Published:Updated:

20 ஆயிரம் பெண்களைப் படிக்க வைத்த தொழிலதிபர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
20 ஆயிரம் பெண்களைப்  படிக்க வைத்த தொழிலதிபர்!
20 ஆயிரம் பெண்களைப் படிக்க வைத்த தொழிலதிபர்!

தெ.சு.கவுதமன்

பிரீமியம் ஸ்டோரி

தொழிற்துறையினரையும் தொழில்முனை வோரையும் கெளரவிக்கும் விதமாக முதன்முறையாக, நாணயம் விகடன் ‘பிசினஸ் சூப்பர் ஸ்டார் அவார்ட்ஸ்’ வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் சென்னையில் நடைபெற்றது.  

20 ஆயிரம் பெண்களைப்  படிக்க வைத்த தொழிலதிபர்!

அத்தனை பெண்களுக்கும் கல்வி

கோவை அருகிலுள்ள கள்ளியம்புதூர் குக்கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் கே.பி.ஆர். மில் லிமிடெட்டின் தலைவர் கே.பி.ராமசாமி.  இவர் தன் மில்லில் பணியாற்றும் 20 ஆயிரம் பெண்களைப் படிக்க வைத்திருக்கிறார். கடின உழைப்பின் மூலம் முன்னேறிய  இவருக்கு ‘செல்ஃப் மேட் ஆந்த்ரபிரனார்’ விருதினை டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.தினேஷ் வழங்கினார்.

“எங்கள் நிறுவனங்களில் 20 ஆயிரம் பெண்கள் பணியாற்றுகிறார்கள். அவர்கள் அனைவரும் தொடர்ந்து கல்வி கற்று மேல்நிலைக்கு வருவதற்கான அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்கிறோம். அதிக மதிப்பெண் பெறும் தொழிலாளர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கான முழுச்செலவையும் ஏற்றுக் கொள்கிறோம். தொழிலாளர்களை உற்சாகப் படுத்தி, அவர்களது நலனில் அக்கறை செலுத்தினால், நிறுவனத்தின் உற்பத்தியைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை” என்றார் கே.பி.ராமசாமி.

20 ஆயிரம் பெண்களைப்  படிக்க வைத்த தொழிலதிபர்!

திருமணத்தில் தொழில் புரட்சி

லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் திருமணம் என்கிற பந்தத்தில் ஒன்றுசேரக் காரணமாக இருப்பவர் `மேட்ரிமோனி.காம்' என்ற இன்னோவேட்டிவ் நிறுவனத் தின் சி.இ.ஓ முருகவேல் ஜானகிராமன்.  இவரது புதுமைப் பணியைப் பாராட்டி `பிசினஸ் இன்னோவேஷன்' விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு சி.ஐ.ஐ-யின் சேர்மன் பி.ரவிச்சந்திரன் இந்த விருதை வழங்கினார். “தேவைதான் நம் வாழ்க்கையில் அனைத்தையுமே தீர்மானிக்கிறது. திருமணச் சந்தையில் இன்னோவேஷனுக்கான அவசியம் இருப்பதை அறிந்து அதை உருவாக்கினோம்.

இப்போது மேட்ரிமோனி.காம் 15 மொழி களில் செயல்படுகிறது'' என்றார் முருகவேல் ஜானகிராமன். 

வளரும் நட்சத்திரம் 


நடுத்தர வர்க்கத்துக் குடும்பப் பின்னணி யிலிருந்து வந்து, இன்று எக்விட்டாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் என்ற பெயரில்  சிறிய வங்கியை உருவாக்கியிருக்கிறார் பி.என்.வாசுதேவன். இவருக்கு ‘ரைசிங் ஸ்டார்’ விருது வழங்கப்பட்டது. பொன்ப்யூர் நிறுவனத்தின் தலைவர் பொன்னுசாமி இந்த விருதை வழங்கினார்.

20 ஆயிரம் பெண்களைப்  படிக்க வைத்த தொழிலதிபர்!

குடும்பத்துக்கு நன்றி

பிசினஸ் தொடங்க விரும்பும் பல ஆயிரம் பேருக்குச் சரியாக வழிகாட்டிவருகிறார்   கவின்கேர் சி.கே.ரங்கநாதன். இவருக்கு `பிசினஸ் மென்டார்' விருதை, டை (TiE) சென்னை அமைப்பின் தலைவர் வி.சங்கர் வழங்கினார். “நான் பெற்ற அனுபவத்தை மற்றவர்களுக்கு வழங்குவதற்குத் தேவையான நேரத்தை அளித்த என் குடும்பத்தினருக்கே நான் நன்றி சொல்ல வேண்டும்'' என்றார் சி.கே.ரங்கநாதன்.

ஒருசேர வந்திருந்த நிர்வாகிகள்

தொழில்முனைவோர் சிலர் ஒன்று சேர்ந்து கோவையில் தொடங்கிய அமைப்புதான் கொடீசியா. 1969-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் இன்று பல ஆயிரக்கணக்கான தொழில்முனைவோர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தொழில்முனைவோர் வளர்ச்சியிலும், தொழில் துறை வளர்ச்சியிலும் பங்கு வகிக்கும் இந்த அமைப்பின் தலைவர்  வி.சுந்தரத்துக்கு பிசினஸ் மென்டார் (அமைப்பு) விருதினை தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடுத் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் வழங்கினார். இந்த விருதினை வாங்க கொடீசியா அமைப்பின் நிர்வாகிகள் ஒன்பது பேரும் ஒருசேர வந்திருந்தது கண்டு எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.

வி.சுந்தரம் பேசுகையில், “எங்களுடைய சீனியர்கள் விடாமுயற்சியுடன் குழுவாக செயல்பட்டு இந்த அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். தற்போது 2,500 உறுப்பினர்கள் இணைந்து 100 கோடி முதலீட்டில் பாதுகாப்பு தளவாடக் கருவிகள் தயாரிப்பு திட்டத்தில் இறங்கி இருக்கிறோம். இதுவே, எங்களுடைய அடுத்த நிலைக்கான வெற்றி” என்றார்.
 

சமூகப்பணிக்கு ஓர் அங்கீகாரம்

40 வருடங்களுக்கும் மேலாகத் தரமான மருத்துவத்தை அனைவருக்கும் வழங்கிவரும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு ‘சோஷியல் கான்சியஸ்னஸ் விருது’ வழங்கப் பட்டது. இந்த  மருத்துவமனையின் கெளரவத் தலைவர் டாக்டர் பி.நம்பெருமாள்சாமிக்கு பண்ணாரி அம்மன் ஸ்பின்னிங் மில்ஸ் சேர்மன்

எஸ்.வி.ஆறுமுகம் இந்த விருதினை வழங்கினார். டாக்டர் நம்பெருமாள்சாமி, “தமிழக அளவில் கண் அறுவைசிகிச்சைகளில் 45% அரவிந்த் கண் மருத்துவமனையில்தான் செய்யப்படுகின்றன. இந்திய அளவில் 5% கண் அறுவைசிகிச்சைகள் அரவிந்த் கண் மருத்துவமனையில் செய்யப்படுகின்றன'' என்றார் டாக்டர் நம்பெருமாள்சாமி.

20 ஆயிரம் பெண்களைப்  படிக்க வைத்த தொழிலதிபர்!

ஜீரோ டு ஹீரோ

ஒரு பிசினஸைத் தொடங்கி வளர்த்து அடிபட்டு, ஜீரோ நிலைக்கு வந்து மீண்டும் முதலிலிருந்து ஆரம்பித்து ஜெயித்தவர் கேப்ளின் பாய்ன்ட் லேபரட் டரீஸ் நிறுவனத்தின் தலைவர் சி.சி.பார்த்திபன். அவருக்கு கோல்டன் ஃபீனிக்ஸ் விருதினை, எம்எம் ஃபோர்ஜிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வித்யாசங்கர் கிருஷ்ணன் வழங்கினார்.

“கஷ்டங்களையே நினைத்துக் கொண் டிருந்தால் உடைந்துபோய் நோயாளியாகவே வாழ்க்கையைத் தள்ள வேண்டியிருக்கும். தோல்வி என்பது வாழ்க்கையின் முடிவு கிடையாது. ரிஸ்க் எடுத்துச் செயல்பட்டால் நிச்சயம் வளர முடியும்” என்று சி.சி.பார்த் திபன் கூறியது எல்லோருக்கும் உற்சாகம் அளிப்பதாக இருந்தது.

நல்லதொரு தொடக்கம் 


கிரெடிட் கார்டு தொடங்கி இன்ஷூரன்ஸ், கடன், முதலீடு என அனைத்து வங்கிச் சேவைகளுக்கும் ஆன்லைன்மூலம் தீர்வு வழங்குகிறது பேங்க் பஜார் நிறுவனம். இந்த நிறுவனத்தைத் தொடங்கிய அதில் ஷெட்டிக்கு, ஸ்டார்ட் அப் சாம்பியன் விருதை, லைஃப்செல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சேர்மன் எஸ்.அபய குமார் வழங்கினார்.

20 ஆயிரம் பெண்களைப்  படிக்க வைத்த தொழிலதிபர்!

நூற்றாண்டுப் பெருமை

நூற்றாண்டைக் கடந்தும் நிற்கும் தமிழகத்தின் மிகச் சில வெற்றி நிறுவனங்களில், டி.வி.எஸ் குழுமத்துக்கு எப்போதுமே தனியிடம் உண்டு. தொழில்துறையின் வளர்ச்சிக்குப் பெரும்பங்கு ஆற்றியுள்ள சுந்தரம் ஃபாசனர்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான  சுரேஷ் கிருஷ்ணாவுக்கு ‘லைஃப் டைம் அச்சீவ்மென்ட் அவார்டு’ வழங்கப்பட்டது. ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் தலைவர் ஆர்.தியாகராஜன் இந்த விருதை வழங்கினார்.

“நல்ல ஊழியர்களே ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு அடிப்படைக் காரணம். அப்படிப்பட்ட ஊழியர்களின் கனவை நிறைவேற்றுவது ஒரு நிறுவனத்தின் பொறுப்பு. அதை நாங்கள் நிறைவேற்றி இருப்பதால், கடந்த ஐம்பதாண்டுகளில் ஒருநாள்கூட வேலை நிறுத்தம் இல்லாமல்  நிறுவனத்தை நடத்தி வருகிறோம்’’ என்றார் சுரேஷ் கிருஷ்ணா பெருமையாக.

முன்னதாக விகடன் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

`உத்வேகத்துடன் செயல்பட ஊக்கமாக அமைந்திருந்தது இந்த நிகழ்ச்சி' என்று பாராட்டிச் சென்றார்கள் பார்வையாளர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு