Published:Updated:

“பிடிச்சதை செய்யுங்க... பெருசா யோசிங்க!”

“பிடிச்சதை செய்யுங்க... பெருசா யோசிங்க!”
பிரீமியம் ஸ்டோரி
“பிடிச்சதை செய்யுங்க... பெருசா யோசிங்க!”

ஆப்பிரிக்கக் காடுகளில் கலக்கும் தமிழ் போட்டோகிராபர்த்ரில்... திகில்...கு.ஆனந்தராஜ் - படங்கள் : உஷா ஹரீஷ்

“பிடிச்சதை செய்யுங்க... பெருசா யோசிங்க!”

ஆப்பிரிக்கக் காடுகளில் கலக்கும் தமிழ் போட்டோகிராபர்த்ரில்... திகில்...கு.ஆனந்தராஜ் - படங்கள் : உஷா ஹரீஷ்

Published:Updated:
“பிடிச்சதை செய்யுங்க... பெருசா யோசிங்க!”
பிரீமியம் ஸ்டோரி
“பிடிச்சதை செய்யுங்க... பெருசா யோசிங்க!”

வீடியோ காலில் பேசத் தொடங்கியதுமே வார்த்தைகளுடன் புன்னகையைக் கோத்துக்கொள்கிறார் உஷா ஹரீஷ். கென்யாவில் வசிக்கும் தமிழ்ப் பெண்ணான இவர், பிரபல வைல்டு லைஃப் போட்டோகிராபர். ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள பல காடுகளுக்கும் தொடர்ந்து பயணித்து, துணிச்சலுடன் வன விலங்குகளை `க்ளிக்’கிக்கொண்டிருக்கிறார். 

“பிடிச்சதை செய்யுங்க... பெருசா யோசிங்க!”

“பெற்றோருக்கு தமிழ்நாடு பூர்வீகம். மிடில் கிளாஸ் குடும்பம். என் குழந்தைப் பருவத்தில் கோயம்புத்தூர் மருதமலை அடிவாரத்தில் வசிச்ச நாள்கள், ரொம்பவே அழகானவை. ப்ளஸ் டூ-வில் பிசினஸ் மேத்ஸ் சப்ஜெக்ட்டில் மாநிலத்தில் முதலிடம் பெற்றேன். அப்புறம் சார்ட்டர்டு அக்கவுன்ட்டன்ட் படிப்பை முடிச்சுட்டு வேலைபார்த்தேன். அப்போ ஓய்வுநேரத்தில் வெளியிடங்களுக்குப் போய் `பேசிக்' மாடல் கேமராவால் போட்டோஸ் எடுத்திட்டிருந்தேன். 2006-ம் வருஷம் கல்யாணமாச்சு. கணவர் ஹரீஷ் தியாகராஜனும் சார்ட்டர்டு அக்கவுன்ட்டன்ட். அவருக்குக் கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள கென்யாவில் ஒரு கம்பெனியில வேலை கிடைச்சது. 2008-ல் கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் செட்டில் ஆனோம்’’ என்கிற உஷாவுக்கு, அங்குதான் வைல்டு லைஃப் போட்டோகிராபி மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“பிடிச்சதை செய்யுங்க... பெருசா யோசிங்க!”

“ஆப்பிரிக்கக் கண்டத்தில் நிறைய சரணாலயங்கள் இருக்கு. ‘மசாய் மாரா’ தேசிய சரணாலயத்துக்குக் கணவரும் நானும் ட்ரிப் போனப்போ, அத்தனை மிருகங்களையும் சில மீட்டர் தூரத்தில், அதுவும் பல நூறு எண்ணிக்கையில் நேரடியாகப் பார்த்தது சிலிர்ப்பா இருந்தது. அவற்றையெல்லாம் `பேசிக்' கேமராவில் போட்டோ எடுத்தப்போ, பிரமிப்பு கலந்த சந்தோஷம் ஏற்பட்டது. தொடர்ந்து பல சரணாலயங்களுக்கும் போய் மிருகங்களைப் பத்தி நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டேன். இந்நிலையில் பையன் ஷாஸ்வத் ஹரீஷ் பிறந்தான். குழந்தையைப் பார்த்துக்கறதுக்காக சி.ஏ வேலையிலிருந்து பிரேக் எடுத்துக்கிட்டேன். அப்போ புது கேமரா (Canon 60 d with 70 - 300 mm) வாங்கி, அதன் ஆபரேட்டிங் விஷயங்களை இன்டர்நெட் வாயிலாகவும், பிராக்டிகலா ஃபாரஸ்ட்டுக்குப் போய் போட்டோ எடுத்தும், ஃப்ரெண்ட்ஸ் மூலமாகவும் கத்துக்கிட்டேன்” என்பவர், தன்னை முழுநேர வைல்டு லைஃப் போட்டோகிராபராக வளர்த்துக்கொண்டு, சி.ஏ வேலையைக் கைவிட்டிருக்கிறார்.

