Published:Updated:

எனக்குள் நான்... - "யெஸ்... மீ டூ!" வினோதினி வைத்யநாதன்

எனக்குள் நான்... - "யெஸ்... மீ டூ!" வினோதினி வைத்யநாதன்
பிரீமியம் ஸ்டோரி
எனக்குள் நான்... - "யெஸ்... மீ டூ!" வினோதினி வைத்யநாதன்

ஆர்.வைதேகி - படங்கள் : பா.காளிமுத்து

எனக்குள் நான்... - "யெஸ்... மீ டூ!" வினோதினி வைத்யநாதன்

ஆர்.வைதேகி - படங்கள் : பா.காளிமுத்து

Published:Updated:
எனக்குள் நான்... - "யெஸ்... மீ டூ!" வினோதினி வைத்யநாதன்
பிரீமியம் ஸ்டோரி
எனக்குள் நான்... - "யெஸ்... மீ டூ!" வினோதினி வைத்யநாதன்

மிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ள குறிஞ்சி மலர்... சினிமா, நாடகம், வெப் சீரீஸுக்கான ஸ்கிரிப்ட் எழுதி நடிப்பது, வொர்க்‌ஷாப் நடத்துவது, எழுத்து என எல்லாம் தெரிந்தும் எதுவுமே தெரியாதவர் போல எப்போதும் எளிமையானவர்... வினோதினியிடம் எதைப் பற்றியும் பேசலாம். அரிதாரமற்ற அவரின் வார்த்தைகள் அவ்வளவு அழகு, சுவாரஸ்யம். 

எனக்குள் நான்... - "யெஸ்... மீ டூ!" வினோதினி வைத்யநாதன்

நீங்கள் வினோதினி வைத்யநாதன் ஆனது எப்படி?

சென்னைப் பெண் நான். ஐந்தாவது படிக்கும்போதே நடிப்பில் ஆசை. அம்மா சந்திரலேகா வைத்யநாதன், எத்திராஜ் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர். அப்பாவுக்கு ஆங்கில இலக்கியங்களில் ஆர்வம் அதிகம். அந்தவகையில் எனக்கும் இளவயதிலேயே வாசிப்பு அறிமுகமானது. எம்.பி.ஏ முடித்துவிட்டு ஹெச்.ஆர் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.

ந.முத்துசாமி சாரைச் சந்திக்கிற வாய்ப்புக் கிடைத்த பிறகு, அவருடைய `கூத்துப்பட்டறை'யில் சேர்ந்தேன். அதற்குமுன் நிறைய தியேட்டர் குழுக்களுடன் பணிபுரிந்திருக்கிறேன். நான்கு வருட
ஹெச்.ஆர் வேலை என்னை ஸ்ட்ரெஸ்ஸின் உச்சத்துக்குக் கொண்டுபோனது. 24 மணி நேரமும் வேலையைப் பற்றிய சிந்தனை மட்டுமே. என்னுடன் வேலை பார்த்த பலருக்கும் உடல்ரீதியான பிரச்னைகள், குடும்பம் - வேலை நேரத்தை பேலன்ஸ் செய்வதில் தடுமாற்றம் என்றெல்லாம் பார்த்தபோது எனக்குப் பயம் பற்றிக்கொண்டது. ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் அத்தனை பேரின் பிரச்னைகளையும் ஹெச்.ஆர் கேட்டுக்கொள்வார். ஆனால், அவருடைய பிரச்னைகளைக் கேட்க ஆளிருக்க மாட்டார்கள். வேலை வேண்டாமென வெளியே வந்தேன். அதன்பிறகு கூத்துப்பட்டறையில் தீவிரமாக இயங்கத் தொடங்கினேன். மன அழுத்தம் மட்டுமன்றி, அதிகப்படியான எடையும் குறைந்தது. 2010-ல் அங்கிருந்து வெளியே வந்து பார்ட் டைமாக தியேட்டரில் நடித்துக்கொண்டிருந்தேன். பாலுமகேந்திரா சாரின் ‘சினிமா பட்டறை’யில் வேலை பார்த்திருக்கிறேன். பிறகு, `தியேட்டர் ஜீரோ’ என்கிற பெயரில் தியேட்டர் குரூப் தொடங்கினேன். எழுத்தாளர் பாமாவின் சிறுகதையை நாடகமாக்கி, ஞாநியின் கேணிக்கூட்டத்தில் அரங்கேற்றியபோது, அதைப் பார்த்து வந்த வாய்ப்புதான் ‘எங்கேயும் எப்போதும்’. அடுத்தடுத்து ‘கடல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என வரிசையாக வாய்ப்புகள். தியேட்டரும் சினிமாவும் இருவேறு உலகங்கள். ஆனால், இரண்டிலும் நடிக்கிற எனக்கு அந்த வேறுபாடு பெரிதாகத் தெரியவில்லை. இன்று வித்தியாசமான படங்கள் என்றால் அதில் எனக்கும் வாய்ப்பளிக்கிறார்கள்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எனக்குள் நான்... - "யெஸ்... மீ டூ!" வினோதினி வைத்யநாதன்

