Published:Updated:

லைஃப் பார்ட்னர்ஸ்... டிராவல் பார்ட்னர்ஸ்! - வித்யா - வினு மோகன்

லைஃப் பார்ட்னர்ஸ்... டிராவல் பார்ட்னர்ஸ்! - வித்யா - வினு மோகன்
பிரீமியம் ஸ்டோரி
லைஃப் பார்ட்னர்ஸ்... டிராவல் பார்ட்னர்ஸ்! - வித்யா - வினு மோகன்

உலகத்தைச் சுத்திப் பார்க்கப் போறோம்!கு.ஆனந்தராஜ்

லைஃப் பார்ட்னர்ஸ்... டிராவல் பார்ட்னர்ஸ்! - வித்யா - வினு மோகன்

உலகத்தைச் சுத்திப் பார்க்கப் போறோம்!கு.ஆனந்தராஜ்

Published:Updated:
லைஃப் பார்ட்னர்ஸ்... டிராவல் பார்ட்னர்ஸ்! - வித்யா - வினு மோகன்
பிரீமியம் ஸ்டோரி
லைஃப் பார்ட்னர்ஸ்... டிராவல் பார்ட்னர்ஸ்! - வித்யா - வினு மோகன்

“நடிப்புக்கு எங்க வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவம் இருக்கோ, அதே அளவுக்குப் பயணங்களுக்கும் இருக்கு. எங்களுக்கு இடையேயான அந்நியோன்யத்தை அதிகமாக்குறது, நாங்க அடிக்கடி போற சுற்றுலாக்களும் அவை தரும் நினைவுகளும்தாம்’’ என ரொமான்ஸ் ரகசியம் சொல்கிறார்கள், வினு மோகன் - வித்யா தம்பதி. 

லைஃப் பார்ட்னர்ஸ்... டிராவல் பார்ட்னர்ஸ்! - வித்யா - வினு மோகன்

வினு மோகன் பிரபல மலையாள நடிகர். முன்பு மலையாளப் படங்களில் ஹீரோயினாக நடித்துக்கொண்டிருந்த வித்யா, இப்போது சன் டி.வி ‘வள்ளி’ சீரியல் உள்பட  சீரியல்களில் பிஸி.

“என் கணவரின் தாத்தா கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர், அப்பா மோகன் குமார், அம்மா ஷோபா மோகன்னு எல்லோருமே மலையாள சினிமா நட்சத்திரங்கள். அந்த வரிசையில் வினுவுக்கும் முக்கிய இடமுண்டு. அவர் நடிக்க வந்து நாலு வருஷங்களுக்குப் பிறகுதான் நான் ஹீரோயினானேன். 2013-ல் எங்களுக்கு அரேஞ்சுடு மேரேஜ் ஆச்சு.

வினு, டிராவல் பிரியர். கல்யாணத்துக்குப் பிறகு தன் பயணங்களைப் பத்தி அவர் என்கிட்ட சொல்லச் சொல்ல, எனக்கும் டிராவல் ஆர்வம் வந்திடுச்சு. ஹனிமூனுக்காக வயநாடு போனதுதான் எங்க முதல் ட்ரிப். அந்த ஃபாரஸ்ட் ட்ரிப் த்ரில்லிங்கா இருந்துச்சு. அப்புறம் அடிக்கடி என்னை டூர் கூட்டிட்டுப்போக ஆரம்பிச்சார். கல்யாணத்துக்காக நடிப்புக்கு பிரேக் விட்டிருந்த நான், சீரியல்ல என்ட்ரி கொடுக்க... வினு, ஷூட்டிங், டிராவல்னு இந்த முக்கோணம்தான் என் வாழ்க்கைனு ஆச்சு’’ எனக் கணவரைப் பார்த்துச் சிரித்தபடியே சொல்கிறார் வித்யா. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லைஃப் பார்ட்னர்ஸ்... டிராவல் பார்ட்னர்ஸ்! - வித்யா - வினு மோகன்

சிறு வயதில் ஃபேமிலி டூர்கள், வளர்ந்த பிறகு ஃப்ரெண்ட்ஸ் டூர்கள் என்று கால்களில் சக்கரத்துடனேயே வளர்ந்திருக்கிறார் வினு மோகன். ‘`என் லைஃப் பார்ட்னரா வந்த வித்யா, என் டிராவல் பார்ட்னராகவும் ஆனதில் பெரிய சந்தோஷம் எனக்கு. ஆரம்பத்தில் டூர்களுக்குக் கிளம்பும்போது, ‘இவங்களுக்குப் பிடிக்குமானு தெரியலையே’னு தயங்கின என்னை, ஒரு ட்ரிப் முடிக்கிறதுக்குள்ளேயே ‘அடுத்து முறை எங்க போகப்போறோம்’னு ஆர்வமா கேட்டு சர்ப்ரைஸ் கொடுத்தாங்க.

டூர்களைப் பொறுத்தவரை, ரொம்பப் பெருசாவெல்லாம் ப்ளான் பண்ண மாட்டோம். ஒரு ஜிப்ஸி ரைடு மாதிரிதான், மனம்போன போக்கில் போவோம். ரெண்டு பேருக்கும் சேர்ந்தாபோல ஒண்ணு, ரெண்டு நாள் லீவ் கிடைச்சா, கேரளா, தமிழ்நாடுனு பக்கத்திலேயே இருக்கிற இடங்களுக்குப் போவோம். பல நாள்கள் லீவ் கிடைச்சா, இந்தியாவுக்குள் லாங் ட்ரிப் கிளம்பிடுவோம். வருஷத்துக்கு எப்படியும் 8, 10 நேஷனல் டூர் போயிடுவோம். கல்யாணத்துக்குப் பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட லாங் ட்ரிப் போயிருக்கோம். வெளிநாடுகளுக்கும் போயிருக்கோம்” என்று பட்டியல் சொல்கிறார் வினு மோகன்.

திருமணத்துக்குப் பிறகான தங்கள் காதலை வெட்கத்துடன் சொல்கிறார், வித்யா... “பெரும்பாலும் எங்க ரெண்டு பேருக்கும் ஷூட்டிங் வெளியூர், இரவு பகல்னு நடக்கிறதால, ஒண்ணா இருக்கிற நேரமே குறைவாதான் இருக்கும். அந்தப் பிரிவு ஏக்கத்தைத் தீர்க்கும் வகையில் டிராவல் பொழுதுகளை முழுக்க முழுக்க எங்களுக்கானதா அமைச்சுக்குவோம். கல்யாணத்துக்குப் பிறகுதான் நாங்க காதலிக்க ஆரம்பிச்சோம். ட்ரிப்களில்தான் நிறைய காதல் தருணங்கள் கிடைக்கும். இந்தியாவுக்குள்ள பெரும்பாலும் கார்ல தான் பயணம் செய்வோம். ரெண்டு பேரும் மாறி மாறி டிரைவ் பண்ணுவோம். அப்போ நிறைய விஷயங்களை மனம்விட்டுப் பேசலாம். 

லைஃப் பார்ட்னர்ஸ்... டிராவல் பார்ட்னர்ஸ்! - வித்யா - வினு மோகன்

சும்மா சைட் ஸீயிங்கில் மட்டும் பொழுதைப்போக்காமல், அந்தப் பகுதி மக்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள், உணவுமுறைகளை ஆர்வமா கேட்டுத் தெரிஞ்சுப்போம். கைகோத்து நடந்து போறது, சைக்கிளிங் பண்றது, குதிரை சவாரினு போற இடங்களில் எதையும் மிச்சம் வைக்காம ரசிப்போம். இப்படி அப்பப்போ பயணங்கள் மூலம் எங்களை நாங்களே ரெஃப்ரெஷ் செய்துக்கிறதால, அடுத்தடுத்த நடிப்பு வேலைகளை அலுப்பில்லாம செய்ய முடியுது.

போன வாரம்தான் ஒருவார பயணமாக மாலத்தீவுக்குப் போயிட்டுவந்தோம். அதுதான் என் முதல் கப்பல் பயணம். அதைப் பத்தி நாங்க பேசி மகிழ, சிரிக்க எவ்ளோ நினைவுகள் சேகரிச்சிருக்கோம் தெரியுமா?” என்கிறார் வித்யா கண்கள் பிரகாசிக்க.

‘`போட்டோகிராபி என் பேஷன் (Passion). பயணங்களில் வித்யாவை என் புரொஃபஷனல் கேமராவில் போட்டோஸ் எடுப்பேன். ஷூட்டிங் பிரேக்ஸ்ல அந்த போட்டோக்களை அனுப்பி அதைப் பத்தின நினைவுகளை `சாட்’ செய்றதுனு, பொழுதுகள் சுவாரஸ்யமா இருக்கும். டூர் போகிற இடத்தில் நாங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாம ஸ்பெஷல் கிஃப்ட்ஸ் வாங்குவோம். வீட்டுக்கு வந்ததும் அல்லது விசேஷ நாள்களில் அதை சர்ப்ரைஸ் கிஃப்ட்டா கொடுப்போம்.

இதுவரை நாங்க போனதிலேயே எங்களுக்குப் பிடிச்ச இடங்கள்னா, ஸ்காட்லாந்தும் சிம்லாவும்தான்’’ என்று வினு மோகன் சொல்ல, ‘`வீக் எண்ட் வருது, ஜாலியா ஒரு டூர் கிளம்பிடுவோமா?’’ என்று கணவரைப் பார்த்துச் சிரிக்கிறார் வித்யா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism