நல்லா வசதியான குடும்பத் தைச் சேர்ந்தவ. அவங்க அப்பங்காரன் ராமலிங்கம் பெரிய ஜமீனு. அம்மாக்காரி பேரு இந்துராணி. ஒத்தை அண்ணன். இவ `நல்லா'ன்னா, அவன் `நல்லான்'. ஊருக்காட்டு விவசாயத்துல பெரும்பங்கு, மூட்டை மூட்டையாக வீட்டுக்கு வந்திரும். வெள்ளித்தட்டுல வெஞ்சனம் வெச்சு, தங்கத்தட்டுல சாப்பாடு சாப்பிடுற அளவுக்கு வளம்னா வளம். அண்ணங் காரனுக்கு தங்கச்சிமேல அம்புட்டுப் பிரியம். தங்கை கேட்டா வானத்தையே வளைச்சுக் குடுத்திடுவான். வத்திராயிருப்பு பக்கத்துல இருக்கிற அர்ச்சுனாபுரத்துல நாலு தெரு மரிச்ச பெரிய அரண்மனை.

ராஜா வூட்டுப் பொண்ணுங்கிறதால ஊருல தேவதையா திரிவா நல்லா. எல்லாரும் அவங்க வீட்டுப் பிள்ளையாவே அள்ளி,அரவணைச்சுக் கொண்டாடு வாங்க. அம்மாயும், அப்பனும் நல்லா வைத் தெய்வப் பொறப்பாவே பாவிச்சு வளர்த்தாங்க.

நல்லாவுக்கு ஆறு வயசானப்போ அம்மாவும் அப்பாவும் அடுத்தடுத்துச் செத்துப்போனாங்க. கலங்கி நின்ன நல்லாவை, அம்மைக்கு அம்மையா, அப்பனுக்கு அப்பனாயிருந்து பார்த்துக் கிட்டான் நல்லான்.

`மக்க மனுஷங்க நல்லவுகளா? தங்கச்சிய தங்கமா பார்த்துக்குவாங் களா?'ன்னு எல்லாத் தையும் கேட்டு விசாரிச்சு ஒரு மாப்பிள்ளையைப் புடிச்சான் நல்லான். மானா மதுரை ராஜா, காசிராசன்தான் அந்த மாப்பிள்ளை.

கல்யாணம் கோலாகலமா நடந்துச்சு. கொஞ்சமில்லே, நஞ்சமில்லே... தங்கமா, வெள்ளியா, வைரமா, வைடூரியமா சீதனத்தை அள்ளிக் கொடுத்தான் நல்லான். வேலி நெறைய வெள்ளாடுகளை ஓட்டிவிட்டான். பட்டி நிறைய பால் மாடுகளைக் குடுத்தான். ஊரு உலகத்துல இப்படியொரு கல்யாணம் நடந்ததில் லேன்னு பேசுச்சு. ஊரு முழுசும் பந்தக்காலு... தெருவெல்லாம் தோரணம்... எட்டுப்பட்டி ராஜாக்களும் பரிவாரங் களோட வந்து கல்யாணத்துல கலந்துக் கிட்டாக. விருந்துன்னா விருந்து, பெரு விருந்து. பத்து நாளைக்கு பசியெடுக்காத மாதிரி வேணுங்கிறதை அள்ளி அள்ளி வெச்சு உபசரிச்சு ஓஞ்சுட்டான்.

எல்லாம் முடிஞ்சு, நல்லாளும் காசிராசனும் மானாமதுரைக்குக் கிளம்பினாங்க. ஊரே கலங்கி நின்னுச்சு. நல்லாவுக்கு அண்ணனைப் பிரிய மனசே இல்லை. அழுது புரண்டா. நல்லான் தங்கச்சிக்கு ஆறுதல் சொன்னான். ‘தண்ணியும் தரையும் தவளைக்கு... பொறந்த வீடும் புகுந்த வீடும் பொண்ணுக்கு... என்னிக்கு இருந்தாலும் நீ இன்னொரு வீட்டுக்குப் போயிதான் தாயி ஆகணும். காசிராசன், உன்னைக் கண்ணா வெச்சுக் காப்பாத்துவான். கலங்காமப் போ தாயி.... அண்ணன் உசுரு எப்பவும் ஒன்னோடதான். வாரத்துக்கு ஒருமுறை ஒன் வீட்டுக்கு விருந்து சாப்பிட வந்து நிப்பேன்’னு ஆறுதல் சொல்லி அனுப்பி வெச்சான்.

