Published:Updated:

சிக்கு புக்கு 2012

மோ.கிஷோர்குமார் படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

சிக்கு புக்கு 2012

மோ.கிஷோர்குமார் படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Published:Updated:
##~##

செமஸ்டர் பரபரப்புகளுக்கு எல்லாம் 'பை பை' சொல்லிட்டு, கிறிஸ்துமஸ், நியூ இயர் ஹாலிடேஸுக்கு ஊருக்குக் கிளம்ப ரெடியாயிட்டாங்க காலேஜ் கேர்ள்ஸ். மதுரை, ரயில்வே ஸ்டேஷன்ல காதுல ஹெட்போன், கையில டிராவல் பேக்னு டிரெயினுக்காகக் காத்திருந்த துப்பட்டா கேர்ள்ஸால... ஸ்டேஷனே கலர்ஃபுல்லாக, அதில் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா அலைப்பறைஸ் பண்ணிட்டிருந்த ஒரு கேங்-ஐ நெருங்கினோம்!

''நாங்க இன்ஜினீயரிங் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ். ஆறு பேரு ரோஜாக் கூட்டம். செமஸ்டர் லீவ்லயும் பிரியாம, எல்லாரும் ஒரே ஊருக்குக் கிளம்பிட்டோம். யெஸ்... சென்னை எங்களுக்காகக் காத்திருக்கு. இதுல என்ன விசேஷம்னா... எப்பவும் அப்பா, அம்மாகூட, டிக்கெட் ரிசர்வ் பண்ணி, பக்கத்து பக்கத்து பெர்த்ல படுத்துக்கிட்டு, ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துட்டுனு டிராவல் பண்ணியே பழக்கப்பட்ட நாங்க, இந்த முறை ஃப்ரெண்ட்ஸா சேர்ந்து, அன் ரிசர்வ்டு கம்பார்ட்மென்ட்ல, வித்தியாசமான கேரக்டர்களை சந்திச்சு, அவங்ககிட்ட லொடலொடனு பேசி, ஜாலியா டிராவல் பண்ணப் போறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆக்சுவலி அம்மாஸ் எல்லாம் எங்களோட இந்த பிளானுக்குத் தடா போட, 'பொண்ணுங்க வளர்ந்துட்டாங்க... போய்ப் பழகட்டும்!’னு அப்பாஸ்தான் க்ரீன் சிக்னல் கொடுத்து அனுப்பி வெச்சாங்க. நாங்க வளர்ந்துட்டோமே மம்மீ!''னு கதை சொன்னாங்க அனுஷா.

சிக்கு புக்கு 2012

''லீவுக்காக சென்னையில அவங்கவங்க ரிலேஷன்ஸ் வீட்டுக்கு போறோம். அங்க ஒரு நாள் எல்லாரும் மீட் பண்றதுக்கான பிளானும் இருக்கு. ஏன்னா... அவ்வளவு நாள் பிரிவை எங்களால தாங்க முடியாது அண்ணா... முடியாது!''னு ரன்னிங்ல நமக்கு ராக்கி கட்டினாங்க கிருத்திகா.

''ஏய்... முதல்ல டிக்கெட் எடுக்கணும்டி!''னு ஆமினா கவுன்டருக்கு ஓட, பிளாட்ஃபார்ம், லோடு வண்டினு கேர்ள்ஸ் போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. பப்ளிக் டெரராகிப் பார்க்க, ஒரு வழியா டிரெயின்ல ஏறின பொண்ணுங்களுக்கு எல்லாரும் சேர்ந்து உட்கார்ற மாதிரி சீட் கிடைக்கல.

''கண்ணா கிடைக்கிறது, கிடைக்காம இருக்காது; கிடைக்காம இருக்கிறது கிடைக்கவே கிடைக்காது!''னு அந்த கேப்லயும் ஷர்னிதா 'பஞ்ச்’விட, அனுஷா தன்னோட மொபைல்ல 'வொய் திஸ் கொலவெறி’ பாட்டை ஸ்பீக்கர்ல போட, கம்பார்ட்மென்ட்ல இருந்த பார்ட்டிங்க எல்லாம் டெரர் கைஸ் ஆனாங்க!

சட்டுனு நல்ல பொண்ணுங்க இமேஜுக்கு ட்ரை பண்ணின பிரியா, பக்கத்துல இருந்த குழந்தையை தூக்கி மடியில வெச்சுக்க, ''ஏய்... எங்கிட்ட கொடு, எங்கிட்ட கொடு''னு ஓவரா அன்பு மழை பொழிஞ்சாங்க பொண்ணுங்க. ''காலையில இருந்து பையன் பாத்ரூம் போகலை!''னு ஒரு குரல்... அடுத்த நிமிஷம் குழந்தை அம்மா கையில!  

''சரி சரி... உங்களோட நியூர் இயர் கொண்டாட்டப் பிளான்களைச் சொல்லுங்க. அதுக்காகத்தான் இவ்ளோ நேரமா உங்களை ஃபாலோயிங்!''னு நாம மேட்டரைச் சொல்ல,

''அவனா நீ..?!''ங்கிற ரேஞ்சில் நம்மளப் பார்த்தாலும், சடசடனு தங்களோட புத்தாண்டுத் திட்டங்களை அறிவிச்சாங்க கேர்ள்ஸ்.

''என் கஸின்ஸ், அவங்களோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் டிசம்பர் 31 நைட் டூ வீலர்ல பக்கத்து தெருக்கள்ல ரவுண்ட் அடிச்சு, ரோடுகளை ரணகளப்படுத்தலாம் வா-னு கூப்பிட்டிருக்காங்க. ஆனா, அதுல ஒரு சின்ன பிராப்ளம். எனக்கு டூ வீலர் ஓட்டத் தெரியாதே!''னு கவலையான அனுஷாகிட்ட,

''அதனால என்ன... பின்னாடி உட்கார்ந்து போக வேண்டியது தானே..?!''னு உலக மகா ஐடியாவை நாம சொல்ல, அப்பவும்கூட 'யுரேகா' சந்தோஷம் அவங்க முகத்துல!

சிக்கு புக்கு 2012

''போன வருஷ நியூ இயர்க்கு கொரியர்ல எனக்கு ஒரு கிஃப்ட் பார்சல் வந்திருந்தது. திறந்து பார்த்தா, பெரிய பாக்ஸ், உள்ளே ஒரு குட்டி பாக்ஸ், அதுக்குள்ளே ஒரு குட்ட்டி பாக்ஸுனு போயிட்டே இருந்தது. கடைசியில பார்த்தா... ஒரு பிரஷ், பேஸ்ட், டங்க் க்ளீனர், மௌத் வாஷ் இருந்தது! 'இந்த வருஷத்துல இருந்தாச்சும் பல் விளக்க ஆரம்பிடி... ஹாப்பி நியூ இயர்!’னு ஒரு கார்ட் வேற. காண்டாயிட்டேன். பழிவாங்க, அதைவிட டெரரா அவளுக்கு ஒரு பார்சல் அனுப்பணும். எனி ஐடியாஸ்..?''னு மூளையைப் பிய்ச்சுக்கிட்ட ஷர்னிதாவுக்கு,

''பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசனோட லத்திகா பட டிவிடி (ஓ அதைக் கூட டிவிடி பண்ணிட் டாங்களா?)-யை அனுப்பிடு!''னு வில்லத்தனமான ஐடியா சொன்னது, ஆமினா!

''நியூர் இயர் அன்னிக்கு டி.வி முன்னால சரண்டர். விஜய், ஆர்யா, சிம்புனு நம்ம சாக்லேட் பாய்ஸ் பேட்டி எல்லாம் இருக்கும். வேறென்ன வேணும்?''னு ப்ரியா தன்னிறைவு காட்ட,

''எனக்கு ஃபிப்ரவரி மாசம் 'கேட்’ எக்ஸாம் இருக்கு. ஸோ, ஹாலிடேஸ்ல எல்லாம் அக்கா புக்கும் கையுமாதான் இருப்பேன்''னு சீன் போட்டாங்க கிருத்திகா.

டிரெயின் சின்னதா குலுங்க...

''அட்வான்ஸ்டு ஹேப்பீ 2012!''னு கேர்ள்ஸ் எழுப்பின சத்தம் டிரெயின் சத்தத்தை மிஞ்சியும் கேட்டுட்டே இருந்துச்சு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism