்ன செல்லப் பிராணிகளா?’’ என்று ஆஷிகா சொல்ல, ‘`அட, அவ்வளவு ஏன்... பொண்ணுங்க நினைச்சதும் ஃப்ரீயா கிளம்பிப்போய் ஒரு பானிபூரிகூட சாப்பிட முடியலை ப்ரோ’’ என்று சோக ஸ்மைலி போடுகிறார் பூவிழி.

“எங்களைப் பார்த்துப் பார்த்து வளர்த்து ஆளாக்கற எங்க பெற்றோரை, பிற்காலத்தில் எங்களால் பார்த்துக்க முடியாதுங்கிற இந்தக் கல்யாண செட்-அப், எனக்குச் சுத்தமா பிடிக்கலை’’ - கூட்டத்துக்குள்ளிருந்து ஒலித்த ஸ்வர்ண தீபாவின் குரல், அனைவரையும் அவரை நோக்கித் திரும்ப வைத்தது. ``நாளைக்கு நான் நாலு காசு சம்பாதிக்கிற அளவுக்கு வளருவேன்னா, அதுக்கு என் அப்பா அம்மாதான் காரணமாயிருப்பாங்க. அதனால ஆண் பிள்ளை போலவே பெண்பிள்ளைக்கும் பெத்தவங்களைப் பார்த்துக்கிற பொறுப்பிருக்கு. இதுதான் என் கல்யாண கண்டிஷனா இருக்கும்’’ என்கிற ஸ்வர்ண தீபாவைத் தொடர்ந்து பேசுகிறார் யாழினி.

“ஆண்கள், அவங்களைவிட பத்து வயசு குறைந்த பெண்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாக்கூட பேசாம வேடிக்கைப் பார்க்கிற சமூகம், அதுவே ஓர் ஆண் தன்னைவிட ஒரு வயசு கூடின பெண்ணைக் கல்யாணம் செய்துகிட்டா தலைப்புச் செய்தியாக்கிடுது. அதுல என்ன தப்பு? சினிமாவில் மட்டும்தான் `டேய் தம்பி ரோஸ்மில்க் வாங்கித் தரேன்டா’னு டயலாக் வைப்பீங்களா?’’ என்று யாழினி தடாலடியாகக் கேள்வி கேட்க, கேம்பஸ்ஸே அதிர்கிறது சிரிப்பொலியால்!