தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

சூப்பர் 10 பெண்கள் - தமிழக அளவில் 2017-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமைகள்

சூப்பர் 10 பெண்கள் - தமிழக அளவில் 2017-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
சூப்பர் 10 பெண்கள் - தமிழக அளவில் 2017-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமைகள்

தமிழ்நாடுவி.எஸ்.சரவணன், கு.ஆனந்தராஜ், ஆ.சாந்தி, மு.பார்த்தசாரதி, வெ.வித்யா காயத்ரி

சூப்பர் 10 பெண்கள் - தமிழக அளவில் 2017-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமைகள்

எளிய மக்களின் தோழி

அரசியல் என்பது ஆட்சி, அதிகாரம், பதவி என நினைப்பவர்களின் எண்ணங்களை உடைத்தெறிந்து, அது எளிய மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வது என்பதற்கான வாழும் சாட்சியே லட்சுமி அம்மா. தஞ்சாவூர் அருகே சிறிய கிராமத்தில் பிறந்து, கடுமையான வறுமையிலும் அடிப்படைக் கல்வியைப் போராடிப் பெற்றவர். தலைமறைவு காலத்தில் இருந்த இடதுசாரி கட்சித் தோழரைத் திருமணம் செய்துகொண்டவர். பெண்களை அரசியல் போராட்டங்களில் ஈடுபட செய்த இவர், இன்றும் களத்தில் நின்று போராடி முன்மாதிரியாகத் திகழ்கிறார். இவரின் தன் வரலாற்று நூலான, ‘லட்சுமி என்னும் பயணி’ பல்வேறு வரலாற்று நிகழ்வுகளுக்குச் சாட்சியம்.

சூப்பர் 10 பெண்கள் - தமிழக அளவில் 2017-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமைகள்

சமூகநீதி நாயகி

பெற்றோரே என்றாலும் குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என நீதிப் போராட்டம் நடத்திவருபவர் கெளசல்யா. தன் வாழ்வில் பெரும் சோகம் நடந்து விட்டபோதும், மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறார். ஆணவக் கொலைகளுக்கான எதிர்ப்பின் வடிவம் கெளசல்யா.

சூப்பர் 10 பெண்கள் - தமிழக அளவில் 2017-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமைகள்

அழகிய தமிழ் மகள்

ஷீலா ராஜ்குமார், பரதம் மற்றும் மேடை நாடகக் கலைஞர். செழியனின் ‘டூலெட்’, அம்ஷன்குமாரின் ‘மனுசங்கடா’ ஆகிய படங்களில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தினார். ‘அழகிய தமிழ் மகள்’ சீரியல் மூலம் இவர் சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்ததும் இந்த ஆண்டுதான்.

சூப்பர் 10 பெண்கள் - தமிழக அளவில் 2017-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமைகள்

இசை உலகின் புதிய குயில்

தோற்றத்தைவிட, திறமையே ஒருவரை முன் நகர்த்தும் என்பதை நிரூபிக்கும்விதமாகப் புருவம் உயர்த்தவைத்தது திருவாரூர் பகுதியைச் சேர்ந்த பிரித்திகாவின் குரல். சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் பிரித்திகாவின் வெற்றி நிராகரிக்கப்பட்ட ஒவ்வொருவரின் வெற்றிக் கொண்டாட்டமாகவே மாறியது.

சூப்பர் 10 பெண்கள் - தமிழக அளவில் 2017-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமைகள்

யதார்த்த நாயகி

நிகழ்ச்சித் தொகுப்பாளினி, ரியாலிட்டி ஷோ டான்ஸர், சீரியல் நடிகை, கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என உயர்ந்து, சக்சஸ்ஃபுல் ஸ்டாராக ஜொலிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ‘துருவ நட்சத்திரம்’, ‘வடசென்னை’, மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் என இந்த ஆண்டு அரை டஜன் படங்களுக்கும் மேல் இவர் கைவசம்.

சூப்பர் 10 பெண்கள் - தமிழக அளவில் 2017-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமைகள்

வலிகளைப் புறந்தள்ளிய பாடகி

பார்வைத்திறன் இல்லாத ஜோதி, மூளை வளர்ச்சிக் குறைபாடும் உடையவர். ஒரு நிகழ்ச்சியில் இவர் பாடிய ‘கண்ணம்மா கண்ணம்மா’ பாடலின் வீடியோ செம வைரல். இப்போது ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் ‘அடங்காதே’ திரைப்படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகிறார்.

சூப்பர் 10 பெண்கள் - தமிழக அளவில் 2017-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமைகள்

பாதுகாப்பில் முதல் அங்கீகாரம்

2014-ல் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சரான நிர்மலா சீதாராமன், கடந்த செப்டம்பர் மாதம் இந்தியப் பாதுகாப்புத் துறையின் அமைச்சரானார். இத்துறைக்கென நியமிக்கப்பட்ட முதல் பெண் அமைச்சர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் இவர்.

சூப்பர் 10 பெண்கள் - தமிழக அளவில் 2017-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமைகள்

யோகா ராணி

இந்தியாவின் வயதில் மூத்த யோகா ஆசிரியர், நானம்மாள். 98 வயதான இந்தப் பாட்டி இதுவரை 10 லட்சம் பேருக்கு யோகா கற்றுத் தந்து, அவர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளார். உலகப் பெண்கள் தினத்தன்று, இந்தியக் குடியரசுத் தலைவரிடம் ‘நாரி சக்தி புரஸ்கார்’ விருது பெற்றார். 

சூப்பர் 10 பெண்கள் - தமிழக அளவில் 2017-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமைகள்

போராளிப் பெண்

ஹைட்ரோகார்பன்  திட்டத்துக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார் கல்லூரி மாணவி வளர்மதி. பதறியது அரசு. பாய்ந்தது குண்டர் சட்டம். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து குண்டர் சட்டத்தை உடைத்துக் கொண்டு வெளியேவந்த வளர்மதி, தமிழகத்தின் இளம் போராளி.

சூப்பர் 10 பெண்கள் - தமிழக அளவில் 2017-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமைகள்

வாள்வீச்சு வீராங்கனை

உலகக் கோப்பை வாள்வீச்சுப் போட்டியில் முதன்முறையாக இந்தியாவுக்குத் தங்கப்பதக்கம் பெற்றுத்தந்தவர் பவானிதேவி.  முன்பு இருமுறை தோல்வியடைந்தாலும், விடாமுயற்சியால் வெற்றி வாகை சூட்டினார். தொடர்ந்து இந்தியா வுக்குத் தங்கப்பதக்கம் வாங்கித் தருவதே இவருடைய லட்சியம்.