காசிராசனும் நல்லாவும் மானாமதுரைக்குப் போய் சேர்ந்தாச்சு. ஆனா, அதுக்குப்பெறவு, நல்லான் அந்த ஊருப்பக்கமே எட்டிப்பாக்கலே. அதுக்கு அவன் காரணமில்லே... அவன் பொண்டாட்டி மூளி அலங்காரிதான் காரணம். பெரிய கொடுமைக்காரி. தங்கைக்காரி மேல இருக்கிற பாசத்துல எல்லாச் சொத்தையும் அவளுக்கே அள்ளிக் கொடுத்திடப்போறான்னு பயந்து, மானாமதுரைப் பக்கமே எட்டிப் பாக்க விடலே. தங்கையைப் பார்க்கக் கிளம்பறேன்னு நல்லான் சொன்னா, உடம்பு சரியில்லேன்னு படுத்துக்குவா... சரி, நாளைக்குப் போகலாம், நாளைக்குப் போகலாம்னு காலத்தைத் தள்ளிப்போட்டான் நல்லான். அண்ணன் வருவான், வருவான்னு காத்திருந்து கண்ணு பூத்துப்போனா நல்லா.

நல்லா, மானாமதுரைக்கே ராணியாகி நல்லவிதமா வாழ்ந்தா. அடுத்து அடுத் துன்னு ஏழு புள்ளைங்க நல்லாவுக்கு. நாலு பயலுக... மூணு பொண்ணுங்க... மாமங்காரனைப் பத்தி புள்ளைகளுக்குக் கதை கதையா சொல்லி வளர்த்தா நல்லா.

எந்தக் கண்ணு பட்டுச்சோ... மானா மதுரைச் சீமைக்கி வந்துச்சு பெரும் கஷ்டம். பன்னண்டு போகம் மழை நின்னுபோச்சு. துளிப்பூண்டு விளையலே... வயலெல்லாம் பாளம் பாளமா வெடிச்சுக் கிடக்கு. குருதுல இருந்தது, பத்தாயத்துல இருந்தது எல்லாம் தீர்ந்து விதைக்கிருந்ததை எல்லாம் எடுத்து வடிச்சு தின்னு, அதுவும் போக எலிப்பொந்து தோண்டி, அதுக் குள்ள இருக்கிற தானியங்களைச் சுரண்டிக்கொண்டு வந்து சாப்பிட்டாக. ஆடு, மாடு, கோழியெல்லாம் தீனி இல்லாம விழுந்து விழுந்து சாகுது. குடிக்கத் தண்ணி இல்ல. பஞ்சமுன்னா பஞ்சம். கொத்துக்கொத்தா மக்கள் செத்து விழுந்தாங்க.

சீமைக்கு ராஜாவான காசிராசன் கஜானா கரைஞ்சு துரும்பாயிருச்சு. ஏழு புள்ளைகளுக்கும் ஒத்தை வேளைச் சாப்பாடுகூட ஒழுங்கா கொடுக்க முடியலே. எல்லாப் புள்ளைக்கும் எலும்பு துருத்த ஆரம்பிச்சிருக்கு. தானியம் உடைக்கிற உலக்கையில இருந்து, குருணைப் புடைக்கிற மொறம் வரைக்கும் எல்லாத்தையும் வித்துட்டா நல்லா. எதை வித்தாலும் பஞ்சம்விட்டபாடில்லை. வானம் சொல்லிவெச்சு வஞ்சம் தீர்த்திருச்சு.

நாள் பட்டினி, வாரப் பட்டினியாச்சு. இனிமே இங்கிருந்தா புள்ளைகளக் காப்பாத்த முடியாதுன்னு மகராசி நல்லாவுக்குப் புரிஞ்சு போச்சு. ‘இருக்கவே இருக்கான் அண்ணங்காரன் நல்லான். தங்கச்சி பிள்ளைகளைத் தங்கத் தொட்டியில உக்கார வெச்சு தாலாட்டுப் பாடுவான். அண்ணிக்காரி மூளி, தெனமும் அரிசி பருப்புன்னு வாய்க்கு ருசியா சமைச்சுப் போடுவா... கிளம்புவோம்’னு கிளம்பினா. காசிராசன் தடுத்தான்.

‘வேணாண்டி நல்லா... வாழ்ந்து கெட்டவங்களுக்குப் பெறந்த வீட்டுல எப்பவுமே மரியாதை இருக்காது. உறவுகள்லாம் தூத்தி விரட்டும். வேணாம்... வாழ்ந்தாலும் செத்தாலும் மானாமதுரையிலயே நடக்கட்டும். அங்க போயி அவமானப்பட வேணாம். எப்பாடுபட்டாவது நான் உங்களை யெல்லாம் காப்பாத்துவேன்’னு எவ்வளவோ எடுத்துச் சொன்னான்.

கேட்கிறவளா நல்லா... ‘அள்ளிக் கொடுக்க அண்ணன் இருக்கும்போது புள்ளைக ஏன் பட்டினி கிடந்து சாகணும்... உங்க பாட்டை நீங்க பாருங்க... நான் பிள்ளைகளை மாமன்கிட்ட ஒப்படைக்கிறேன்’னு உரக்கப் பேசிட்டு கிளம்பிட்டா. நல்லாவை இனி தடுக்க முடியாதுன்னு காசிராசனுக்குப் புரிஞ்சு போச்சு. ‘சரி... பத்திரமாப் போ... பிள்ளைகளைக் கவனமாப் பார்த்துக் கோ’ன்னு அரை மனசோட அனுப்பி வெச்சான்.

பிள்ளைகளோட அர்ச்சுனாபுரத்துக்கு நடக்குறா நல்லா. வர்ற வழியெல்லாம் பிள்ளைங்க பசி, பசின்னு கதறி அழுகுதுங்க. தடுமாறி விழுகுதுங்க. காட்டுவழிப்பாதையில நல்லா பிள்ளைகளை அழைச்சுக்கிட்டு அழுத கண்ணு மாறாம வர்றா. ‘இன்னும் நாலைஞ்சு காதம்தான்... மாமன் வீடு வந்துட்டா தாகம் மட்டுமில்ல... பசியும் தீர்ந்திடும், தைரியமா வாங்க’னு புள்ளைகளை இழுத்துக்கிட்டு நடக்கிறா. நடந்த களைப்பு ஒருபக்கம். பசி மயக்கம் ஒருபக்கம். புள்ளைகளுக்கு ஒரு வாய்ச் சோறு போட முடியலேங்கிற இயலாமை ஒருபக்கம்னு நல்லாவுக்குக் கண்ணைக் கட்டிக்கிட்டு வருது. ஒரு பெரிய ஆலமரத்துக்குக்கீழே ஏழு பிள்ளை களையும் போட்டுக்கிட்டு உக்காந்துட்டா மனுஷி.

அந்த நேரம் பார்த்து அண்ணங்காரன் நல்லான் படை பரிவாரங்களோட அந்தப் பக்கமா வர்றான். ஆலமரத்துக்குக் கீழே நம்ம உறவு வாசனை அடிக்குதேன்னு நிதானிச்சுப் பார்த்தவன் அப்படியே கதிகலங்கிப் போனான். ‘அய்யோ... என் தங்கச்சி... என் பிள்ளைங்க...’ துடிதுடிச்சு அப்படியே பிள்ளைகளை அணைச்சுக் கிட்டு அழுது தீர்த்தான்.