“பிடிச்சதை செய்யுங்க... பெருசா யோசிங்க!”

“பையனுக்கு மூணு வயசானதும் ஸ்கூல்ல விட்டுட்டு, நான் கேமரா பேகோடு காடுகளுக்குப் போக ஆரம்பிச்சேன். குழந்தையைப் பார்த்துக் கிறதிலும், என் வேலையிலும் கணவர் எப்போதும் எனக்கு உதவியா இருக்கார். இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட காட்டுப் பயணங்கள் போயிருக்கேன். இந்தியாவின் சில காடுகளிலும், ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருக்கும் பல நாடுகளிலுள்ள காடுகளிலும் கேமராவோடு அலைஞ்சிருக்கேன்.  காலை 6 - 10 மணி மற்றும் மாலை வேளையில் விலங்குகள் ஆக்டிவா இருக்கும். படம் எடுக்கிறதுக்கான சரியான நேரம் அது. இடைப்பட்ட நேரத்தில், வெயிலின் தாக்கத்தால் அவை ஓய்வெடுக்கும்போது போட்டோ எடுப்பது அபாயகரமானது. சிங்கம், புலி, சிறுத்தை போன்ற மிருகங்கள் இரையை வேட்டையாடி ரத்தம் சொட்டப் பசியாறும் காட்சிகளை உடல் சிலிர்க்க அருகிலிருந்து புகைப்படங்கள் எடுத்த அனுபவங்களெல்லாம் ‘வாவ்!’ ரகம்’’ என்கிற உஷா, இப்போது மூன்று கேமராக்கள் (Canon - 1 dx Mark II, 5 d Mark III, 6 d) பயன்படுத்துகிறார்.  

“பிடிச்சதை செய்யுங்க... பெருசா யோசிங்க!”

“ஒருமுறை சிறுத்தை ஒண்ணு டக்குனு நான் பயணம் செய்த ஜீப்மேல ஏறி நின்னுடுச்சு. எனக்கும் சிறுத்தைக்கும் இடையே சில அடி இடைவெளிதான். உயிர் உறைஞ்சுபோன அந்த நொடியிலும், அசையாமல் அமர்ந்தவாறு அதை போட்டோ எடுத்தேன். என்னை முறைச்சுப் பார்த்துட்டு, சில நிமிடங்களில் அதுவாகவே இறங்கிப்போயிடுச்சு. மூர்க்கமாயிருந்த ஒரு தனி யானை துரத்த, ஜீப்பில் இருந்தபடியே தப்பிப் பிழைத்தத் தருணமும் மறக்க முடியாதது. மானை வேட்டையாடி சாப்பிட்டுட்டு இருந்த சிங்கம், சில மீட்டர் இடைவெளியில் ஜீப்பில் இருந்தபடி அதை போட்டோ எடுத்திட்டு இருந்த எங்களை நோக்கிவர, மரணம் தப்பிய தருணம் அது.  

“பிடிச்சதை செய்யுங்க... பெருசா யோசிங்க!”

இப்போது உலகத்துலேயே 900 கொரில்லாக்கள் மட்டுமே வசிக்கின்றன. அதனால், அவற்றைப் படம் எடுப்பதில் எனக்கு ஆர்வமும் அக்கறையும் அதிகம். ஒருமுறை உகாண்டாவில் திடீர்னு என் பின்னால் ஒரு கொரில்லா வந்து நிற்க, என்ன செய்யறதுனு நான் யோசிக்கிறதுக்குள்ள, 20 நொடிகளில் அதுவே திரும்பிப் போயிடுச்சு. 

“பிடிச்சதை செய்யுங்க... பெருசா யோசிங்க!”

விலங்குகள், மனிதனை ஒரு விலங்காகத்தான் பார்க்கும். மனித விலங்கால் அவற்றுக்குத் தொந்தரவும் அச்சமும் ஆபத்தும் ஏற்படாத வரை அவற்றால் மனிதனுக்கு எந்தத் தொந்தரவும் நேராது. ‘மிருகங்களோடு செல்ஃபி எடுத்துக்கிறேன்’னு அதை தொந்தரவு செய்றது, நாம கொண்டுபோகும் உணவுகளைக் கொடுத்து அதை டெம்ப்ட் பண்ணுறது, அது பசி, கோபம் அல்லது சோர்வில் இருக்கும்போது... இப்படி சூழ்நிலை தெரியாம அவற்றை நெருங்கினால் நம்ம உயிருக்கான உத்தரவாதம் குறைஞ்சுபோகும்’’ என்கிற உஷாவின் புகைப்படங்களை ‘www.ushaharish.com’ இணையதளத்தில் காணலாம். சிறந்த புகைப்படக் கலைஞருக்கான `ஈஸ்ட் ஆப்பிரிக்கன் வைல்டு லைஃப் போட்டோ
கிராபர் ஆஃப் 2016’ மற்றும் ‘ஷூட் தி ஃப்ரேம் இன்டர்நேஷனல் போட்டோகிராபி’ விருதுகளை வென்றிருக்கும் உஷா, கண்காட்சிகள் நடத்துவதுடன், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்கிறார். மேலும், உலகின் பல நாடுகளிலிருந்து தென்னாப் பிரிக்கக் காடுகளைச் சுற்றிப் பார்க்க வரும் பயணிகளுக்கு வழிகாட்டியாகவும் பணியாற்றுகிறார். 

“பிடிச்சதை செய்யுங்க... பெருசா யோசிங்க!”
“பிடிச்சதை செய்யுங்க... பெருசா யோசிங்க!”

“போட்டோகிராபர் மற்றும் டிராவல் கைடு பணியில், ஆபீஸ் போறதுக்கு இணையான மற்றும் நிலையான வருமானம் வராது. ஆனா, எந்த வேலையிலேயும் கிடைக்காத திருப்தியும், வர்ணிக்க  முடியாத சந்தோஷமும் இதில் கிடைக்குது. இதுக்கு விலைமதிப்பு கிடையாது. மாதத்துல குறைந்தபட்சம் பத்து நாள்கள் ஃபாரஸ்ட்டுக்கு போட்டோ எடுக்கப் போயிடுவேன்.  

“பிடிச்சதை செய்யுங்க... பெருசா யோசிங்க!”
“பிடிச்சதை செய்யுங்க... பெருசா யோசிங்க!”

நேரம் கிடைக்கிறப்போ எல்லோரும் தங்கள் பக்கத்திலிருக்கிற ஏதாச்சும் ஒரு மிருகக்காட்சி சாலை அல்லது சரணாலயத்துக்குக் குடும்பத்தோடு போங்க. மனசுக்குப் புத்துணர்வு மற்றும் சந்தோஷம் கிடைக்கும்.  

“பிடிச்சதை செய்யுங்க... பெருசா யோசிங்க!”
“பிடிச்சதை செய்யுங்க... பெருசா யோசிங்க!”

மலையடிவார கிராமத்தில் வளர்ந்த நான் இப்போ வைல்டு லைஃப் போட்டோகிராபர். எல்லைக்கோடுனு ஒண்ணு எதுவும் இல்லை நமக்கு. பிடிச்சதைச் செய்யுங்க, பெருசா யோசிங்க’’ என தம்ஸ்அப் காட்டிச் சிரிக்கிறார் உஷா.

“பிடிச்சதை செய்யுங்க... பெருசா யோசிங்க!”

ஒரு வாரத்துக்கும் மேல் எரிந்த யானை தந்தங்கள்!  

“பிடிச்சதை செய்யுங்க... பெருசா யோசிங்க!”

“ஆப்பிரிக்காவில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதும், வேட்டையாடப்பட்ட விலங்குகள் மற்றும் யானை தந்தங்கள் கென்யாவுக்குக் கடத்தப்படுவதும் அதிகமா நடக்குது. சட்டத்துக்குப் புறம்பான இந்தச் செயல்களைத் தடுக்க, இங்கிருக்கும் அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்குது. அப்படி கென்ய வரலாற்றில் இரண்டாவது முறையா 2016-ம் வருஷம்,  கடத்தல்காரர்கள்கிட்டேருந்து பறிமுதல் செய்யப்பட்ட பல நூறு டன் யானை தந்தங்களை ஓரிடத்தில் அடுக்கிவெச்சு எரித்த நிகழ்வு நடந்தது. கென்ய அதிபர் தந்தங்களுக்குத் தீ மூட்ட, கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கும் மேல் அவை எரிந்தன. அதை போட்டோ எடுக்கச்சென்ற பல புகைப்படக்காரர்களில் நானும் ஒருத்தி. ஆயுளுக்கும் மறக்கமுடியாத, ரொம்ப அதிர்ச்சியான அனுபவம் அது. அந்தப் பல்லாயிரம் தந்தங்களையும் பார்த்தப்போ, பல்லாயிரம் யானைகளின் மரணத்தின் வலியை உணரமுடிந்தது’’ என வருந்துகிறார் உஷா. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism