அழகிப் போட்டி முதல் ஞானபீட விருது வரை... இந்த இரண்டு வார காலத்தில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவை என்ன? அறிவோம்... ஆக்க பூர்வமாகச் செயல்படுவோம் !

உலக அழகி... உள்ளமும் அழகு!

இந்த ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை வென்றிருக்கிறார், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி மனுஷி சில்லர். உலக அழகிப் போட்டியின் இறுதிச்சுற்றில் மனுஷியிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கான அவரது விடையும் இதோ...

“உலகில் எந்தப் பணிக்கு மிக அதிகமான சம்பளம் தர வேண்டும்... ஏன்?”

“ஒரு தாய்க்குதான் மிக அதிக மரியாதை தேவை. சம்பளம் என்பதைப் பணமாகப் பார்க்காமல், அன்பும் மரியாதையும் கொண்டே அளவிட வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். என் அம்மாதான் எனக்கு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன். எல்லா அம்மாக்களும் தங்கள் குழந்தைகளுக்காக நிறைய தியாகங்களைச் செய்கிறார்கள். அதிக சம்பளம், மதிப்பு, அன்பு - இவை கிடைக்க வேண்டிய பணி - ஒரு தாயின் பணி.”

சோனிபட்டின் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றுவரும் மனுஷி, சிறந்த குச்சுப்புடி டான்சரும்கூட. `புரொஜக்ட் சக்தி' என்ற திட்டம் மூலம், இருபது கிராமங்களைச் சேர்ந்த ஐயாயிரம் பெண்களுக்கு மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்பு உணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறார்.

உலக அழகின்னா சும்மாவா!

குழந்தைக் காவலர் த்ரிஷா!

ஐக்கிய நாடுகள் சபையின் யூனி செஃப் குழந்தைகள் நல அமைப்பு, நடிகை த்ரிஷாவை செலிப்ரிடி அட்வகேட்டாக நியமித்துள்ளது. இந்தப் பெருமையைப் பெறும் முதல் தென்னிந்திய நடிகை இவரே. சென்னையில் யூனிசெஃப்பின் உலகக் குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட த்ரிஷா, தமிழகம் மற்றும் கேரளாவில் குழந்தைகள் ஆரோக்கியம், கல்வி, ஊட்டச்சத்து, பாதுகாப்பு போன்றவற்றில் பொது மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற் படுத்துவதே தன் நோக்கம் என்றிருக்கிறார்.

18 வயது வரை பெண் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பது, குழந்தை திருமணத்தையும் குழந்தைத் தொழிலாளர்கள் உருவா வதையும் தடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். `சினிமா என்பது வெறும் ஃபேன்டஸி' என்றவர், `அதை சீரியசாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை' என்றும் சொல்லியிருக்கிறார்.

விண்ணைத்தாண்டி வந்தவர்!

டெடிகேஷன் லெவெல்: 200%

பதின்மூன்று வயதிலேயே பானிபூரி மற்றும் ஐஸ்க்ரீம் கனவுகளைத் தொலைத்தவர், பாடகி ஆஷா போஸ்லே. இப்போது 84 வயதாகும் ஆஷா, சமீபத்தில் துபாயில் நிகழ்த்திய உரையில், “1947-ல் இந்திப் பாடல்கள் பாடத்தொடங்கிய பிறகு, `இதுதான் என் பணி, என் வாழ்க்கை’ என்று உணர்ந்தேன்.

சில நேரங்களில் பாடி முடித்ததும், பானிபூரியும் ஐஸ்க்ரீமும் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவேன். ஆனால், அவை இரண்டும் என் குரலுக்குக் கேடு. எனவே, 13 வயது முதல் அவற்றைத் தொட்டதே இல்லை” என்று கூறியிருக்கிறார். தமிழில் `செண்பகமே செண்பகமே' முதல் `ஹே ராம்’ படத்தின் `நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ வரை இந்த இசைக்குயிலின் குரல் ஒரே சீராகப் பயணித்திருக்கிறது - ஐஸ்க்ரீம் கனவுகளோடு!

யப்பா… நம்மால முடியாதேய்!

சியாட்டிலில் சாதிக்கும் சென்னைப் பெண்!

அமெரிக்காவின் சியாட்டில் நகரின் துணை மேயர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார், 38 வயதான சென்னைப் பெண் ஷெஃபாலி ரங்கநாதன். சென்னை சர்ச் பார்க் பள்ளி மற்றும் ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பயின்ற ஷெஃபாலி, சுற்றுச்சூழல் அறிவியல் படிப்பில் அண்ணா பல்கலைக்கழகத்தின் தங்கப்பதக்கமும் வென்றிருக்கிறார். 2001-ம் ஆண்டு மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்றவர் படிப்பை முடிக்கும் முன்னரே, சுற்றுச்சூழல்மீதான இவரது ஆர்வம், வாஷிங்டன் அரசு அலுவலகத்தில் பணிக்கு அமர்த்தியது. இப்போது, சுற்றுச்சூழல் மாசுபடாத வண்ணம் சியாட்டில் நகரில் சைக்கிள் மற்றும் கால்நடையாகச் செல்பவர்களுக்கு என ‘டிரான்ஸ்போர்ட்டேஷன் சாய்சஸ் கோயலிஷன்’ என்ற தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார். படகு ஓட்டுவதிலும் கைதேர்ந்தவர் இவர் என்கிறார், இவர் தந்தையான பிரதீப் ரங்கநாதன்.

கலக்குங்க... துணை மேயரம்மா!

பதறவைக்கும் பட்டியல்

அண்மையில் உலகெங்கும் பெண்கள் `#MeToo’ என்ற ஹேஷ்டேகை உபயோகித்து, தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வலியைப் பதிந்துவந்தனர். 24 வயதான ராய சர்க்கார் (Raya Sarkar) அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று கொண்டிருக்கிறார். இந்தியாவின் முக்கியமான கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற அத்துமீறல்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவர விரும்பிய ராய சர்க்கார், தன் முகநூல் பக்கத்தில் 72 கல்வித்துறையாளர்களின் பெயர்கள் கொண்ட பட்டியல் ஒன்றை வெளியிட்டார்.

மாணவிகள் பலர் தங்கள்மீது பாலியல் அத்துமீறல் மேற்கொண்ட பேராசிரியர்களின் பெயர்களை ராயவிடம் பகிர, அவற்றை அம்பலப்படுத்தியுள்ளார் ராய சர்க்கார்.

`ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ மாதிரியே திகிலால்ல இருக்கு, ராய சர்க்கார் லிஸ்ட்?!

``பார்வையை மாற்றிக்கொள்ளுங்கள்!’’

சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் நடிகை வித்யா பாலனிடம் ஆண் நிருபர் ஒருவர் கேட்ட கேள்வி - “நீங்கள் பெண்களை மையப்படுத்தும் படங்களில் அதிகம் நடிக்கிறீர்களே, எடையைச் சிறிது குறைக்கப் போகிறீர்களா?”

ஒரு நொடி இந்தக் கேள்விக்கு அதிர்ந்த வித்யா, அடுத்த நொடியே சுதாரித்துக்கொண்டு, “பெண்களை மையப்படுத்தும் படங்களுக்கும் என் உடல் எடைக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்க, “கிளாமர் வேடங்களில் இனி நடிப்பீர்களா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டிருக்கிறார் நிருபர். “நான் இப்படி இருப்பதையும், இதுபோன்ற படங்களில் நடிப்பதையுமே விரும்புகிறேன். உங்களைப் போன்றவர்களின் பார்வை மாறினால் நன்றாக இருக்கும்!” என்று பதிலடி தந்திருக்கிறார் வித்யா.

முன்னர் நடிகை நித்யா மேனனும் இதுபோன்ற கேள்விக்கு, தன் உடலைக் குறித்த எந்த விமர்சனத்துக்கும் பதில் தரப்போவதில்லை என்றும், நடிப்பு குறித்த கருத்துகளை மட்டுமே வரவேற்பதாகவும் கூறியிருக்கிறார். `மெர்சல்’ படத்தில் பப்ளியாக உள்ளங்களைக் கொள்ளை கொண்டிருக்கிறார் நித்யா.

நீங்க கலக்குங்க அம்மணிகளா!

இவர் வழி... தனி வழி!

1980-ல் பெற்ற சாகித்ய அகாடமி விருதை 2015 தாத்ரி படுகொலைக்கு எதிராகத் திருப்பித் தந்தது, 2010-ல் பத்மபூஷண் விருதை மறுத்தது என தன் எழுத்துக்குக் கிடைத்த பெருமைகளை இதுவரை சட்டை செய்யாத எழுத்தாளர் கிருஷ்ண சோப்தி, ஒரு வழியாக, 2017-ல் இலக்கியத்தின் மிக உயர்ந்த விருதான ஞானபீட விருதைப் பெற்றுக்கொள்ளப்போகிறார்.

1944 முதல் வெளியிடப்பட்டு வருகின்றன அவர் படைப்புகள். 92 வயது இளைஞி கிருஷ்ண சோப்தி, பன்மொழி வித்தகி. ஹிந்தி, உருது, பஞ்சாபி, ராஜஸ்தானி என்று பல மொழிகளில் எழுதிக் குவித்திருக்கிறார். இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையை மையப்படுத்தி இவர் எழுதி இருக்கும் `சிக்கா பதல் கயா’ என்ற சிறுகதை, `ஜிந்தகிநாமா’, `தர் சே பிச்சூடி’ போன்ற நாவல்கள் காலத்தால் அழியாதவை. இருபது ஆண்டுகளுக்கு முன், 70-வது வயதில், தோகிரி மொழி எழுத்தாளர் சிவநாத்தை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் சோப்தி.

தி ரிபெல்!

`ஷீ பாக்ஸ்’ - பணியிடப் பாதுகாப்புப் பெட்டி!

உலகம் முழுதும் சமூக ஊடகங்களில் பெண்கள் `மீ டூ’ என்ற ஹேஷ்டேக் மூலம் பாலியல் சீண்டலுக்கு ஆளான தகவலை வெளியிட்டு வந்தது சமீபத்தில் வைரல் ஆனது. இதை முன்னிறுத்தி மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம், பணியிடங்களில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் பெண்களின் பாதுகாப்புக்கென `ஷீ பாக்ஸ்’ என்ற தகவு (போர்ட்டல்) மூலம் புகார் அளிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் அலுவலக முகவரி, குறித்த தகவலை இதில் பதிந்துகொண்டால், உள்ளூர் புகார் கமிட்டிக்கு புகார் அனுப்பப்பட்டு, குறித்த நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். www.shebox.nic.in என்ற இந்த போர்ட்டல், மகளிர் பணியிடப் பாதுகாப்பை அரசாங்கமே உறுதி செய்யும் உலகின் முதல் முயற்சி என்றிருக்கிறார் அமைச்சர் மேனகா காந்தி.

ஷீ பாக்ஸ் = ஷீ ராக்ஸ்!