பணிகளைத் திட்டமிடுதல், நடிப்புத் துறை பற்றி..?

காலையில் எழுந்ததும் அன்றைய வேலை களைப் பட்டியல் போடுவேன். போனில் எனக்கே வாய்ஸ் மெசேஜ் அனுப்பிக்கொள்வேன். ஏகப்பட்ட வேலைகளைச் செய்வதால் எப்போது, என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் மிஸ் பண்ண வாய்ப்புண்டு. அதனால் எனக்கு நானே ஷெட்யூல் போட்டு வேலை செய்வேன்.

எனக்குள் நான்... - "யெஸ்... மீ டூ!" வினோதினி வைத்யநாதன்

தியேட்டர்  (நாடகம்)  என்பது அதிக நேரத்தை எடுக்கும் விஷயம். சினிமா அப்படியில்லை. லீட் கேரக்டரில் நடிப்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கு வேலை நாள்கள் குறைவு. நான் தொடர்ந்து தியேட்டரில் ஈடுபடக் காரணம் என் திறமைகளைச் செழுமைப் படுத்திக்கொள்ளத்தான். ‘நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் நாடகக் கம்பெனி’, ‘ஆயிரத்தோர் இரவுகள்’ என இரண்டு நாடகங்களை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம். தியேட்டர் என்பது பணம் பண்ணுகிற கலையில்லை. ஆனால், அதைப் பொருளாதார ரீதியாக வளர்த்துவிட முடியும் என்கிற நம்பிக்கையிருக்கிறது. போன வருடம் தியேட்டர் ஃபெஸ்டிவலுக்காக லண்டன் போயிருந்தேன். அங்கே வெறும் தியேட்டரில் மட்டுமே நடித்துக் கலைஞர்களால் ஜீவிக்க முடிகிறது. இங்கே நாடகக் கலைஞர்களுக்கு வாழ்வாதாரத்துக்கு வேறு வேலைகள் இருக்க வேண்டும். நடிப்புக்கு பேஷன் (Passion) எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு பிராக்டிகாலிட்டியும் அவசியம்.நான் ரொம்பவே பிராக்டிகலான நபர். 

எனக்குள் நான்... - "யெஸ்... மீ டூ!" வினோதினி வைத்யநாதன்

யூ டூ..?

`மீ டூ' பற்றித்தானே கேட்கிறீர்கள்? யெஸ்... மீ டூ!

அறியாத வயது தொடங்கி இன்று வரை எத்தனையோ சம்பவங்கள், அனுபவங்கள். பாவாடை - சட்டை காலத்தில் ஒருமுறை கடைக்குப்போன என்னை யாரோ துன்புறுத்த அணுகியிருப்பார்கள் போல. அதைப் பார்த்த என் பாட்டி அவசரமாக என்னை வீட்டுக்குக் கூட்டிவந்து,  ‘இவ டீன் ஏஜ்ல அடியெடுத்து வைக்கப் போறா... இந்த நேரத்துல கடைக்கெல்லாம் அனுப்பாதே’ என என் அம்மாவிடம்  சொன்னார். அந்தச் சம்பவம் என்னை ரொம்பவே பாதித்தது. என் அப்பா, என்னை மகன் மாதிரியே வளர்த்தார். ஆட்டோவில் வெளியே செல்லும்போது வழி கேட்க வேண்டுமென்றால் என்னை இறக்கிவிட்டுக் கேட்டுவரச் சொல்வார்.

பள்ளிக்கூடத்தில் கால்களை அகட்டி உட்காரக் கூடாது என்பார்கள். ஏன் என்று அப்போது புரியாது.

நினைவுதெரிந்த நாள் வரை பஸ் பயணம். அந்தப் பயணத்தில் நடக்கும் கொடுமைகளைப் புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. எம்.பி.ஏ முதல் வருடம் படித்துக்கொண்டிருந்த நேரம்... பேருந்தில் சென்னையிலிருந்து பெங்களூரு பயணம். தூங்கிக்கொண்டிருந்த என்மீது பின்னாலிருந்து ஒருவன் கையைப் போட்டான். நான் வண்டியை நிறுத்திப் பெரிய கூச்சல் போட்டு, உடனடியாக அவன் மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும் எனப் பிரச்னை செய்தேன். 

எனக்குள் நான்... - "யெஸ்... மீ டூ!" வினோதினி வைத்யநாதன்

கடந்தகால சம்பவங்களை இப்போது  நினைத்துப்பார்த்தால் அவர்களை எல்லாம் ஏன் விட்டோம் எனக் கோபம் வருகிறது. இப்போது நடந்தால் சும்மா விடுவேனா எனத் தோன்றுகிறது. கடந்த காலத்துக்குப் போய் எல்லாவற்றையும் மாற்றிவிடத் தோன்றுகிறது.

மீடியாவிலும் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்திருக்கின்றன. இங்கு வந்தபிறகு இதுபோன்ற நிகழ்வுகளைச் சந்திக்கும்போது என்னால் தட்டிக்கேட்க முடிகிறது. உதாரணத்துக்கு ஒரு சம்பவம். ஒரு படப்பிடிப்பில்  டெக்னீஷியன் ஒருவர் என்மீது லேசாக உரசிவிட்டுச் சென்றார். அது வேண்டுமென்றே செய்தது என எனக்குத் தோன்றியது. அடுத்த முறையும் தொடர்ந்தது. ஹீரோயினையும் அப்படியே செய்வதை நான் பார்த்தேன். மூன்றாவது முறை அவர் என்னை நோக்கி வந்தார். புகார் செய்தேன். இன்னொரு முறை நடந்தால் சீரியஸாக நடவடிக்கை எடுப்பேன் என்றும் எச்சரித்தேன். சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்தில் அவரைக் கூப்பிட்டு எச்சரித்தார்கள். ஆனால், அதன்பிறகு  அவர் என்மீது காட்டுகிற காழ்ப்பு உணர்ச்சி சாதாரணமானதில்லை. 

எனக்குள் நான்... - "யெஸ்... மீ டூ!" வினோதினி வைத்யநாதன்

யாரேனும் தவறான எண்ணத்துடன் என்னிடம் பேச்சுக்கொடுத்தால் உடைத்த மாதிரி கேட்டுவிடுவேன். ‘நீ என்ன சொல்ல வர்றே..?’ எனக் கேட்கும்போது  சொன்னதை வாபஸ் வாங்குவது அல்லது சொல்ல வந்ததைச் சொல்லித் திட்டுவாங்குவது என எதிராளிக்கு இரண்டே வழிகள்தாம் இருக்கும். இப்போது இதுதான் என் அணுகுமுறை.

சினிமாவில் சாதியம்..?

நான் சாதிகளுக்கு எதிரானவள். ஆனால், சாதியற்ற சமூகம் என்பது இந்தியாவில் சாத்தியமே இல்லை என்பது என் எண்ணம். நான் எந்த சாதியைச் சேர்ந்தவள் எனத் தெரியாமல் தன் சாதியினராக இருப்பேனோ என்கிற யூகத்தில் பேசுகிறவர்கள் இங்கே அதிகம். அப்படி அணுகுபவர்களிடம், ‘நான் உங்க சாதியாக இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன நடக்கும்? அது தெரிந்து என்னவாகப் போகிறது?’ என்று கேட்பேன். இன்று பா.ரஞ்சித் ‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ செய்கிறார் என்றால் அது அவசியம். சினிமாவில் ஒரு நபரை சாதி பார்த்து உள்ளே கொண்டுவரும் அவலம் நடக்கிறது.  என்னைக் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவளாக நினைத்துக்கொண்டு ஒதுக்குவதும் நடக்கிறது. அதை நான் பொருட்படுத்துவதில்லை. நீங்கள் எந்த சாதியைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். பிறப்பால் பார்ப்பனராக இல்லாமலும் போகலாம். ஆதிக்கநிலையிலிருந்து ஒரு விஷயத்தைப் பார்க்கும்போதும் செய்யும்போதும் அதுவும் ஒருவகையில் பார்ப்பனீயம்தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism