அவள் 20 சிறப்புப் பகுதி - என் குடும்பம் என் இதயம்

சினிமா, டி.வி, அரசியல், எழுத்து ஆகிய துறைகளில் ஜொலிக்கும் திறமையாளர்களின் குடும்பங்களைச் சந்தியுங்கள்!

அரசியல் ஈடுபாடு காரணமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்து, அதில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, இப்போது தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் பிரிவு மாநிலத் தலைவராக இருப்பவர் யுவராஜ்.

“அரசியலையும் குடும்பத்தையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது கொஞ்சம் சிரமமான காரியம்தான். குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதில் என் மனைவி யின் பங்கு மிக அதிகம். எங்களுக்கு இரண்டு மகன்கள். பெரியவன் ஏழாம் வகுப்பும் இளையவன் மூன்றாம் வகுப்பும் படிக்கிறார்கள். பள்ளிகளில் நடக்கும் விழாக்களுக்கோ, பெற்றோர் - ஆசிரியர் சந்திப்புக்கோ என்னால் போக முடியாத நேரங்களில், மனைவி என்மேல் கோபப்படுவதும் உண்டு. எனக்கும் அது கவலையாகத்தான் இருக்கும். பள்ளிக்கூட நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் என் மனைவி மட்டுமே சென்று வருவார்.

மருத்துவமனைக்கோ, விசேஷங் களுக்கோகூட மனைவி அழைக்கும்போது, என்னால் போக முடியாமல் போய்விடும். இதனால், எங்கள் இருவருக்கும் அவ்வப் போது சண்டை ஏற்படுவதும் உண்டு. அரசியல் வாழ்க்கையால் குடும்பத்துடன் இருக்க முடிவதில்லை என்கிற ஏக்கம் இருந்தாலும், அரசியல் மூலம் பலருக்கு உதவ முடிவதால் இரண்டும் பேலன்ஸ் ஆகி விடுகிறது. ‘பிறருக்கு உதவி செய்தால், நம் குடும்பம் எப்போதும் சந்தோஷமாக இருக்கும்’ என்கிற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. இனிவரும் காலங் களில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும்” என்று தன் மனைவி சித்ராலக்ஷ்மி குறித்துப் பேசிக்கொண்டே போகிறார் யுவராஜ்.

``அவரால எங்ககூட போதிய நேரம் செலவிட முடியாதுனு நல்லாவே தெரியும். அதனால அவருக்கு எப்ப நேரம் கிடைக்குதோ, அப்ப குடும்பத்தோடு எங்காவது வெளியூர் அல்லது வெளிநாடு களுக்கு டூர் சென்று விடுவோம். அப்படித் தான், ஒரு திருமண நாளையொட்டி அவருக்குச் சொல்லாமலேயே மாலத் தீவுக்கு டிக்கெட் புக் செய்து அவரை அழைச்சுட்டுப் போனோம். அவர்கூட வெளியே போகிற நேரங்கள்ல முதல் வேலையா அவருடைய செல்போனை வாங்கி ஸ்விட்ச் ஆஃப் செஞ்சுடுவேன். நம்மோட சந்தோஷத்தை நாமதானே தேடிக்கணும்’’ எனும்போது குறும்புச் சிரிப்பு சித்ராவின் முகத்தில்!