அவள் 20 சிறப்புப் பகுதி - என் குடும்பம் என் இதயம்

சினிமா, டி.வி, அரசியல், எழுத்து ஆகிய துறைகளில் ஜொலிக்கும் திறமையாளர்களின் குடும்பங்களைச் சந்தியுங்கள்!

தி.மு.க-வின் முக்கியத் தலைவர் களாக வலம்வந்த அன்பில் தர்மலிங்கம், அன்பில் பொய்யாமொழி வரிசையில் இப்போது அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அரசியலில் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த இவர், தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலினின் நிழலாக வலம்வருபவர். தி.மு.க-வின் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர்; திருவெறும்பூர் தொகுதியின் இளம் சட்டமன்ற உறுப்பினர். எப்போதும் பரபரப்புடன் வலம்வரும் அன்பில் மகேஷ் பொய்யாமொழியைச் சந்தித்தோம்.

`‘தாத்தா அமைச்சர், அடுத்து அப்பா, சித்தப்பா எம்.எல்.ஏக்கள் என அரசியலை மையப்படுத்திய குடும்பம் எங்களுடையது என்பதால், வீட்டில் எப்போதும் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது. 1996-ல் ஒடிசாவில் பெரும்வெள்ளம் ஏற்பட்ட போது, மாணவனாக இருந்த நான்,
36 ஆயிரம் ரூபாயை அப்போதைய முதல்வர் கலைஞரிடம் எங்கள் கல்லூரி சார்பாகக் கொடுத்தேன். அதை வாங்கிய கலைஞர் எங்களைப் பாராட்டியபோது எனக்குள் ஓர் உத்வேகம் உண்டானது.

ஓய்வுநேரங்களில் தளபதி ஸ்டாலின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை நண்பர் களுடன் சென்று கவனித்துவருவேன். அங்கு என்னைக் கவனிக்கும் அவர், அன்று இரவே எனக்கு போன் செய்து விசாரித்துவிட்டு, `உனக்கு அரசியல் வேண்டாம், நல்ல வேலைக்குச் செல்’ என்பார். நானும் வேலையில் சேர்ந்தேன். ஆனாலும், என் அரசியல் ஆர்வமே என்னை முழுமையாக இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது. என் மனைவி ஜனனியின் குடும்பச் சூழல் முற்றிலும் வேறானது’’ என்று மனைவியை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் மகேஷ்.

``ஆரம்பத்தில் கட்சி, அரசியல் சார்பில் இருந்த சூழல் எனக்கு வியப்பையும் தடுமாற்றத்தையும் தந்தது. அவர் அடிக்கடி கட்சி, கூட்டம் என்று கிளம்பி விடுவார் என்பதால் சண்டை போட்டிருக் கிறேன். ஆனா, இப்போ பழகிடுச்சு. அவருக்கு அரசியல் பிடிக்கும். எனக்கு அவரைப் பிடிக்கும். சில நேரங்கள்ல நான் அவரை புரிஞ்சுக்க முடியாம தடுமாறும்போதெல்லாம் என்னை தாங்கிப்பிடித்தவர் என் மாமியார்தான். தங்கமான மனுஷி” எனப் பூரிப்போடு சொல்லும் ஜனனியை அன்போடு அணைத்துக்கொள்கிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.