“மாநிறம் என்ற காரணத்தி னாலேயே நான் புறக்கணிக்கப்பட்ட சூழல்கள் நிறைய. பல் மருத்துவரான நான், `திறமைதான் வெற்றிக்குத் தேவை’ என்பதை நிரூபிக்க, நிறத்துக்கு முக்கியத் துவம் கொடுக்கும் மாடலிங் துறையிலும் களமிறங்கினேன். ‘மிஸஸ் கோயம்புத்தூர்’ பட்டம் மற்றும் ‘மிஸஸ் இந்தியா எர்த்’ போட்டியில் இரண்டாமிடம் வென்ற தோடு, அதில் மூன்று டைட்டில்களையும் வென்றேன். அடுத்ததா, ‘மிஸஸ் யுனிவர்ஸ்’ போட்டியில் கலந்துக்கவிருக்கேன்...’’

- உற்சாகமும் புன்னகையுமாகப் பேசுகிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த காயத்ரி நடராஜன்.

“என் பூர்வீகமான சேலத்தில் பள்ளிப் படிப்பை முடிச்சேன். நாலு வயதில் இருந்து பரதம் கத்துக்கிட்டேன். இருந்தாலும், பள்ளிக் கலை நிகழ்ச்சிகளில் என் நிறம் காரணமாகப் பின்வரிசையில் தான் நிற்கவைக்கப்படுவேன். திறமை இருந்தும், நாடகங்களில் முக்கியக் கதாபாத்திரங்கள் எனக்குக் கிடைக்காமல் போகும். 16 வயதில் பரதநாட்டிய அரங்கேற்றம் செய்தப்போ, எனக்கு ஒரு தன்னம்பிக்கை கிடைச்சது. `பிடிஎஸ்’ மருத்துவப் படிப்பில் சேர்ந்தாலும், தொடர்ந்து நிறைய நடன நிகழ்ச்சிகளில் பல காஸ்ட்யூம்களில் ஆடினேன். ஒரு கட்டத்தில், மாடலிங் துறையில் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். ஆனால், ஒரு மாடலிங் நிகழ்ச்சியில் என் நிறத்தைச் சுட்டிக்காட்டி அதில் என்னைப் பங்கேற்கவே அனுமதிக்கலை. ‘இந்த நிறமுள்ள உனக்கெல்லாம் மாடலிங் ஆசையா’னு பலர் கேலி செய்தாங்க. இதுபோன்ற பல சூழல்கள்தான் `கறுப்பு என்பது அழகு, சிவப்பு என்பது திறமை யல்ல’னு நிரூபிக்கும் வைராக்கியத்தை எனக்குள் ஏற்படுத்தின.

கோல்டு மெடலுடன் பல் மருத்துவப் படிப்பை முடித்த கையோடு, மாடலிங் உலகில் விடாது முயன்றேன். என் உயரம் எனக்கு ப்ளஸ்ஸாக அமைய, உடலை ஃபிட்டாக்கினேன். பல விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. 2015-ல் சென்னையில் நடந்த ‘சாரி பியூட்டி குயின்’ நிகழ்ச்சியில் டைட்டில் வென்றேன்’’ என்கிறவர், மாடலிங், மருத்துவப்பணியோடு, இந்தியா முழுக்க 400-க்கும் அதிகமான மேடைகளில் பரதநாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியதோடு, தொலைக்காட்சி சேனல் களில் மார்கழி கலைநிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருக்கிறார். நீச்சல் போட்டிகளில் தேசிய அளவில் பல தங்கப்பதக்கங்களை வென்றிருக்கும் காயத்ரி, ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை கர்னாடக சங்கீத நிகழ்ச்சிகளிலும் பாடிவருகிறார்.

“சென்னையில் பல் மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கி, திருமணத்துக்குப் பின் கோயம்புத்தூருக்குச் சென்றேன். இப்போ கோவை, அப்போலோ பல் மருத்துவத் துறையில் பிராஞ்ச் ஹெட்டாயிருக்கேன். பிரிட்டிஷ் ஏர்வேஸில் வேலைபார்க்கும் என் காதல் கணவர் ராம்குமார்தான் என் பெரிய பலம். திருமதிகளுக்கான அழகிப் போட்டிகளுக்கு எனக்கே தெரியாம என் பெயரைப் பதிவுசெய்துட்டு, ‘ஆல் தி பெஸ்ட் டார்லிங்’னு சிரிப்பார். இந்த வருடம் ‘மிஸஸ் கோயம்புத்தூர்’ போட்டியில் நான் கலந்துகிட்டு டைட்டில் வாங்கினதும் அப்படித்தான். மருத்துவத் துறையிலிருந்தும், திருமணத் துக்குப் பிறகும் நான் தொடர்ந்து மாடலிங் துறையிலும் செயலாற்ற முடிவெடுக்கக் காரணம், மாநிறப் பெண்களுக்கான தன்னம்பிக் கையை ஏற்படுத்தவே!’’ என்பவர் புற்றுநோயால் தன் அம்மா இறந்ததைத் தொடர்ந்து, டாக்டர் சாந்தாவின் வழிகாட்டலின்படி புற்றுநோயாளிகளின் நல்வாழ்வுக்கான தன்னார்வலராகவும் செயல்படுகிறார்.

“‘மிஸஸ் இந்தியா’ போட்டியில் வெளிநாடுவாழ் இந்தியப் பெண்கள் உள்பட 50-க்கும் அதிகமான பெண்கள் கலந்துகிட்டோம். பளீர் நிறத்திலிருந்த சக போட்டியாளர்கள் என் தோற்றத்தைப் பார்த்ததுமே, ‘நீங்க மதராஸியா’னு கேட்டாங்க. அருகிலிருந்த என் கணவர், ‘வீ ஆர் இண்டியன்ஸ்’னு பதில் சொன் னார். ‘இந்தியப் பெண்களின் நிறம் இதுதான்’னு நான் கம்பீரமா சொன்னேன்.

‘நீங்க வெற்றிபெற்றால் இந்தச் சமுதாயத்துக்குப் பயனுள்ள வகையில் எப்படிச் செயல்படுவீங்க?’னு கேட்கப் பட்ட கேள்விக்கு, நான் நேரடியா பாதிக்கப்பட்ட விஷயங்களைக் குறிப் பிட்டுப் பேசினேன். ‘கேன்சரால் பாதிக்கப்பட்டவங்களையும், நிறப் பாகு பாட்டால் பாதிக்கப்பட்டவங்களை யும் சூழ்ந்துள்ள தாழ்வுமனப்பான்மை யைத் தகர்க்கும் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுப்பேன்’னு சொன்னேன். ‘மாநிறம்கொண்ட பெண்கள் மாடலிங் துறையில் வெற்றி பெற என்னாலான உதவிகளைச் செய்வேன்’னு சொன்னதும் பலத்த கைத்தட்டல் கிடைச்சது. அப்போ நான் உடுத்தியிருந்த மயிலிறகு உடைக்கு ‘பெஸ்ட் காஸ்ட்யூம்’ விருது கிடைச்சது’’ என்கிற காயத்ரி, அடுத்த ஆண்டு லண்டனில் நடக்கவிருக்கும் திருமதி களுக்கான உலக அழகிப் போட்டியில் (Mrs Universe) கலந்துகொள்ளத் தேர்வாகி யிருக்கிறார்.

“ ‘மிஸஸ் இந்தியா’ போட்டியில் இரண்டாமிடம் வென்றதால், புற்றுநோய் விழிப்பு உணர்வு புராஜெக்ட் மற்றும் ‘டார்க் இஸ் பியூட்டிஃபுல்’ புராஜெக்ட்டு களில் கவனம் செலுத்திட்டிருக்கேன்’’ என்பவர், ‘`எந்த விஷயத்திலும் உங்களுக்கு ஏற்படுற ஒரு நியாயமான கோபத்தைச் சமூகத்தை கவனிக்கவைக்கிற மாதிரி சொல்லணும்னா, அதே விஷயத்தில் போராடி நீங்க வெற்றிபெற்று, அந்த நிலைக்கு வந்தபின் சொல்லும்போது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும். அப்படித்தான் இன்னிக்கு நான் சொல்றேன், `டார்க் இஸ் பியூட்டிஃபுல்.' நாளைக்கு நாம் எல்லோரும் இதை இன்னும் உரக்கச் சொல்லும்போது, சமூகம் உணர்ந்து சல்யூட் வைக்கும்!”

- உறுதியும் உத்வேகமுமாகச் சொல்கிறார் காயத்ரி!