Published:Updated:

எப்பவுமே பிஸியா இருக்கறதுதான் பிடிக்கும் !

இ.கார்த்திகேயன்படங்கள்: ஏ.சிதம்பரம்

எப்பவுமே பிஸியா இருக்கறதுதான் பிடிக்கும் !

இ.கார்த்திகேயன்படங்கள்: ஏ.சிதம்பரம்

Published:Updated:
##~##

''பரிசுக்காக போட்டிகளில் கலந்துக்காதே... திறமையை வெளிக்காட்ட கிடைச்ச வாய்ப்பா அதை எடுத்துக்கோனு எங்கப்பா அடிக்கடி சொல்வார். இப்போ இந்த 'உலக சாதனை யாளர் விருது - அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்டு’ (Assist world records research foundation) புத்தகத்தில் என் பெயரை பதிவு பண்ற சாதனையையும், வெற்றி என்பதைவிட ஒரு வாய்ப்பாதான் பார்க்கிறேன்!''

- அத்தனை பணி வாகப் பேசுகிறார் சிவசங்கரி. கோவில்பட்டி, ஜி.வெங்கடசாமி நாயுடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் எம்.எஸ்சி. மாணவியான இவர், 133 சென்டிமீட்டர் உயரத்தில் திருவள்ளுவரை வரைந்து, அந்த ஓவியத்துக்குள் 1,330 குறளையும் எழுதி, சாதனை நிகழ்த்திஇருக்கிறார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என் ஓவிய ஈடு பாட்டை, வித்தியாசமான முயற்சியில் திருப்பலாமேனு யோசிச்சப்போதான், இந்த ஐடியா வந்தது. இந்த ஓவியம், குறள் எல்லாத் தையும் எழுதி முடிக்க 22 மணி நேரம், 16 நிமிடம், 30 விநாடி ஆச்சுது. திருவள்ளுவரோட கண், புருவம், காது, மூக்கு, உதடு, மீசை, தாடி, கொண்டை, தோள், தொடை, அவர் நிற்கற பீடம்னு ஒரு இடம் விடாம, குறள்களை எழுதினேன். என்னோட இடைவிடாத முயற்சியைப் பார்த்துட்டு கல்லூரி தோழிகள், உறவினர்கள்னு எல்லாரும் பாராட்டினாங்க. கடந்த மாசம் புதுச்சேரியில் நடந்த உலக சாதனையாளர் விருது வழங்கும் விழாவுல, என்னோட திருவள்ளுவர் - திருக்குறள் ஓவியத்தைப் பாராட்டி, விருதும் கொடுத்தாங்க''

- சந்தோஷத்தில் மின்னுகிறது சிவசங்கரியின் கண்கள்.

எப்பவுமே பிஸியா இருக்கறதுதான் பிடிக்கும் !

ஓவியம் மட்டும் இல்லை... பேச்சுப் போட்டி, கட்டுரை எழுதுவது, ஆய்வறிக்கை சமர்ப்பிப்பது, பொது அறிவு, ஆல்பம் தயாரிப்பது, குண்டு எறிதல், ஈட்டி எறிதல், செஸ், கேரம், மியூசிக் பால், கோ-கோ என ஆல் ரவுண்டர் என்றே வலம் வருகிறார் சிவசங்கரி.

''எங்க காலேஜ்ல எல்லா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குற பொறுப்பு எனக்குதான். அகில இந்திய தமிழ்ப் பேச்சாளர்கள் கூட்டமைப்பின் கோவில்பட்டி கிளையோட ஒருங்கிணைப்பாளராவும் இருக்கேன். சிஃபி (sify) இணையதளம் நடத்தின ஆன்லைன் பேப்பர் பிரசன்டேஷன்ல 'மெடல் ஆஃப் மெரிட்’ விருதும், தங்கப் பதக்கமும் வாங்கினேன்'' என்று சொல்லும் சிவசங்கரியின் விருது பட்டியலில்... 'மக்கள் முதல்வன் விருது’, 'சிறந்த கலைஞர் விருது’, 'டிரஸ்ட் அவார்டு’, 'ஆபூர்வா விருது’, 'மாண்டிசோரி விருது’, 'யூ.கே. விருது’, 'இயல்வாணர் விருது’ உட்பட இன்னும் பல விருதுகளும் இடம் பிடிக்கின்றன!

''காலேஜ் நேரம் போக மற்ற நேரங்களில் பார்ட் டைம் பியூட்டிஷியனா வொர்க் பண்றேன். எப்பவும் பிஸியா இருக்கறதுதான்... எனக்கு ரொம்பப் பிடிக்கும்!''

- சிறுமழை நின்றதுபோல் இருந்தது சிவசங்கரி முடித்தபோது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism