Published:Updated:

எந்த வயதிலும் சாதிக்க ஆரம்பிக்கலாம்!

எந்த வயதிலும் சாதிக்க ஆரம்பிக்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
எந்த வயதிலும் சாதிக்க ஆரம்பிக்கலாம்!

சுஜாதா பாலகிருஷ்ணன்உழைக்கும் பெண்களின் உண்மைக் கதைகள்சாஹா

எந்த வயதிலும் சாதிக்க ஆரம்பிக்கலாம்!

சுஜாதா பாலகிருஷ்ணன்உழைக்கும் பெண்களின் உண்மைக் கதைகள்சாஹா

Published:Updated:
எந்த வயதிலும் சாதிக்க ஆரம்பிக்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
எந்த வயதிலும் சாதிக்க ஆரம்பிக்கலாம்!
எந்த வயதிலும் சாதிக்க ஆரம்பிக்கலாம்!

‘`அடுத்தவங்க விமர்சனங்களைப் பத்திக் கவலைப்படாம, உங்க வாழ்க்கையை வாழப் பழகினீங்கன்னா, ஒவ்வொரு நொடியையும் ரசிக்கக் கத்துப்பீங்க. நான் அப்படித்தான் ரசனையோடு வாழ்ந்துகிட்டிருக்கேன்...’’
- அதிரடி அறிக்கையுடன் பேசத் தொடங்கும் சுஜாதா உளவியல் ஆலோசகர், சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியர், நாடக நடிகை, நாடகக் குழுவின் தலைவர் என ஏராளமான அடையாளங்களுக்குச் சொந்தக்காரர். பெங்களூரைச் சேர்ந்த சுஜாதா பாலகிருஷ்ணனுக்கு வாழ்க்கையின் அத்தனை சிறப்பு அத்தியாயங்களும் ஐம்பதில்தான் ஆரம்பித்திருக்கின்றன.

‘`தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் என் இன்ஸ்பிரேஷன்.  பள்ளிப் பருவத்தில், அவரைப்போலவே டிரஸ் பண்ணிக்கிட்டும் ஹேர் ஸ்டைல் வெச்சுக்கிட்டும் நடிச்சுப் பார்ப்பேன். எப்போதும் நடிப்பு ஆசையில் இருப்பேன்.  

எந்த வயதிலும் சாதிக்க ஆரம்பிக்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடைசி வருஷம் டிகிரி படிச்சுட்டிருந்த போது சொந்தக்காரங்க கல்யாணத்துல ஒருத்தரைச் சந்திச்சேன். ஒருவருக்கொருவர் பிடிச்சிருந்தது. வீட்டுக்குத் தெரிஞ்சதும் காதலிக்கக்கூட அவகாசம் கொடுக்காம அவசரமா அவருக்கே கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. புகுந்த வீடு என் கனவுகளுக்குக் கதவு திறந்துவிடற மாதிரியான குடும்பமா இருந்தது. கல்யாணமான அடுத்த வருஷமே என் மகள் பிறந்தாள். முழுநேர அம்மாவா, குடும்பத்தலைவியா வாழ்க்கை மாறிப்போனது. என் மகளுக்கு 15 வயசானதும், தான் என்ன படிக்கணும், தன் வாழ்க்கை எப்படி இருக்கணும்னு முடிவு பண்ணினா. அவளுடைய விருப்பத்துக்கு நானும் என் கணவரும் மதிப்பு கொடுத்தோம். ஆர்க்கிடெக்சர் முடிச்சுட்டு மேல்படிப்புக்காக அமெரிக்கா போனாள்...’’ - வழக்கமான அம்மாக்களைப்போல வெறுமையை உணராத சுஜாதா, நேரம் மொத்தத்தையும் தன் வசமாக்கிக்கொண்டிருக்கிறார்.

‘`என் மகள் படிச்சுட்டிருந்த அதே காலகட்டத்துல நான் அண்ணாமலை யுனிவர்சிட்டியில `பி.எட்’டும் `எம்.ஏ சைக்காலஜி'யும் முடிச்சேன். 18 வருஷங்கள் கடந்து மறுபடி படிப்பைத் தொடர்ந்தபோதும் என்னால அதே உற்சாகத்துடன் படிக்க முடிஞ்சது. டீன் ஏஜ்ல என் மகள் ரொம்ப முரட்டு சுபாவத்துடன் இருந்தாள். அம்மாவா எனக்கு அது கோபத்தைக் கொடுத்தாலும் அவளுடைய பார்வையில அவளுடைய உலகத்தைப் பார்த்தபோது அதிலுள்ள நியாயங்களை உணர முடிஞ்சது. அந்தப் பார்வைதான் சைக்காலஜி படிக்கணும்னு எனக்குள்ள ஓர் எண்ணத்தை விதைச்சது. அது மூலமா என் மகள் வயசுல உள்ள பலருக்கும் உதவ முடியும்னு தோணினது. அந்த வயசுல அவங்களுக்கு ஆதரவா சாய்ந்து அழறதுக்கு ஒரு தோளும், கேட்கறதுக்கு ஆளும் தேவைனு புரிஞ்சது. கவுன்சலரின் வேலையும் அதுதானே... 20 வருஷங்களா அதைத்தான் செய்யறேன்.

எனக்கு டான்ஸ் ரொம்பப் பிடிக்கும். 52 வயசுல ஷியாமக் தவாரின் பாலிவுட் டான்ஸ் இன்ஸ்டிட்யூட்ல சேர்ந்தேன். பயிற்சி முடிஞ்சபோது ஆடிட்டோரி யத்துல நடந்த டிக்கெட்டட் ஷோவுல நான் ஆடினேன். என் அம்மாவும் மகளும் அதுல பார்வையாளர்கள்.

58 வயசுல ‘தி வஜினா மோனோலாக்ஸ்’னு ஒரு நாடகத் துல நடிச்சேன். பெண்களுக்கு எதிரான வன்முறைகளைப் பற்றிப் பேசின விழிப்பு உணர்வு நாடகம் அது. எந்தக் கலையும் பொழுதுபோக்கா மட்டுமல்லாமல், சமூக, அரசியல் விஷயங்களைப் பேசறதா இருக்கணும்னு நம்பறேன். அதுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘தியேட்டர் ஃபார் சேஞ்ச்’. சிறப்புக் குழந்தைகள் நடத்தப்பட வேண்டிய விதம் பற்றின விஷயத்தைத்தான் பிரதான  புராஜெக்ட்டா எடுத்துக்கிட்டோம். வெளிநாடுகளில் வீல்சேர்ல வாழற குழந்தைகூட சாதாரணப் பிள்ளைகள் படிக்கிற பள்ளிக்கூடங்களில் படிக்கிறாங்க. ஆனா, நம்ம நாட்டுலதான் சிறப்புப் பள்ளிகள் என்ற பெயர்ல அவங்க ஒரு கூண்டுக்குள்ள அடைக்கப்படறதா ஃபீல் பண்றேன்.
20 வருஷங்களா இந்தக் குழந்தைகளோடு தீவிரமா இயங்கிட்டிருக்கேன். சக மனிதர்கள்கிட்ட அவங்க காட்டற அன்பும் பாசமும் அளவிட முடியாதவை.

‘வென் தி ரெயின்போ இஸ் இனஃப்’ - இது என்னுடைய அடுத்த புராஜெக்ட். இதுல 50 வயதைக் கடந்த பெண்கள் மட்டுமே பங்கெடுத்துப்பாங்க. இழப்புகளையும் வலிகளையும் கடந்த அவங்களோட வாழ்க்கைப் பயணத்தைப் பற்றித் தைரியமா, நேர்மையா, பெருமையா பேசப் போறாங்க...’’ - உற்சாகம் ஒரு துளிக்கூடக் குறையாமல் பேசும் சுஜாதாவுக்கு இன்னும் கனவுகளும் லட்சியங்களும் மிச்சமிருக்கின்றன.

‘`எனக்கு இன்னும் நிறைய ஆசைகள் இருக்கு. ஸ்ட்ராங் மெசேஜ் சொல்ற கேரக்டர்ல தமிழ்ப் படத்துல நடிக்கணும். இதுவரைக்கும் முயற்சி செய்யாத விஷயங்களை முயற்சி செய்து பார்க்கணும். உங்களுக்குப் பிடிச்ச மாதிரியான வாழ்க்கையை எந்த வயசுலயும் தொடங்கலாம். துரதிர்ஷ்டவசமா நம்ம சமூகம் சீனியர் சிட்டிசன்களுக்குனு ஒரு வாழ்க்கைமுறையை வகுத்து வெச்சிருக்கு. அதனாலயே அவங்களுக்குப் பிடிச்ச, புதுமையான விஷயங்களை முயற்சி செய்து பார்க்கத் தயங்கறாங்க.

வயசுங்கிறது ஒரு நம்பர், அவ்வளவுதான். சமூகம் என்ன சொல்லுமோங்கிற தயக்கத்துல உங்களுக்குப் பிடிச்ச விஷயங்களை மிஸ் பண்ணா தீங்க. ஏன்னா, வாழப்போறது ஒருமுறைதானே..?’’

வாழ்வோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism