Published:Updated:

கொஸ்டீன் ஹவர்

பணத்தைக் கரைக்காமலே பக்காவான படிப்பு !

கொஸ்டீன் ஹவர்

பணத்தைக் கரைக்காமலே பக்காவான படிப்பு !

Published:Updated:
##~##

''மகள் இப்போது ப்ளஸ் டூ படிக்கிறாள். 'மேற்படிப்பாக பாரா மெடிக்கல் படிப்புகளில் ஒன்றான டி.எம்.எல்.டி. படித்தால், உடனடி வேலை; செலவும் அதிகம் ஆகாது’ என்று பள்ளி ஆசிரியைகள் அட்வைஸ் தருகிறார்கள். அத்தகைய படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள் பெருகிக்கிடப்பதால், அவற்றை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பது பற்றியும், டி.எம்.எல்.டி. படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களையும் அளித்தால் பலருக்கும் வழிகாட்டியது போல் இருக்கும்'' என்று கேட்கிறார் புவனகிரியைச் சேர்ந்த கே.விசாலம் செல்வராஜ். அவருக்கு வழிகாட்டுகிறார், பொள்ளாச்சி சிவா கல்விக் குழுமங்களின் தாளாளர் என்.யோகானந்த சிவம்.

''பாராமெடிக்கல் எனப்படும் மருத்துவத் துறை சார்ந்த கல்விப் பிரிவுகள் அனைத்துமே வேலைவாய்ப்புச் சந்தையில் அதிக டிமாண்ட் உள்ளவை. அதிலும் டிப்ளமா இன் மெடிக்கல் லெபோரட்டரி டெக்னாலஜி (D.M.L.D. - Diploma in Medical Laboratory Technology)படிப்புக்கு சமீபத்திய ஆண்டுளாக எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டிருக்கிறது. காரணம்... வளரும் சிறு ஊர்களில்கூட பெருகி வரும் மருத்துவ மனைகள் மற்றும் அதையட்டிய மெடிக்கல் லேப்கள்தான். இன்னொரு பக்கம், இந்தப் படிப்பை முடித்தவர்களுக்கு துவக்கத்திலேயே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொஸ்டீன் ஹவர்

21,000 சம்பளத்தில் அரசு வேலை கிடைப்பதுதான். இந்தப் படிப்பை மேற்கொள்ள பெரிய அளவில் கல்வித் தகுதியோ, கல்விக் கட்டணமோ ஆகப்போவதில்லை. எனவேதான், இப்படிப்பு கிராமப்புற மாணவிகளுக்கு உகந்ததாக அறியப்படுகிறது.

கொஸ்டீன் ஹவர்

முதலில், டி.எம்.எல்.டி. படிப்புக்கான தகுதியைப் பார்ப்போம். ப்ளஸ் டூ-வில் இயற்பியல், வேதியலுடன் உயிரியல் அல்லது  தாவரவியல் விலங்கியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்த வர்களும், லேப் டெக்னாலஜி பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்தவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு மருத்துவக் கல்லூரி வளாகங்களில் செயல்படும் பாராமெடிக்கல் படிப்புக்கு சேர போட்டி அதிகம் என்பதால், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு முன்னுரிமை உண்டு. தனியார் நிறுவனங்களைவிட, இங்கு படிப்பது அதிகம் செலவு வைக்காதது. மேலும் அரசு மருத்துவ மனைகள்தோறும் பெருமளவு மெடிக்கல் லெபோரட்டரி டெக்னீஷியன்களுக்கு தட்டுப்பாடு இருப்பதால், தேர்வு முடிவுகள் வந்ததுமே அரசுப் பணி தேடி வரும்.

இன்னொரு பக்கம், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஜஸ்ட் பாஸ் மதிப்பெண்கள் போதும். ஆயினும், தனியார் பயிற்சி நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட இடங்களைவிட அதிகமான விண்ணப்பங்கள் குவியும்போது, அங்கும் மதிப்பெண்களில் முன்னுரிமை வழங்கப்படவே வாய்ப்புகள் அதிகம்.

கொஸ்டீன் ஹவர்

இந்தத் துறையில் உள்ள வேலைவாய்ப்பை குறிவைத்து ஏராளமான தனியார் நிறுவனங்கள், 'கல்வித் தகுதி பொருட்டில்லை’ என்று 'கட்டணக் கொள்ளை' ஆசையில் மாணவர்களை சேர்த்து வருகின்றன. இந்த நிலையங்களில் சேர்ந்து படித்தாலும் சுமாரான வேலை கிடைக்கும். என்றாலும், அது அரசு வேலையாகவோ தரமான சம்பளத்துடன் கூடிய தனியார் வேலையாகவோ இருப்பதற்கு வாய்ப்பில்லை. எனவே டி.எம்.எல்.டி படிப்பதற்கான கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதற்கு முன், கல்வி நிறுவனத்தின் அங்கீகாரம், அனுமதி உள்ளிட்ட தகுதிகளை தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.

பாராமெடிக்கலின் இரண்டு வருட டிப்ளமா படிப்பான டி.எம்.எல்.டி மற்றும் ஒரு வருட சர்டிஃபிகேட் படிப்பான சி.எம்.எல்.டி. படிப்புகளுக்கு மாநில அரசின் 'டைரக்டரேட் ஆஃப் மெடிக்கல் எஜுகேஷன்’ அங்கீகாரம் தருகிறது. கிண்டியில் செயல்படும் 'கிங்க்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாராமெடிக்கல் அண்ட் ரிசர்ச்’ நிறுவனத்தின் கீழ், குறிப்பிட்ட பாராமெடிக்கல் பயிற்சி நிறுவனம் வருகிறதா என்பதையும் பார்க்க வேண்டும். ஆக, அரசின் முறையான அனுமதி, மருத்துவக்கல்வி இயக்ககத்தின் அங்கீகாரம், கிங்க்ஸ் பாராமெடிக்கல் அமைப்பின் குடையில் இருப்பது... இவை போன்றவையே நீங்கள் உரசிப் பார்க்க வேண்டிய அம்சங்கள். இவை இருந்தால் மட்டுமே தேர்வெழுத அரசின் முறையான ஹால் டிக்கெட் கிடைக்கும்.

முறையான தனியார் கல்வி நிறுவனங்கள், தமிழகத்தில் ஒன்பது இடங்களில் உள்ளன. சுமார்  

கொஸ்டீன் ஹவர்

10 - 15 ஆயிரம் வரை வருடாந்திர படிப்புச் செலவு ஏற்படும். தங்குமிடம் மற்றும் உணவுச் செலவுகள் தனி. ஆனால், வேலைவாய்ப்பு நிச்சயம் என்பதால்... வங்கிகளில் எளிதாக கல்விக் கடன் கிடைக்கிறது. கேம்பஸ் இன்டர்வியூ மூலம் தகுதியானவர்களை கொத்திச் செல்ல கார்ப்பரேட் மருத்துவமனைகள் வருகின்றன. சமீபத்திய அரசு விதிப்படி ரத்த வங்கிகள் துவங்க மற்றும் செயல்படுவதற்கான அடிப்படை நிபந்தனைகளில் ஒன்றாக, அங்கு பணிபுரிபவர்களில் ஒருவர் டி.எம்.எல்.டி தகுதிக்கு குறையாத படிப்பை முடித்திருக்க வேண்டும் என்பதால் இந்த டிமாண்ட் மேலும் அதிகரித்துள்ளது.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism