Published:Updated:

ஆண்பிள்ளைகள் அழலாம்!

ஆண்பிள்ளைகள் அழலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்பிள்ளைகள் அழலாம்!

ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?யாழ் ஸ்ரீதேவி

ம்பளப்புள்ள அழலாமா?’ - நம் குடும்பங்களில் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள் இவை. ஆண்கள் மட்டுமல்ல; ஆண் குழந்தைகள் அழுவதுகூட இங்கு அவமானம் என்று அறிவுறுத்தப்படுகிறது. ‘அழுகிற ஆம்பளையை நம்பக் கூடாது’ என்கிற பழமொழி, ஆணின் அழுகையைச் சந்தேகத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாக்குகிறது. இதுவே பெண் அழுவது, அவளது இயலாமையின் மொழியாகப் பார்க்கப்படுகிறது. அவளது அழுகையைச் சமூகம் அங்கீகரிக்கிறது. உச்சபட்சமாக, ‘பெண்களின் கண்ணீர்த்துளிக்குப் பெரிய சக்தி இருக்கிறது’ என்று அது வலிமைமிக்கதாகக் கட்டமைக்கப்படுகிறது.

‘`உடலியல் அடிப்படையில்தான் ஆண், பெண் வேறுபாடே அன்றி, உணர்வுகளால் அல்ல. குறிப்பாக, கண்ணீர் என்ற உணர்ச்சிநிலையை அடக்கச்சொல்வதால் ஏற்படும் பாதிப்புகள் நிறைய’’ என்று சொல்லும் சேலத்தைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் தேவிப்பிரியா, அதுபற்றி விரிவாக விளக்குகிறார்.

ஆண்பிள்ளைகள் அழலாம்!

அழுகைக்குப் பாலினம் இல்லை!

கண்ணீர், இருபாலினத்தவர்களுக்கும் பொதுவானதோர் உணர்வு. இயலாமை, இழப்பு, கோபம், வலி எனக் கண்ணீருக்கான காரணங்களை இருபாலருமே கடக்க நேரிடும்போது, ‘நீ ஆண், அதனால் அழுகையை நீ அடக்க வேண்டும்’ என்று சொல்வதை ஆண்களின் மீதான வன்முறை என்றே சொல்லலாம். மனதுக்குள் மேகமாகத் திரளும் வேதனையைக் கண்ணீராக வெளியேற்றும் வாய்ப்பு பெண்களுக்குக் கிடைக்கிறது. ஆனால், அந்த வடிகால் கிடைக்கப்பெறாத ஆண்கள் பாவம்தானே?

அழுகை அறிவியல்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆண்பிள்ளைகள் அழலாம்!


அழுகை எங்கிருந்து உருவாகிறது? ஒருவர் உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில், கண்களில் உள்ள லாக்ரிமல் சுரப்பியில் இருந்து கண்களை உறுத்தாத வகையில் நீர் சுரக்கிறது. இந்தச் சுரப்பி, மூளையின் உணர்வுகள் தொடர்புள்ள பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. கண்களில் தூசு விழுவதாலும் வலியாலும் ஏற்படும் கண்ணீருக்கும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வெளிப்படும் கண்ணீருக்கும் தன்மை மாறுபடுகிறது. உணர்ச்சியின் வெளிப்பாடாகக் கசியும் கண்ணீரில் அதிகளவில் ப்ரொலாக்டின் (Prolactin), அட்ரினோகார்டிகோட்ராபிக் (Adrenocorticotropic), லியு-என்கபாலின் (Leu-enkephalin) போன்ற ஹார்மோன்களும், பொட்டாசியம், மாங்கனீஸ் போன்றவையும் உள்ளன. மனஅழுத்தத்துக்குக் காரண மான ஹார்மோன்களில் ஒன்றான அட்ரினோகார்டிகோட்ராபிக் அழுகையின் போது அழிக்கப்படுவதால்தான், அழுத பின்னர் சற்றே ஆறுதலாகவும் ஆற்றுப் படுத்தப்பட்டதாகவும் உணர்கிறார்கள். எளிமையான, இயற்கையான ஸ்ட்ரெஸ் பஸ்டரான இந்த அழுகை ஆண்களுக்கு மறுக்கப்படுவது அநியாயம் இல்லையா?

எதிர்விளைவுகள்!

அழுகை என்பது குழந்தைகளின் மொழி. பசி, தூக்கம், பயம் எனத் தங்களால் வார்த்தைகளில் உணர்த்தமுடியாத தேவைகளை அழுகை மொழியில் நமக்குச் சொல்வார்கள். ஆனால், பல் முளைத்த பருவத்திலேயே ஆண் குழந்தைகளை ‘ஆண்களாக’ அழகுபார்க்கத் தொடங்கிவிடும் நம் பெண்கள், விவரம் தெரியும் வயதில் ‘ஆண் குழந்தை அழக் கூடாது’ என்கிற கற்பிதத்தை அவர்களை வெற்றிகரமாக நம்பவைத்து விடுகிறார்கள். 10, 12 வயதிலெல்லாம் ஓர் ஆண் குழந்தை பொதுவெளியில் தன் அழுகையை அடக்கிக்கொள்ளப் பழகி விடுகிறது. சினிமாவில்கூட ஹீரோ, யார் முன்னிலையிலும் அழாமல், தனியறையில் தனக்குள் அழுவதாகவே காட்டுகிறார்கள்.

ஆண்பிள்ளைகள் அழலாம்!

இப்படி இயற்கைக்கு எதிரான சமூக மதிப்பீடுகளால், தோல்வி, துயரம், ஏமாற்றம் போன்றவற்றுக்கு வடிகால் கிடைக்காத ஆண்கள் மது, போதை மருந்து போன்ற வேறு ஜன்னல்களைத் தேடிச் சரணடைகிறார்கள். ஆம், ஆணின் அழுகையைக் கட்டுப்படுத்தும் சமூக மனப்பான்மையின் விளைவுகள் விபரீத மானவை. அவை ஆணின் வாழ்வை மறை முகமாகக் கடினமானதாக மாற்றுகின்றன. இயல்பான உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல், ‘ஆண்’ என்ற ஈகோ அவர்களை ஒரு நாடகத்தனமான வாழ்க்கைக்குப் பழக்கப்படுத்துகிறது. ஆண்களை அதிகம் பாதிக்கும் இதயநோய்கள், நீரிழிவுக் குறைபாடு போன்றவற்றுக்கும் இவ்வாறான வெளிப்படுத்த முடியாத அழுத்தங்களும் முக்கியக் காரணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது சொல்லுங்கள்... உங்கள் வீட்டு ஆண் குழந்தைகளும், ஆண்களும் அழலாம்தானே? அவர்களின் அழுகை இழிவானதன்று, இயல்பானது என்பது புரிகிறதுதானே? ஆண் - பெண் குழந்தை வளர்ப்பில் கடைப்பிடிக்கப்படும், `ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள்' என்ற எண்ணத்தை விதைக்கும் இதுபோன்ற அர்த்தமற்ற பாகுபாடுகள் அழிக்கப்பட வேண்டும்தானே?

ஆண்பிள்ளைகள் அழலாம்!

அழுவது இயல்பான குணமே!

டென்னிஸ் விளையாட்டு வீரர் ஃபெடரர், போட்டிகளில் வெற்றி, தோல்வி என எந்த முடிவு வந்தாலும் அழுகையால் தன் உணர்வுகளை வெளிப்படுத்திவிடுவார். இதற்கான காரணத்தை அவர் சொல்லும்போது, ‘`விளையாட்டு வீரர்கள் உணர்ச்சிவசப்பட்டு அழுவதை, அந்தச் சூழலில் அவர்களின் மனதை ரசிகர்களால் புரிந்துகொள்ள முடியும். அழுவது ஆண்களுக்கும் இயல்பான குணம்தான்!’’