Published:Updated:

சுங்கிடிதான் இனி டாப்!

சுங்கிடிதான் இனி டாப்!
பிரீமியம் ஸ்டோரி
News
சுங்கிடிதான் இனி டாப்!

ஃபேஷன்சாஹா - படங்கள் : P2CLICK - டிசைன் : தி ஸ்டிச்சஸ் - மேட் இன் மெட்ராஸ்

‘‘ சென்ற ஆண்டு கலம்காரி கொடிகட்டிப் பறந்தது. இந்த வருஷம் சுங்கிடி சீஸன். இனிவரும்  ஆண்டுகளிலும் சுங்கிடியோட மவுசு நிச்சயம் கூடும்...’’  - ஆடை ஆருடம் சொல்கிறார் ஃபேஷன் டிசைனர் துர்கா.

விஜய் டி.வி 'நீயா நானா' கோபிநாத்தின் மனைவி.

சுங்கிடிதான் இனி டாப்!

‘சுங்கிடியா... பெயரை    எங்கேயோ கேள்விப்பட்டது போலிருக்கே...’ என்பவர் முதல் `அது வயசானவங்க உடுத்தறதாச்சே’ என்பவர் வரை சுங்கிடியின் மதிப்பு தெரியாதவர்களின் பட்டியல் பெரிது. அதுமட்டுமல்ல... மலிவான விலையில் யாருக்காவது சேலை வாங்கித் தர நினைப்பவர்களின் முதல் சாய்ஸும் சுங்கிடிதான். இன்னும் கொஞ்ச நாள்களில் அருங்காட்சியகத்தில் மட்டுமே பார்வைக்குக் கிடைக்கும் என்கிற நிலையில் இருக்கும் சுங்கிடிக்குப் புது வடிவம் மட்டுமல்லாமல் புது அந்தஸ்தையும் ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் துர்கா.

‘`ஒரு காஸ்ட்யூம் டிசைனரா ஒவ்வொரு நிமிஷமும் என்னை நான் அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கணும். புதுசுப் புதுசா என்ன மெட்டீரியல்ஸ் வருதுனு பார்க்கணும். அப்படிப் பார்த்திட்டிருக்கும் போது மொத்த ஃபேப்ரிக்ஸுக்குமான ஒரு மேப் சமூக வலைதளத்துல பிரபலமா போயிட்டிருந்தது. அதுல தமிழ்நாட்டின் பெருமை பேச வெறும் காஞ்சிபுரம் சேலை மட்டும்தான் இருந்ததைப் பார்த்தபோது பெரிய அதிர்ச்சியா இருந்தது. அப்பதான் சுங்கிடியை மீட்டெடுக்கிறதுக்காக ஏதாவது செய்யணும்னு தோணினது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சுங்கிடிதான் இனி டாப்!

மதுரையின் பெருமை பேசற விஷயங்களில் சுங்கிடிச் சேலைகளும் முக்கியமானவை. பாந்தினி, கலம்காரினு இன்னிக்கு நாம பெரிசா பேசற பல டிசைன்களும் நம்ம பாரம்பர்யத்தைச் சேர்ந்தவை இல்லை. ஆனா, சுங்கிடிச் சேலைகளுக்குப் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்டிருப்பதோடு, மதுரையின் பாரம்பர்ய அடையாள மாகவும் அறிவிக்கப்பட்டிருக்கு.  ஆனாலும், சுங்கிடியின் மீதான மக்களின் கவனம் குறைவாகவே இருக்கு. அதனாலதான் வயசான வங்களுக்கு மட்டுமே பிடிச்ச சுங்கிடியில் இளம் பெண்களும் விரும்பற மாதிரியான டிரஸ் டிசைன்களை உருவாக்கியிருக்கேன்...’’ என்கிற துர்கா, சுங்கிடி மெட்டீரியலில் இன்றைய இளம்பெண்கள் மத்தியில் ட்ரெண்டில் இருக்கும் ஃபுல் டிரஸ்களை டிசைன் செய்திருக்கிறார்.

‘`சல்வார், காக்ரா, அனார்கலி சீஸனெல்லாம் முடிஞ்சு, இது ஃபுல் டிரஸ் சீஸன். அந்தக் காலத்து மேக்ஸி மாதிரி கால்கள் வரை நீளம் வெச்சுத் தைக்கிற ஃபுல் டிரஸ் பிரபலமாகிட்டிருக்கு. அதனாலதான் முதல் முயற்சியை அந்த டிரஸ்லேருந்தே ஆரம்பிச்சேன். சாம்பிளுக்குப் பண்ணினதைப் பார்த்துட்டு ஏகப்பட்ட ஆர்டர்கள் குவியறது சந்தோஷத்தைக் கொடுக்குது.

சுங்கிடிதான் இனி டாப்!

முன்னல்லாம் சுங்கிடின்னா மாம்பழ கலர் உடல், மெரூன் பார்டர் அல்லது சந்தன கலர்ல மெரூன் பார்டர்னு குறிப்பிட்ட சில காம்பினேஷன்ஸ்தான் வந்திட்டிருந்தது. இன்னிக்கு வித்தியாசமான கலர் காம்பி னேஷன்ஸ்ல கிடைக்குது.

`சுங்கிடி எனக்கு செட் ஆகுமா?’ங்கிற கேள்வி நிறைய பேருக்கு இருக்கும். சுங்கிடியோ, பட்டோ... அதை யார், எப்படி உடுத்தறாங்க என்பதைப் பொறுத்துதான் பொருந்துமா, இல்லையானு சொல்லணும். குண்டா உள்ள ஒருத்தங்க காட்டன் சேலை உடுத்தியிருப்பாங்க. அதை உடுத்தின விதத்துல அவங்க குண்டா இருக்கிறதே தெரியாது. அந்த வகையில சுங்கிடி மெட்டீரியல் எந்த வயசுக்காரங்களுக்கும் எப்படிப்பட்ட உடல் வாகுள்ளவங்களுக்கும் பொருந்தும். அடுத்து ஸ்கர்ட் உள்ளிட்ட மத்த உடைகளையும் சுங்கிடியில அறிமுகப்படுத்தற ஐடியா இருக்கு. பட்டு எப்படி எப்போதும் எல்லா பெண்களால யும் விரும்பப்படற ஓர் இடத்துல இருக்கோ, அதுக்கு நிகரா சுங்கிடியையும் கொண்டு வருவோம்...’’ - துர்காவின் விவரிப்பில் சுண்டி இழுக்கிறது சுங்கிடி!