Published:Updated:

ஆடு வளர்க்க ஆசை!

ஆடு வளர்க்க ஆசை!
பிரீமியம் ஸ்டோரி
ஆடு வளர்க்க ஆசை!

வழிகாட்டிதுரை.நாகராஜன்

ஆடு வளர்க்க ஆசை!

வழிகாட்டிதுரை.நாகராஜன்

Published:Updated:
ஆடு வளர்க்க ஆசை!
பிரீமியம் ஸ்டோரி
ஆடு வளர்க்க ஆசை!

தனி கட்டடத்தில், முதல் தளத்தில் வசிக்கும் என் வீட்டில், பத்துக்கு ஆறு அடி அளவில் பால்கனி உள்ளது. மொட்டை மாடியும் உள்ளது. இந்த வசதியில் ஒரே ஓர் ஆடு வளர்க்க விரும்பும் என் ஆசை சாத்தியமாகுமா?

- எஸ்.தனலட்சுமி, ஈரோடு


மொட்டை மாடியில் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுவரும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அன்னலட்சுமி வழிகாட்டுகிறார்...  

ஆடு வளர்க்க ஆசை!

“இது சாத்தியம்தான். ஆனால் அதிக அளவு பராமரிப்புப் பணிகளில் ஈடுபட வேண்டியிருக்கும். தனி வீடாக என்றால், கிராமத்தில் உள்ளது போன்று இடவசதி இருந்தால் ஆடு வளர்க்கலாம். வீடுகள் நெருக்கமாக இருந்தால் அடுத்தவர்களுக்கும், வீட்டின் கீழ்த்தளத்தில் வசிப்பவர் களுக்கும் ஆடு வளர்ப்பு இடை யூறாக இருக்கும். அவர்கள் ஏதும் சொல்லவில்லை என்றால் நிச்சயமாக ஆடு வளர்க்கலாம்.

குறைந்தது இரண்டு (ஓர் ஆண், ஒரு பெண்) ஆடுகளை வளர்க்கலாம். ஒரேயொரு ஆட்டை மட்டும் வளர்த்தால் குட்டியிலிருந்து வளர்க்க வேண்டும். ஆடுகளுக்குக் கொட்டில், இரண்டு வேளை உணவு, இடையில் தண்ணீர் கொடுக்க வேண்டும். தினமும் காலை, மாலை என இருவேளையிலும் ஆடுகளை அடைக்கும் இடத்தைக் கழுவி விட வேண்டும். இதுபோன்ற பராமரிப்பு ஆடுகளுக்கு மிக மிக அவசியம்.

வாழ்த்துகள்!” 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism