அவள் 20 சிறப்புப் பகுதி - என் குடும்பம் என் இதயம்

சினிமா, டி.வி, அரசியல், எழுத்து ஆகிய துறைகளில் ஜொலிக்கும் திறமையாளர்களின் குடும்பங்களைச் சந்தியுங்கள்!

கார்ட்டூன், கலாட்டூன், ஓவியங் கள் என நம் மனங்களைக் கொள்ளை கொள்ளும் ஓவியர் ஹாசிப்கான், ஆனந்த விகடனின் கார்டூனிஸ்ட். சமூக அவலங் களைக் கண்முன் நிறுத்தும் அவர் ஓவியங்களுக்கு ரசிகர்கள் ஏராளம்.

அவரின் மனைவி ஷீபா நம்மிடம் பேசும்போது, ``நான் திருவனந்தபுரம் பொண்ணு. அவர் கன்னியாகுமரி இரவிப்புதூர்கடை. எங்களுக்கு அரேஞ்சுடு மேரேஜ்தான். அவரைப்பத்தி அதிகம் கேள்விப்பட்டதில்லை. அனிமேஷன் ஃபீல்டுல இருக்கார்னு மட்டும் தெரியும். என்ன மாதிரி ஒர்க்னு தெரிஞ்சுக்க ஆர்வமாயிருக்கும். எப்படி தெரிஞ்சுக்குறது, யார்கிட்ட கேட்குறதுனு குழப்பத்துல இருந்தேன். பொண்ணு பார்த்துட்டுப் போனதும் எங்க வீட்டு நம்பருக்கு போன் பண்ணிப் பேசுவார். நான், `வீட்டுல அம்மா இல்லை’னு சொல்லிட்டு கட் பண்ணப் பார்த்தேன். `கட் பண்ணிராதே... நான் உங்கிட்டதான் பேசணும்’னு சொல்லி அடிக்கடி போன் பேசுவார். ஒவ்வொரு வாட்டியும் நான் பேசத் தயங்குவேன். பாவம், அவரே எங்கிட்ட பல்பு வாங்கிட்டும் பொறுமையா பேசிக்கிட்டு இருப்பார். நான் ‘உம்’ மட்டும் கொட்டுவேன். இப்ப நினைச்சா சிரிப்பா இருக்கு. கல்யாணத்துக்குப் பிறகு வீட்டுல எடுக்குற முடிவுகள்லாம் ரெண்டு பேரும் சேர்ந்து எடுக்குறதுதான்’’ என்று கணவரைப் பெருமிதமாகப் பார்க்கிறார் ஷீபா.

``நாலாவது படிக்கிற ரிஸாஃப், யூகேஜி படிக்கிற ரிஃபாஸ்னு ரெண்டு பசங்க. எல்லா தம்பதியர் போல எங்களுக்குள்ள சின்னச் சின்ன சண்டைகள் வரும். அப்பல்லாம் நடுசாமத்துல எந்திரிச்சு உட்கார்ந்து படம் வரைய ஆரம்பிச்சுரு வேன். காலையில நான் என்ன வரைஞ் சிருக்கேன்னு எனக்குத் தெரியாம பார்க்குறதா நினைச்சு பார்ப்பாங்க. நான் பார்க்குறதைப்பார்த்ததும் வெட்கப் பட்டு சிரிப்பாங்க. அந்த வெட்கச் சிரிப்பு அழகாயிருக்கும். சண்டை அதோட முடிஞ்சிரும். நிறைய மலையாள புக்ஸ் படிப்பாங்க. மலையாளத்துல நல்லா எழுதுவாங்க. விகடனின் `டாப் 10 மனிதர்கள்’ விருது கிடைச்சிருக்குனு சொன்னப்பகூட `ஓ’னு சின்னதா ரியாக் ஷன் மட்டும் கொடுத்தாங்க. இன்னும் பெரிய விருதுகள் வாங்குவேன்னு எதிர் பார்க்குறாங்க போல!’’ - அதிர்ந்து சிரிக் கிறார் ஹாசிப்.