Published:Updated:

கௌசல்யாவின் கனவு மெய்ப்பட வேண்டும்!

கௌசல்யாவின் கனவு மெய்ப்பட வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
News
கௌசல்யாவின் கனவு மெய்ப்பட வேண்டும்!

சாதிகள் இருக்கேடி பாப்பாநிவேதிதா லூயிஸ் - படங்கள்: லெய்னா

``சாதி என்பது மனிதத்துக்கு எதிரானது. பிறப்பின் அடிப்படையால் மனிதர்களைப் பிரித்துவைப்பது என்பது உலகில் வேறு எங்கும் இல்லை. குழந்தை களிடமிருந்து சாதியம் என்பதை காலம் காலமாக மறைத்தே வைத்திருக்கிறோம். அதுகுறித்த விழிப்பு உணர்வைக் குழந்தை களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதற் காகவே இதை முன்னெடுத்தேன்'' என்கிறார் `சாதிகள் இருக்கேடி பாப்பா - 3' என்கிற ஆவணப் படத்தை இயக்கியிருக்கும் கீதா இளங்கோவன். அவரிடமும் அந்தப் படத்தில் பங்கெடுத்திருக்கும் உடுமலை கௌசல்யா விடமும் ஓர் உரையாடல்.

முதலில் கீதா இளங்கோவன்...

கௌசல்யாவின் பேட்டியையே படமாக இயக்க நினைத்தது ஏன்?


``சாதியின் கொடூர முகத்தைக் குழந்தை களுக்குப் புரியவைக்க வேண்டும் என்றால் ஆணவக் கொலைகள் குறித்து அவர்களிடம் பேச வேண்டும். அதனால் அதை எதிர்த்துத் தன்னையே போராளியாக முன்னிறுத்தி நாம் வாழும் காலகட்டத்தில் வாழும் கௌசல்யாவைச் சந்தித்துக் குழந்தைகள் உரையாடினால், சாதி எத்தனை கொடுமை யானது என்று புரியவைக்கலாம். அதில் பாதிக்கப்பட்டவர் மீண்டு, சமூகப் போராளி யாக, சமூகப் பணிகளில் ஈடுபடுவது அந்தக் குழந்தைகளுக்கு இன்ஸ்பிரேஷனாக அமையும் என்றும் நினைத்தேன்.’’

ஒரு பெண் என்பதால்தான் உங்களால் கௌசல்யாவிடம் இந்த உரையாடலை நடத்த முடிந்ததா?

``இருக்கலாம். ஒரு பெண் தன் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது வரும் சவால்கள் எவ்வளவு கடினமானவையாக இருக்கும் என்பதை, நானும் என் இணையரை என் சுய விருப்பத்தில் தேர்ந்தெடுத்த காரணத்தால் அறிவேன். பெற்றோரின் அரவணைப்பிலும் அதன்பின் கணவரின் அன்பிலும் வாழ்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை ஒரு பகல் பொழுது எப்படி இப்படிப் புரட்டிப் போட்டது என்பது என்னை மிகவும் பாதித்தது.’’

கௌசல்யாவின் கனவு மெய்ப்பட வேண்டும்!

இனி கௌசல்யா...

சங்கரின் கொலைக்கு முன் - பின்னான கௌசல்யாவை நீங்கள் எப்படிப் பார்க் கிறீர்கள்?


``மன தைரியம் ஒன்றுதான் அன்றைய கௌசல்யாவுக்கும் எனக்கும் உள்ள ஒரே ஒற்றுமை. இப்போது தன்னம்பிக்கை  கூடியிருக்கிறது. தனக்கான ஒரு வாழ்க்கையை வாழாமல், அன்றைய கௌசல்யா தன் வீடு, தன் குடும்பம் என்று ஒரு குறுகிய வட்டத்துக்குள்தான் இருந்தாள். இன்றைய கெளசல்யாவுக்குத் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது, சமுதாயம் எப்படி இருக்கிறது என்கிற விழிப்பு உணர்வு இருக்கிறது.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கௌசல்யாவின் கனவு மெய்ப்பட வேண்டும்!


தற்கொலைவரை சென்று மீண்டு வந்திருக்கிறீர்கள். தோல்வியால் துவளும் பெண்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?

``என் வீட்டைவிட்டு நான் வெளியேறிய அந்த ‘பிரேக்கிங் பாயின்ட்’ என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணம் என்று நான் நினைக்கிறேன். அதுபோன்ற தருணங்களில் தனக்கான முடிவை ஒரு பெண் தானே உணர்ந்து எடுப்பது அவசியம்.’’

கௌசல்யா ஆணாகப் பிறந்திருந்தால் எப்படி இருந்திருப்பாள்?

``நிச்சயம் இத்தனை மன தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் இருந்திருக்க மாட்டாள். ஒருமுறை, என்னைக் கடத்திச் சென்றுவிட்டார்கள். சங்கர் அந்த நேரம் காவல் நிலையத் தில் புகார் கொடுத்துவிட்டு, வேறு என்ன செய்வது என்று அறியாது எனக்காக அழுதுகொண்டு இருந்தார். நானோ, அங்கிருந்து தப்பி வந்துவிட்டேன். இதன்மூலம் நான் சொல்ல விரும்புவது, ஒரு பெண்ணாக என்னால் அதிக தைரியத்துடன் இருக்க முடிகிறது என்பதைத்தான்.’’

உங்கள் அடையாளம் என உலகுக்கு நீங்கள் விட்டுச் செல்ல விரும்புவது எது?

``சந்தேகமின்றி சாதி ஒழிப்பையே என் அடையாள மாகப் பார்க்கிறேன். ஆணவக் கொலைக்கு எதிரான கடுமையான சட்டம் ஒன்று வேண்டும். சங்கர் கொலையைப் பொறுத்த வரை அவர் தலித் என்ற காரணத்தால் கடுமையான சட்டம் கொண்டு தண்டனை பெற்றுத்தர முடிந்தது. ஆனால், அந்த இடத்தில் தலித் அல்லாத ஆண் இருந்திருந் தால்? இதுபோன்ற ஆணவக் கொலைகளில் அதிகம் பாதிக்கப்படுவது ஆதிக்கச் சாதி யைச் சார்ந்த பெண்களே. ஆணவக் கொலைக்கு எதிரான கடுமையான சட்டம் கொண்டுவரப்பட்டால், அது இதை நிகழ்த்து பவர்களுக்கு ஒரு மனத்தடையாக நிச்சயம் இருக்கும்.''

கௌசல்யாவின் கனவு மெய்ப்பட வேண்டும்!

பறை கற்றுக்கொண்டு சொல்லித் தருகிறீர்கள், பல்சர் ஓட்டுகிறீர்கள், ஆண்போல உடை அணிகிறீர்கள், முடியைக் குட்டையாக வெட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்று உங்கள்மீது விமர்சனங்கள் உள்ளனவே... ஆண்போல் உணர்கிறேன் என்று நீங்கள் சொல்வது எதை?

``பொதுவாகவே ஆண்கள் உறுதிமிக்கவர் கள், தைரியசாலிகள் என்கிற எண்ணம் எல்லோருக்கும் உண்டு. நான் இருக்க விரும்புவதும் அப்படித்தான். எனக்குள் நான் ஆண்போல மனவலிமையோடு இருக்கிறேன். உணர்கிறேன். அவ்வளவே!’’

சாதியம் என்ற விஷயம் தாண்டி ஒரு பெண் என்ற காரணத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக எண்ணுகிறீர்களா?


``நிச்சயமாக. பொதுவெளியில் என்மீது தேவையற்ற விமர்சனங்களும், வன்மமும் வைப்பவர்கள் பைத்தியக்காரர்கள் என்றே நான் நினைக்கிறேன். அந்த ஆண்களின் வீடுகளில் உள்ள பெண்கள்மீது பரிதாபப்படுகிறேன். முன்பின் பார்த்திராத, தெரியாத ஒரு பெண்மீது இவ்வளவு சேற்றை வாரி இறைக்கும் இவர்கள் தங்கள் வீட்டுப் பெண்களை எப்படி நடத்துவார்கள், மதிப்பார்கள்? பாவம் அந்தப் பெண்கள்.

ஆரம்பம் முதல் இவை போன்ற விமர்சனங் கள் பலவற்றை நான் கடந்துவந்திருக்கிறேன். இவற்றையும் சிரித்துக்கொண்டே கடந்து செல்கிறேன். சாதி ஒழிப்பு என்ற ஒன்றுதான் என் குறிக்கோள். என் பயணம் அதை நோக்கி மட்டுமே இருக்கும்!’’

சமீபத்திய நிகழ்வுகள் கௌசல்யாவை இன்னும் அதிகம் வலிமையாக்கியிருக்கின்றன என்பது அவருடன் உரையாடுகையில் தெளிவாகிறது. சாதிகளற்ற சமுதாயம் என்கிற இவர் கனவு மெய்ப்படட்டும்!

கௌசல்யாவின் கனவு மெய்ப்பட வேண்டும்!

ஆணவக்   கொலைகள்

கௌசல்யாவின் கனவு மெய்ப்பட வேண்டும்!

2003... விருத்தாசலம் முருகேசன் கண்ணகியைக் காதலித்துப் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். முருகேசனைவிட உயர்ந்த சாதி என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் கண்ணகியின் சாதியினர் வலுக்கட்டாய மாக இருவருடைய காதிலும் விஷத்தை ஊற்றிக்கொலை செய்து, பிறகு உடல்களை எரித்தனர்.

கௌசல்யாவின் கனவு மெய்ப்பட வேண்டும்!

2012... தர்மபுரி இளவரசன், திவ்யாவைக் காதல் திருமணம் செய்து கொண்டார். திவ்யாவின் சாதியினர் களத்தில் இறங்க, இளவரசனைப் பிரிந்தார் திவ்யா. ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார் இளவரசன் என்று செய்தி வந்த நிலையில், `அது மர்ம மரணம்' என்று இளவரசன் தரப்பு போராட்டத்தில் குதித்தது. 

கௌசல்யாவின் கனவு மெய்ப்பட வேண்டும்!

2014... உசிலம்பட்டி திலீப்குமாரைக் காதலித்தார் விமலாதேவி. உயர்சாதி என்று சொல்லிக்கொள்ளும் விமலாதேவியின் உறவினர் மற்றும் சாதியினர், அந்தப் பெண்ணை எரித்துக் கொன்றனர்.

கௌசல்யாவின் கனவு மெய்ப்பட வேண்டும்!

2014... வேதாரண்யம் அருகே மண்டல் கிராமத்தைச் சேர்ந்த மாதவன், சித்ராவைக் காதலித்தார். உயர்சாதி என்று சொல்லிக்கொள்ளும் சித்ராவின் உறவு மற்றும் சாதியே சித்ராவை அடித்துக்கொன்றது. கொலை முயற்சியிலிருந்து மாதவனைக் காவல் துறை காப்பாற்றியது.

கௌசல்யாவின் கனவு மெய்ப்பட வேண்டும்!

2014... ராமநாதபுரத்தில் காதல் திருமணம் செய்த வைதேகியை, கர்ப்பிணி என்றும் பாராமல் குடும்பத்தினரே விஷம்கொடுத்தும் கழுத்தை நெரித்தும் கொன்று புதைத்தனர்.

கௌசல்யாவின் கனவு மெய்ப்பட வேண்டும்!

சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தில் பொறியியல் படித்த மாணவி ஒருவர், ஓர் இளைஞரைக் காதலித்தார். `கீழ்ச்சாதிக்காரனைக் காதலிக்கிறாயா?' என்று கல்லூரி வாசலிலேயே பெண்ணை வெட்டினார் அவருடைய தந்தை.

கௌசல்யாவின் கனவு மெய்ப்பட வேண்டும்!

2015... ஓமலூர் கோகுல்ராஜ் ஒரு பெண்ணைக் காதலித்ததால், அவருடைய தலை துண்டிக்கப்பட்டு ரயில் தண்டவாளத்தில் போடப்பட்டது. அப்பெண்ணின் சாதியைச் சேர்ந்தவர்கள் செய்த கொடூரம் இது.

கௌசல்யாவின் கனவு மெய்ப்பட வேண்டும்!

திருப்பூர் மாவட்டம் குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர், பழனியைச் சேர்ந்த கௌசல்யாவைக் காதலித்து, சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார். 2016 மார்ச் 13 அன்று பட்டப்பகலில் சங்கர், கௌசல்யா இருவரையும் ஒரு கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டியது. சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த கௌசல்யா தீவிர சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

கௌசல்யாவின் கனவு மெய்ப்பட வேண்டும்!

2016... திருநெல்வேலியில் ஓர் இளைஞர் வேறு சமூகத்துப் பெண்ணைக் காதல் மணம் புரிந்தார். பெண்ணின் சாதியினர் கோபமுற்று நடத்திய தாக்குதலில், அந்த இளைஞரின் கர்ப்பிணி சகோதரி கொல்லப்பட்டார்.