
இந்தியாகுணவதி
பிரியங்கா சோப்ரா
பதின்ம வயதுகளில் பொறியாளராக வேண்டும் என்று கனவு கண்டவர், மாடலாக தன் வாழ்க்கையைத் தொடங்கி இன்று பாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வளர்ந்திருக்கிறார். சூழலியல், பெண் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு அளிக்கவேண்டிய முன்னுரிமைகளைத் தொடர்ந்து வலியுறுத்திவரும் குரல் இவருடையது.
ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா
ஹெச்.சி.எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா. ``பெரிதாக யோசியுங் கள். எல்லைக்கோட்டைப் பிறகு வரைந்துகொள்ளலாம்’’ என்கிற ரோஷிணி, இந்த ஆண்டின் ஃபோர்ப்ஸ் பெண் ஆளுமைகளில் ஒருவர். கிராமப்புற மக்களுக்கான கல்விப்பணியிலும் கவனம் செலுத்திவருகிறார்.
குல்மெஹர் கவுர்
`என் தந்தை மரணத்துக்குக் காரணம் பாகிஸ்தான் அல்ல... போர்தான்’ என்று எழுதிய அட்டை யோடு இவர் நிற்கும் வீடியோ (#ProfileForPeace), மக்கள் மனதில் மத துவேஷத்தைத் துடைத்து, புதிய மாற்றத்தை உருவாக்கும் அமைதிக் கான முயற்சியானது; பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.

ஷுபாங்கி ஸ்வரூப்
இந்தியக் கடற்படையில் முதல் பெண் பைலட்டாகி இருக்கிறார் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஷுபாங்கி ஸ்வரூப். `கடற்படை யில் பல பெண்கள் பணியாற்ற வேண்டும். இது எனது வெறும் பதவியல்ல; மிக முக்கியமான பொறுப்பு' என அழைப்பு விடுக் கிறார் இவர்.
பி.வி.சிந்து
22 வயதில் ஹிமாலய வெற்றியையும் அதைக் கையாளும் பக்குவத் தையும் பெற்றிருக்கும் சிந்து, இந்த ஆண்டின் ஸ்போர்ட்ஸ் சாதனையாளர். 2017-ல் மட்டுமே 44 போட்டிகளில் வெற்றி. ஒலிம்பிக் பதக்கத்துக்குப் பிறகு சிந்துவின் ஆட்டம், எனர்ஜி, தன்னம்பிக்கை எல்லாமே வேற லெவல்.
பிரித்திகா யாஷினி
சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி, நாட்டிலேயே முதல் திருநங்கை உதவி காவல் ஆய்வாளர். `சமூகத்தின் அரவணைப்புதான் திருநங்கைகளின் முதல் தேவை. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டி பாடுபடுவேன்' என்கிறார்.
ஃபயே டிசெளசா
`மிரர்ஸ் நவ்’ டி.வி-யில் பணி புரியும் பத்திரிகையாளரான ஃபயே டிசெளசா, ஊடகத்தில் ஒளிரும் ஒரு நட்சத்திரம். பெண்களுக்கு எதிரான கருத்துகளுக்குச் சுடச்சுட பதில் உரைப்பவர். ஆதிக்கத்துக்கு ஆட்படுத்தாமல் விவாதத்தைச் சரியாகக் கொண்டுசெல்வதில் முன்மாதிரி இவரே.
ஜமுனா டுடு
ஜார்க்கண்ட் பழங்குடியினப் பெண் ஜமுனா டுடு, `வன சுரக்ஷா சமிதி’ என்கிற பெண்கள் அமைப்பை உருவாக்கி மரக்கடத்தல் மாஃபியாக் களுக்கு அஞ்சாமல், இயற்கையின் எதிரிகளை வில், அம்புகளைக் கொண்டு காட்டைவிட்டுத் துரத்துகிறார். 50 ஹெக்டேர் வனப்பகுதியின் அன்னை இவர்.
கெளரி லங்கேஷ்
எளிய மக்களின் உரிமைகள், மதவாதக் கொடுமைகள் என மக்களுக்காகப் பல்வேறு தளங்களில் தீவிரமாகக் குரல் எழுப்பியவர் கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ். 2017 செப்டம்பர் 5 அன்று, இவர் சமூக விரோதிகளால் சுடப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
அருந்ததி ராய்
ராணுவத்தால் பாதிக்கப்படும் மக்களுக்காகவும் பழங்குடியினரைக் காடுகளிலிருந்து வெளியேற்றிவிட்டு வளங்களைக் கொள்ளையடிக்கத் துடிக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகவும் தன் எழுத்தைப் பயன்படுத்திவரும் அருந்ததியின் `The Ministry of Utmost Happiness’ எனும் நாவல் 2017-ல் வெளியாகியிருக்கிறது.