நல்லா, தங்களோட நிலைமையைச் சொன்னா. ‘நல்ல காரியம் செஞ்சேம்மா... நம்ம வீட்டுக்குப் போ... தெற்கு அறையில தேங்காய் இருக்கு. மேற்கு அறையில மாங்காய் இருக்கு. வாசல்ல காட்டு யானை கட்டியிருக்கு. பட்டி நிறைய காராம் பசு இருக்கு. போ... போய் நல்ல சாதம் சாப்பிடு. எல்லாம் உன்னோடது. உம் பிள்ளைகளுக்கு எல்லாத்தையும் வாரிக்கொடு. நான் எம் மருமக்கள் விளையாட மான் பிடிச்சுக்கிட்டு வாரேன். வீட்டில் உன் அண்ணி உன்னை வரவேற்று உபசரிப்பா... போ'னு வழியனுப்பி வெச்சான்.

அண்ணி நம்மளை அள்ளி அரவணைச்சுக்குவாங்கிற நம்பிக்கையில புள்ளைகளைக் கூட்டிக்கிட்டு அர்ச்சுனா புரம் வந்து சேர்ந்தா. தன் நாத்தனா, புள்ளைகளைக் கூட்டிக்கிட்டு வர்றதைத் தூரத்துலயே பார்த்துட்ட மூளி, ‘அய்யய்யோ... வெனை வருதே... இருக்கிறதை எல்லாம் சுருட்டிக்கிட்டுப் போகப்போகுதே’ன்னு நினைச்சு, விறுவிறுன்னு ஓடி முன்கதவைச் சாத்தி வெச்சா. சமையற்கட்டுக்குள்ள ஓடி சோத்துப் பானையை மறைச்சு வெச்சா. தன்னோட பட்டாடையை அவுத்துப் போட்டுட்டு கிழிஞ்சுபோன பழந்துணி ஒண்ணைக் கட்டிக்கிட்டு தலைக்குப் பத்துப்போட்டுக்கிட்டு மூலையில போய் முடங்கிக்கிட்டா.

நல்லா, ஆசையா வந்து அண்ணன் வீட்டுக் கதவைத் தட்டுனா. ‘அண்ணி’, ‘அண்ணி’ன்னு அன்பாக் கூப்புட்டா. அண்ணி ஓடியாந்து, தன்னையும் தம் புள்ளைகளையும் கட்டி அணைப்பா, என்னப்பா இப்பிடியாயிருச்சேன்னு கதறித்துடிப்பான்னு எதிர்பார்த்தா. ஆனா, நல்லா நினைச்ச எதுவும் நடக்கலே. கதவும் திறக்கலே.

ஒரு புள்ளை தண்ணிக்குத் தவிக்குது... இன்னொன்னு பசின்னு அழுகுது. கடைக்குட்டிப்பய மயங்கியே விழுந்துட்டான். கத்தித் தீர்க்குறா நல்லா. ‘அண்ணி, என்னாச்சு அண்ணி’னு.

ஒரு சத்தமும் உள்ளேயிருந்து வரலே... உடல்ல இருந்த கொஞ்சநஞ்ச பலத்தைத் திரட்டி ஓங்கி ஓர் எத்து எத்துனா கதவை. படார்னு திறந்துக்குது கதவு. புள்ளைங்க ஆவலா உள்ளே ஓடுச்சுங்க. தண்ணிப் பானையைத் திறந்தா தண்ணியில்லே. சோத்துப்பானை இல்லவே இல்லை. மூளி ஒரு மூலையில முக்காடு போட்டுக் கிட்டு படுத்துக்கிடந்தா. அவ படுத்திருந்த அறைக்குள்ள மாங்காயும் தேங்காயும் துணிக்குள்ள மறைச்சு குவிஞ்சு கிடந்துச்சு.

மூத்த பய ஓடிப்போயி ஒரு மாங்காயை எடுத்துக் கடிச்சான். இளைய பய போயி தேங்காயை எடுத்தான். விருட்டுன்னு எழுந்தா மூளி. மாங்காயைப் பறிச்சு குவியல்ல வெச்சா. தேங்காயைப் பறிச்சு பரணியில வெச்சா.

நல்லா துடிச்சுப்போனா. இந்தக் கொடுமையை எங்கே போயிச் சொல்ல... ‘அண்ணி எம்புள்ளைங்க பசியாத்துங்க அண்ணி’ன்னு அழுது புரண்டா. ‘எங்கிட்ட ஒண்ணுமில்லே. இதோ உடைஞ்ச திருகை கிடக்கு. ஓட்டைப் பானை கெடக்கு. ஈர மட்டை கெடக்கு. கொஞ்சூண்டு மக்கிப்போன கேப்பை இருக்கு. அதையெல்லாம் எடுத்து ஒம்புள்ளைகளுக்குக் கூழு காய்ச்சிக் கொடுத்துக்கோ'னு எடுத்தெறிஞ்சு பேசுனா.

நடக்குறது நடக்கட்டும்னு மக்கிப் போன கேப்பையை, உடைஞ்ச திருகை யில போட்டுத் திரிச்சு ஓட்டைப் பானையில போட்டு ஈர மட்டையை வெச்சு எரிச்சு கூழு காய்ச்சுனா நல்லா. கடவுள் புண்ணியத்துல கூழு கொதிச்சு வந்துச்சு. ஒண்ணுக்கும் உதவாததைக் கொடுத்தா ஓடிப்போயிருவான்னு நினைச்சா, கூழைக் காச்சிப்புட்டா ளேன்னு திகைச்சுப்போன மூளி, கொதிச்ச கஞ்சிப்பானையை காலால எத்திவிட்டா. பானை ஒடைஞ்சு கூழெல் லாம் வழிஞ்சு தரையில ஓடுச்சு. காணாத தைக் கண்ட புள்ளைங்க, தரையில விழுந்ததை அள்ளிக் குடிச்சதுங்க.

நல்லாளுக்கு இதைப் பார்க்கச் சகிக்கலே. சீமைக்கே ராணி... ஊருக்கே நியாயம் சொன்ன நமக்கு இப்படியொரு அவமானமா? தரையில வழிஞ்சோடுற கூழை வழிச்சுத் திங்கிற அளவுக்கு நம்ம புள்ளைகளைக் கொண்டுவந்துட்ட மேன்னு குற்ற உணர்வு. இனிமே வாழணுமானு கேவிக்கேவி அழுகுறா.

ஒரு முடிவோட புள்ளைகளைக் கூட்டிக்கிட்டு தெருவுல இறங்குறா நல்லா. புள்ளைகள்லாம் தவிச்சுப்போய் பின்னாடியே வருதுங்க. தலைவிரி கோலமா, கண்ணீர் வடிய தங்க ராஜா வீட்டுப்பொண்ணு நடந்துபோறதைப் பார்த்து ஊரு சனமெல்லாம் பரிதாபப்பட்டு நின்னுச்சு.

‘வா தாயி... எங்க வீட்டுக்கு வா... நெல்லுக் குத்தி சோறு வடிச்சுத் தாரோம். காராம்பசு பாலெடுத்துத் தாரோம்... புள்ளைகளை அழைச்சுக்கிட்டு வீட்டுக்குள்ள வா தாயி’னு அழைச்சுப் பார்த்தாங்க.

நல்லா, யாருக்கும் பதில் சொல்லலே... கால்போன போக்குல போனா... புள்ளை கள்லாம் அவ போன தடத்துல நடந்துச் சுங்க. அண்ணங்காரனுக்குத் தான் போன பாதை தெரிய ஆவாரங்குச்சிகளை ஒடிச்சுப் போட்டுக்கிட்டே போனா.

காடு கடந்தா. கரைகடந்து நடந்தா. ஒரு வயல்காட்டு ஓரமா இருந்துச்சு ஒரு பாழுங்கிணறு. அரை பாகத்துக்கு தண்ணி, வா வான்னு வாயைப் பிளந்துக்கிட்டு கிடக்கு.

தன் புருஷங்காரனுக்கு அடையாளம் காட்ட, தாலியைக் கழற்றிக் கரையில வெச்சா. புள்ளைகள எல்லாம் கட்டியணைச்சு முத்தங்கொடுத்தா... ஒவ்வொண்ணாத் தூக்கி கிணத்துக்குள்ள வீசுனா... கடைசிப்புள்ள அம்மாக்காரி காலைக் கட்டிக்கிட்டு விசும்புது. மனசைக் கல்லாக்கிக்கிட்டு அதையும் தூக்கிப் போட்டா. கடைசியா தானும் குதிச்சா... கிணறே ஸ்தம்பிச்சுப் போச்சு. நல்லாவோட ஆறடிக் கூந்தல் தண்ணிய நிறைஞ்சு விரிஞ்சு கிடக்கு.

நல்லா, அர்ச்சுனாபுரத்துக்குக் கிளம்பின கொஞ்சநாள்லயே, மானாமதுரைச் சீமையில நல்ல மழை. மழைன்னா மழை... 12 வருஷம் காணாத மழை. ஏரி, குளமெல்லாம் நிரம்பி வழியுது. விளைச்சல் நிறையுது. காசிராசன் தம் புள்ளைகளையும் பொண்டாட்டி யையும் அழைச்சுக்கிட்டு வர அர்ச்சுனா புரத்துக்கு வர்றான்.

நல்லானும் வேட்டை முடிச்சு ஊருக்கு வந்தான். ‘எங்கே என் தங்கச்சி, எங்கே என் மருமக்கள்’ன்னு ஆவலா ஓடிவந்த நல்லானுக்கு அண்டைவீடு, அடுத்த வீட்டுக்காரங்க நடந்ததைச் சொன்னாங்க... அய்யோ... அர்ச்சுனாபுரம் இளவரசி, மானாமதுரை ராணி சோத்துக்கு வழியில்லாம தெருவில நின்னாளா... தாங்க முடியலே... அரிவாளை எடுத்து மூளி அலங்காரியை ஒரே வெட்டு. தலை துண்டாகி, தனியா விழுந்திடுச்சு.

தங்கச்சி போன திசையில பைத்தியம் பிடிச்சதைப்போல அழுது புலம்பிக்கிட்டு ஓடுறான் நல்லான். தங்கச்சிக்காரி ஓடிச்சுப்போட்ட ஆவாரம் செடி வழிகாட்டுச்சு. பாழுங்கிணற்றுக்குள்ள தங்கச்சியும் மருமக்களும் பிணமா கிடக்குறதைப் பார்த்து அலறித் துடிச்சான். பொண்டாட்டி, புள்ளை களைத் தேடி ஓடிவந்த காசிராசனும் அந்தக் காட்சியைப் பார்த்துக் கதறி அழுதான். தங்கச்சியை இப்படியொரு நிலைக்கு ஆளாக்கிட்டோமேன்னு குற்ற உணர்வுல நல்லான் ஈட்டியில பாய்ஞ்சு உசுர விட்டான். பொண்டாட்டி புள்ளைக்கு சோறுபோட வழியில்லாம இப்படிச் சாகவிட்டோமேன்னு காசிராசனும் ஈட்டியில பாய்ஞ்சு செத்துப்போனான்.

விருதுநகர் மாவட்டம் வத்திரா யிருப்புக்குப் பக்கத்துல இருக்கிற அர்ச்சுனாபுரம் போனீங்கன்னா, இப்பவும் நீங்க நல்லாவைப் பார்க்கலாம். முகத்துல அவ்வளவு உக்கிரம்.

அந்த ஊர்ல இப்போ அவளுக்குப் பேரு நல்லதங்காள். ஊரைவிட்டு விலகி அரைகிலோமீட்டர் உள்ளே நடந்தா வயக்காடுகளுக்கு மத்தியில தெய்வமா குடியிருக்கா நல்லா. பக்கத்திலயே ஏழு பிள்ளைகளும் சிலையா இருக்காங்க. அண்ணங்காரன் நல்லானும் இங்கே இருக்கான். இப்போ அவனுக்குப் பேரு நல்லதம்பி.

இந்த இடத்துல இருந்து கொஞ்சதூரம் நடந்தா, நல்லாவும், அவ பிள்ளைகளும் குதிச்சுச் செத்த கிணறு இன்னமும் உசுரோட இருக்கு. அந்தக் கிணத்துக்கிட்ட நிக்கும்போது நல்லாவும் அவளோட ஏழு பிள்ளைகளும் நம்மைப் பார்த்துக் கெக்கலிக்கிறதை உணர முடியுது.