வாசகிகள் பக்கம்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

சு.வெங்கடேசன் - என் கணவருக்குத் தொழில் எழுத்து!

சு.வெங்கடேசன் - என் கணவருக்குத் தொழில் எழுத்து!
பிரீமியம் ஸ்டோரி
News
சு.வெங்கடேசன் - என் கணவருக்குத் தொழில் எழுத்து!

காதல் கோட்டம் வி.எஸ்.சரவணன் - படம் : வீ.சதீஷ்குமார்

 'காவல் கோட்டம்' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன்.

சு.வெங்கடேசன் - என் கணவருக்குத் தொழில் எழுத்து!

த.மு.எ.க.சங்கத்தின் பொதுச் செயலாளர். சரித்திரக் கதைகளை இப்போதைய தலைமுறையினர் விரும்பி வாசிக்கும் விதத்தில் எழுதும் இவரது குடும்ப சரித்திரம் இது.

“நான் பிறந்தது வளர்ந்தது படிச்சது எல்லாம் மதுரையில். மதுரை, மன்னர் கல்லூரியில் பி.காம் படிக்கும்போது, தமிழ்க்கூத்தன் என்கிற தோழர் மூலமாக இடதுசாரி இயக்கத் தொடர்பு கிடைச்சது. `செம்மலர்' பத்திரிகையில துணை ஆசிரியராகச் சேர்ந்து, நாலு வருஷங்கள் கழிச்சு, கட்சியில முழு நேர ஊழியராகிட்டேன்.

கமலா, மதுரை செளராஷ்ட்ரா கல்லூரியில படிச்சுட்டு இருந்தாங்க. ஒன்பது வருஷக் காதல். காத்திருந்து, ரெண்டு பேரு வீட்டுலேயும் சம்மதம் வாங்கி, 1998-ல் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கட்சி வேலைகளால கிட்டத்தட்ட 10 வருஷங்கள் வரை இரவு பதினொரு மணிக்கு முன் நான் வீடு திரும்பினதாக நினைவில்லை. மனைவி என்னைப் புரிஞ்சுக்கிட்டவங்க என்பதால் பிரச்னையில்லை. கூட்டுக்குடும்பம்கிறதால தனிமைச்சூழல் அவங்களுக்கு அமையலை. ‘நீ அலையுற அலைச்சலுக்கு நாங்களா பார்த்திருந்தாக்கூட இப்படி ஒரு நல்ல பொண்ணைப் பார்த்திருக்க முடியாது’னு அம்மா அடிக்கடி சொல்வாங்க. யாழினி, தமிழினினு ரெண்டு குழந்தைகள்’’ என்று சு.வெங்கடேசன் ஒரு குடும்பத் தலைவனாகத் திருப்தியாகப் பேச,  உரையாடலில் இணைகிறார் கமலா.

``எங்க வீட்டில் நான் ஒரே பொண்ணு. கல்யாணமாகி ஆறு மாசங்கள்தான் இருக்கும். இவங்க பொதுக் கூட்டத்தில் பேசினதில் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் மேல கொலை வெறியோடு தாக்குதல் நடத்திட்டாங்க. அடுத்த நாலு, ஐந்து மாதங்கள் வரை இவங்க வெளியில கிளம்பினாலே எனக்குப் பயமா இருக்கும்.

ரெண்டு பொண்ணுங்களுக்கும் அப்பாதான் க்ளோஸ் ஃப்ரெண்ட்.  என்ன...

ஸ்கூல்ல ஃபார்ம் ஃபில்அப் பண்ணும் போது,  இவருடைய ‘ஆக்குபேஷன்’ என்ற இடத்தில் என்ன எழுதறது என்பதுதான் குழப்பமா இருக்கும். ‘காவல் கோட்டம்’ வந்தப்புறம் பெருமையோட ‘எழுத்தாளர்’னு போடறேன்.

இவங்க எழுதுறதை எல்லாம் முதல்ல படிக்கிறது நான்தான். நல்லா இருக்கிறதைச் சொல்றதைப் போலவே நெருடற இடங்களையும் சொல்வேன். அடுத்தடுத்த வருஷங்கள்ல இதெல்லாம் செய்யணும்னு பெரிசா ப்ளான் செய்யறது இல்லே. பிள்ளைகளுக்கு நல்லபடியா கல்வியைத் தரணும். அவ்வளவுதான்” என்று எளிமையோடு முடிப்பவரிடம், “கணவர் வாங்கித் தந்த பரிசுகளிலேயே உங்களுக்குப் பிடிச்சது எது?” என்றோம்.

“பரிசுப் பொருளா? அப்படியெல்லாம் அவர் கொடுத்ததே இல்லையே...” என்று சு.வெங்கடேசனைப் பார்த்துச் சிரிப்புடன் சொல்ல, மெள்ள அந்த இடத்தைவிட்டு நழுவுகிறார் எழுத்தாளர்.