Published:Updated:

சிறுமை கண்டு பொங்குவாய்!

சிறுமை கண்டு பொங்குவாய்!
பிரீமியம் ஸ்டோரி
சிறுமை கண்டு பொங்குவாய்!

நெருஞ்சி - ஓவியம் : கோ.ராமமூர்த்தி

சிறுமை கண்டு பொங்குவாய்!

நெருஞ்சி - ஓவியம் : கோ.ராமமூர்த்தி

Published:Updated:
சிறுமை கண்டு பொங்குவாய்!
பிரீமியம் ஸ்டோரி
சிறுமை கண்டு பொங்குவாய்!

#உடைத்துப்பேசுவேன் #SpeakUp

`அந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது
எனக்கு வயது நான்கு...
நான் தனித்திருந்த நள்ளிரவொன்றில்
நீ என் வயதின் அறியாமையையும்
வலிமையின்மையையும்
பயன்படுத்திக்கொண்டாய்...
ஆனால், அது என் தவறில்லை
என்பதெப்படி எனக்குத் தெரியும்?’  

சிறுமை கண்டு பொங்குவாய்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படியாக வலிக்கிறது பாலியல் சீண்டலுக்கு ஆளான ஒரு குழந்தையின் கவிதை. ‘சைல்ட் அப்யூஸ்’ என்பது இன்று உலகளாவிய பிரச்னை. ஐக்கிய நாடுகள் சபை, அதிக அளவிலான குழந்தை பாலியல் குற்றங்கள் நடக்கும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் வல்லரசு நாடுகள், வல்லரசாகத் துடிக்கும் நாடுகள் எனப் பாரபட்சம் இல்லாமல் இடம்பெற்றிருக்கின்றன. 11-வது இடத்தில் பாகிஸ்தானும் எட்டாம் இடத்தில் இந்தியாவும் முதல் நான்கு இடங்களில் முறையே ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளும் உள்ளன. உலகின் வல்லரசாகத் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பும் எந்த நாடும், நல்லரசாக இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

‘குழந்தைகள்தாம் ஒரு நாட்டின் முக்கியமான சொத்து' என்கிறார் நெல்சன் மண்டேலா. ஆனால், ‘சைல்ட் அப்யூஸ்’ என்பது நாம் ஒவ்வொரு நாளும் கடந்துவரும் செய்தியாகிவிட்டது. ஒன்றாம் வகுப்புப் படித்துவந்த பள்ளிச் சிறுமி அவள். அவளுடன் படிக்கும் சக தோழியின் அப்பா, பிளம்பர் வேலைக்காக அவள் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது, குழந்தையின் தனிமையையும், தான் அவளது தோழியின் அப்பா என்கிற அறிமுகத்தையும் பயன்படுத்தி, அவளது ஆடைக்குள் கைவிட்டு அவளை பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியிருக்கிறார். தனக்கு நேர்ந்தது ‘அப்யூஸ்’ என்று உணர்ந்துகொள்வதற்கே, அந்தச் சிறுமிக்கு ஐந்தாண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன.

நான்காம் வகுப்புப் படித்துவந்த பையன் அவன். பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்பவர்கள் என்பதால், தாங்கள் வீடு திரும்பும்வரையிலும், வெளியூர் செல்லும் நாள்களிலும் அவனை உறவினர் ஒருவர் வீட்டில் விட்டுச்சென்றிருக்கிறார்கள். சிறுவனை அந்த உறவினர் பாலியல்ரீதியாகத் துன்புறுத்த, தனக்கு நடக்கும் கொடுமையின் பெயர் தெரியாவிட்டாலும், ‘அந்த அங்கிள் வீட்டுக்குப் போகமாட்டேன்’ என்று தனக்குத் தெரிந்த மொழியில் தன் எதிர்ப்பைக் காட்டியிருக்கிறான் அந்தக் குழந்தை. ஆனாலும், பெற்றோருக்குப் புரியவில்லை. அவனைக் கட்டாயப்படுத்தி அந்தக் காமுகனிடமே ஒப்படைத்துச் சென்றிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு வருடம் அந்தச் சித்ரவதையை அனுபவித்த வன், ஒருகட்டத்தில் தற்கொலைக்கு முயல, பிறகுதான் பெற்றோர் பதறி ‘என்ன பிரச்னை?’ என்று விசாரிக்க, விஷயம் தெரியவந்திருக்கிறது.

‘ஆண் குழந்தைகளையுமா?’ என்று கேட்பவர்களுக்கு, ஓர் அதிர்ச்சி புள்ளி விவரத்தைச் சொல்ல வேண்டும். ‘யுனிசெஃப்’ அமைப்பால் இந்தியாவில் இருக்கும் 13 மாநிலங்களில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, சைல்ட் அப்யூஸால் பாதிக்கப்பட்ட 69% குழந்தைகளில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆண் குழந்தைகள்.

இன்றைக்குச் சில வீடுகளில் ‘குட் டச், பேட் டச்’ விஷயங்களைச் சொல்லிக்கொடுத் தாலும், அப்படி எதுவும் நடந்தால் குழந்தை நேராக நம்மிடம் வந்து, ‘அவர் பேட் டச் செய்தார்’ என்று சொல்லும் என எதிர்பார்க்க முடியாது. ‘நமக்கு என்ன நடந்தாலும் நம்ம வீட்டுல சொல்லலாம், சொல்லணும்’ என்கிற நம்பிக்கையை அவர்களின் மனதில் ஏற்படுத்த வேண்டியது முக்கியம். குழந்தையுடன் இயல்பாகப் பேசி, எல்லாவற்றையும் தன் அப்பா அம்மாவிடம் பகிர்ந்து கொள்வதற்கான சூழலை அவர்களுக்கு வழங்கவேண்டியது பெற்றோரின் கடமை. அது குழந்தையின் உரிமையும் கூட.

குழந்தைகள் நலனுக்கான ‘தோழமை’ அமைப்பைச் சேர்ந்த தேவநேயன், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தைகளிடம் காணப்படும் நடத்தை மாற்றங்கள் பற்றிச் சொல்கிறார்...

‘`குழந்தை யாரைப் பார்த் தாலும் வெறுப்போடு நடந்துகொள்ளும். பெரும்பாலும் வயதானவர் கள்தான் சைல்ட் அப்யூஸில் ஈடுபடுவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. குழந்தை அப்படி யாரேனும் பெரியவர்களைப் பார்த்து விலகுகிறதா, அல்லது குறிப்பிட்ட ஒருவரைப் பார்த்து மிரட்சியடைகிறதா, யாரிடமாவது அருகில் அமர மறுக்கிறதா, யாராவது அன்பாக எதையாவது கொடுக்கும்போது அதை வாங்க மறுக்கிறதா என்பதையெல்லாம் கவனிக்கவும். பெரும்பாலும் ஸ்வீட், சாக்லேட் போன்றவற்றைக் கொடுத்தோ, மிரட்டியோதான் குழந்தைகள் பணியவைக்கப்படுகிறார்கள்.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தையிடம் ஒரு பதற்றம் இருக்கும். இரவில் அலறி விழிக்கலாம். அவர்கள் கண்களில் குழந்தைமை தொலைந்துபோய், வெறுமை தெரியலாம். அவர்களுடைய அந்தரங்க உறுப்பிலோ, உடலிலோ சிவந்துபோன காயம் ஏதாவது தென்பட்டால் கவனித்துத் தேவைப்பட்டால், மருத்துவரிடம் அழைத்துச்சென்று சிகிச்சையளிக்க வேண்டும். இப்போது, மொபைலில் ஆபாசப் படங்களைக் குழந்தைகளுக்குக் காட்டும் அல்லது காட்டி பாலியல் துன்புறுத்தல்கள் செய்வது அதிகம் நடக்கின்றன’’ என்கிறார் தேவநேயன்.

- உடைத்துப் பேசுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism