பழக்கவழக்கங்கள் முதல் பருவமடைதல் வரை பெண் குழந்தை களுக்குப் பல விஷயங்களையும் கற்றுக் கொடுக்கும் இந்தச் சமூகம், ஆண் குழந்தைகளுக்கு ‘ஆம்பளப் புள்ள நல்லா சாப்பிடணும்’ என்பதைத் தாண்டி பெரிதாக எந்த அறிவுரையும் வழங்குவ தில்லை. ஆனால், ஆண் குழந்தைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்கக்கூடிய விஷயங்கள் ஏராளம் உள்ளன. அதற்காகவே இந்தத் தொடர்.

ஆண் குழந்தை வளர்ப்பு பற்றி ஏன் முக்கியத்துவம் கொடுத்துப் பேச வேண்டும்?

கரூரைச் சேர்ந்த குழந்தைகள் நலச் சிறப்பு மருத்துவர் ராதிகா, “குழந்தை வளர்ப்பில் ஆண் பெண் என இருபாலினக் குழந்தைகளுக்கும் சமமான கவனிப்பு கொடுக்கப்பட வேண்டும். அவர்களின் வளர்ச்சியை பாடி ஹெல்த், மென்ட்டல் ஹெல்த், செக்ஸுவல் ஹெல்த், பிஹேவியரல் ஹெல்த் என்று நான்கு வகைகளாகப் பிரித்து அணுக வேண்டும். இந்த நான்கு அம்சங்களுடன் பெண் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர், அதே அக்கறையோடு ஆண் குழந்தைகளை வளர்ப்பதில்லை.

பெண் குழந்தைகளுக்கு ஒழுக்க நெறிகளைக் கற்றுக்கொடுக்கும் சமூகம், அவற்றை ஆண் பிள்ளைகளுக்குச் செய்வதில்லை. பருவ வயதுப் பெண் களுக்கு, பத்திரமா போயிட்டு வரணும் என்று எச்சரிக்கை செய்யும் குடும்ப அமைப்பு, பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது, பெண்களை சக மனுஷியாக மதித்து நடக்க வேண்டும் என்பன போன்ற வலியுறுத்தல்களை ஆண் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்வதில்லை.

பெண் குழந்தைகளுக்கு `குட் டச்’, `பேட் டச்’ பற்றி எடுத்துரைக்கும் பெற்றோர்கள், அது ஆண் குழந்தை களுக்கும்அவசியம் என்பதை உணர்த்துவதில்லை. பெண் குழந்தை களைப் பருவ வயதுக்குத் தயார்படுத்தும் குடும்பங்கள், ஆண் குழந்தைகளை அவர்களின் பருவ வயதுக்குத் தயார் படுத்துவதில்லை.

அவர்கள் பருவமடையும்போது சரியான வழிகாட்டுதல் இல்லாவிட்டால், படிப்பில் அக்கறையின்மை முதல் போதைப் பொருள்கள் பயன்படுத்துதல் வரை பல தீய பழக்கங்களுக்கு அடிமையாகும் வாய்ப்புள்ளது. மேலும், சம வயதுடைய நண்பர்களுடன் சேர்ந்து பேசும்போது கிடைக்கும் தவறான வழிகாட்டல்கள், ஆன்லைன் பயன் படுத்துவதனால் ஏற்படும் ஆபத்துகளும் அவர்களைச் சூழ்ந்துள்ளன. அவர் களுக்கான முறையான பாலியல் கல்வி யைப் பெற்றோர் எங்கிருந்து, எப்படித் தொடங்குவது என்பதும் விளங்காத புதிராகவே உள்ளது.

ஆக, ஆண் குழந்தை வளர்ப்பில் பெற்றோர் நிறைய அறிந்துகொள்ளவும், பேசவும், விவாதிக்கவும் வேண்டியுள்ளது” என்கிறார் டாக்டர் ராதிகா.

ஆகவே, ஆண் குழந்தைகளை வளர்த்தெடுத்துக்கொண்டிருக்கும் அனைத்துக் குடும்பங்களுக்கும், இந்தத் தொடர் ஒரு தோழமைக்கரமாக உதவும். அக்கறைமிக்க வழிகாட்டியாக உங்கள் சந்தேகங்களுக்குப் பதிலளிக்கும். குழந்தைகள் சிறப்பு மருத்துவர்கள், உளவியல் மருத்துவர்கள், திறன் மேம்பாட்டுப் பயிற்சியாளர்கள், குழந்தை வளர்ப்பு ஆலோசகர்கள், இவர்களுடன் ஆண் குழந்தைகளின் பெற்றோர்களும் தங்களின் அனுபவங்களை இத்தொடரில் ஆலோசனைகளாக வழங்க உள்ளனர்.

இருபால் மனிதர்களின் வாழ்வை உன்னதமாக்கும் ஓர் இனிய மாற்றத்துக்குத் தயாராவோம்!

``என் பசங்களை கிச்சன் வேலைகளைச் செய்யப் பழக்கப்படுத்துறேன்!”

சேலத்தைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ரம்யா, பரத் (12 வயது), புகழ் (10 வயது) என இரண்டு ஆண் குழந்தைகளின் அம்மா. தன் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். “ரெண்டு ஆண் குழந்தைகளோட அம்மாவா எனக்கான பொறுப்புகளை உணர்றேன். ஒரு தவறு நடக்கும்போது, ‘பையனைச் சரியா வளர்த்திருக்கணும்’னு சொல்ற குற்றச்சாட்டுக்கு நான் ஆளாகாம இருக்கணும்னு நினைக்கிறேன். கெட்ட வார்த்தைகள் பேசுறது எவ்வளவு அநாகரிகம்னு அவங்களுக்கு சொல்லித் தரேன்.

உடல் உறுப்புகள் பற்றிய விஷயங்களை அவங்க வயசுக்குத் தகுந்தவிதத்தில் சொல்லிக் கொடுக்கிறேன். இதையெல்லாம் அறிவியல் ஆசிரியர்தான் சொல்லணும்னு இல்லை, அம்மாவும் சொல்லிக் கொடுக்கலாம்.

என் பசங்களை கிச்சன் வேலைகளைச் செய்யப் பழக்கப்படுத்துறேன். அம்மா, அக்கா, அத்தைனு தன் வீட்டுப் பெண்களின் வேலை களைப் பகிர்ந்துக்கிட்டு வளரும் ஆண் பிள்ளைங்க, அவங்களோட சிரமங்களையெல்லாம் பக்கத்துலயிருந்து பார்த்து, நாளைக்குத் தன்னோட மனைவி, மகளையும் அப்படியே புரிஞ்சு நடந்துப்பாங்க. ஆண் குழந்தைகளுக்கு முதல் ரோல் மாடல் அம்மாதான்” என்கிறார் ரம்யா.