தாய்ப்பால் என்பது, குழந்தைக்கும் தாய்க்குமான பந்தத்தை இறுகச்செய்யும் உயிர்ப்பால். ‘என் பையன் மூணு மணி நேரத்துக்கு ஒருதடவை முழிச்சுத் தாய்ப்பால் குடிச்சிடுவான்’, ‘என் பொண்ணுக்கு ஆரம்பத்துல தாய்ப்பால் கொடுக்கிறது ரொம்பப் போராட்டமா இருந்தது’ என்று பாலூட்டும் காலகட்டத்தின் கதைகள் அவர்களின் ஆயுளுக்கும் கூடவே வரும்.

இணையில்லாச் சத்துகளுடன் பரிசுத்தமான அன்பும் கலந்த அன்னையின் அந்த உதிரப்பாலை, விரும்பும் வடிவங்களில் நினைவுப் பொருள்களாக வார்த்து, வாழ்க்கை முழுக்கப் பாதுகாக்க முடியும், பார்த்துப் பார்த்துப் பரவசமாக முடியும் என்றால் ஆச்சர்யம்தானே!

அதைத்தான் செய்துவருகிறார், சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ப்ரீத்தி. தாய்ப்பாலைப் பதப்படுத்தி கிரியேட்டிவிட்டியுடன் அதில் அழகிய ஆபரணங்கள், உருவங் களைத் தாய்மைக்குரிய மரியாதையுடன் செய்து தருபவரைச் சந்தித்தோம்.

“எனக்குச் சிறுவயது முதலே நுண்கலைகளில் ஆர்வம். கிராஃப்ட் வகுப்புகள் எதற்கும் சென்றதில்லை. ஆனாலும் மெழுகு, களிமண் போன்றவற்றில் சின்னச் சின்ன உருவங்கள் செய்வது, ஹேண்ட்மேடு போட்டோஃபிரேம்கள் செய்வது என ஒவ்வொன்றாகச் செய்து பார்த்து, பிழைகளைத் திருத்தித் திருத்தியே கற்றுக் கொண்டேன். என் கைவினைப் பொருள்களின் விற்பனைக்காக முகநூலில் ஒரு பக்கம் ஆரம்பித்தேன். அங்கு கிடைத்த வாடிக்கையாளர்களின் பாராட்டுகளே என்னைப் புதிய முயற்சிகளுக்கு ஊக்குவித்தன. அப்படி ஒருவர் தந்த ஐடியாதான், இந்தத் தாய்ப்பால் ஆபரணங்கள்’’ என்கிறவர், இந்தக் கலை பற்றிய அறிமுகம் தந்தார்.

“தாய்ப்பாலில் ஆபரணங்கள், நினைவுப் பொருள்கள் செய்யும் பழக்கம் வெகுநாள்களாகவே பல நாடுகளில் இருந்து வருகிறது. அதுபற்றி இணையத்தில் பெற்ற குறிப்புகள் மூலம் நான் அவற்றைச் செய்ய முயன்றேன். ஆரம்ப காலத்தில் இதற்கான அச்சு இங்கு கிடைக்காததால், கணவர் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த போது, அங்கிருந்து எனக்காக வாங்கி வந்தார்’’ என்றவர், அந்தத் தொழில் நுட்பத்தையும் விளக்குகிறார்.

``தாய்ப்பால் சேகரிக்கப்பட்டபின் அது கெட்டுப்போகாமல் இருக்க, ப்ரிசர்வேட்டிவ் சேர்க்கப்படும். பின்னர் அச்சில் வார்த்து, கஸ்டமர்களுக்கு வடிவங்களாகக் கொடுப்போம். வடிவம், நிறம், மணம் அனைத்திலும் நேர்த்தியான ஃபார்முலாவைப் பெற, கிட்டத்தட்ட ஆறு மாத கால முயற்சி தேவைப்பட்டது’’ என்கிற ப்ரீத்தி, இப்போது ஸ்மைலி, இதயம், உள்ளங்கை, பாதங்கள் என வெவ்வேறு வடிவங்களில் தாய்ப்பால் நினைவுப் பொருள்களை உருவாக்குகிறார்.

ஒரு நினைவுப்பொருளுக்கு 15 மில்லி அளவு தாய்ப்பால் போதுமானது. வெளியூர், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் எனக்கு அதை `பேக்’ செய்து அனுப்பி வைப்பார்கள். பெண்டன்ட், கம்மல் என ஆபரணமாகவோ, கீ செயின் போன்ற நினைவுப் பொருள்களாகவே செய்து கொள்ளலாம்’’ என்கிறவர், இதற்கான கட்டணமாக ஆயிரம் ரூபாய் முதல் நான்காயிரம் ரூபாய் வரை பெறுகிறார்.

``இதுவரை 75-க்கும் அதிக வாடிக்கையாளர்களைச் சம்பாதித் திருக்கிறேன். தாய்ப்பால் நினைவுப் பொருளைத் தங்கள் கைகளில் பெறும் போது அந்த அம்மாக்களின் முகத்தில் தோன்றும் உணர்ச்சிகளை வார்த்தை களில் விவரிக்க முடியாது. `எவ்வளவு விலையுயர்ந்த நகைகள் அணிந்தாலும், இது தருவதுபோன்ற ஒரு சந்தோஷத்தை வேறெதிலும் உணர்ந்ததில்லை' என்று அவர்கள் சொல்லும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இப்படி இன்னும் பலருக்கு அந்த மகிழ்ச்சியைப் பரிசளிப்பதே நோக்கம்’’ என்கிறார் ப்ரீத்தி.

தாய்மை தாங்கிய பரிசு!