Published:Updated:

கொஸ்டீன் ஹவர்

பருக்களை விரட்ட பல வழிகள் !

கொஸ்டீன் ஹவர்

பருக்களை விரட்ட பல வழிகள் !

Published:Updated:
##~##

''கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி நான். பள்ளிப் பருவம் முதல் என்னை விரட்டி வருகிறது பருத்தொல்லை. தோன்றி மறையும் என்றில்லாமல், அது என் அடையாளமாகவே தங்கிவிட்டது. இதில் இருந்து முழுமையாக விடுபட நவீன மருத்துவத்தில் வழி உள்ளதா?''

- பல பெண்களின் குரலாகக் கேட்டிருக்கிறார் முசிறியைச் சேர்ந்த எஸ்.மலர்விழி. அவருக்கு வழி காட்டுகிறார், திருச்சியைச் சேர்ந்த தோல்  நோய் லேசர் சிகிச்சை மருத்துவ நிபுணர அ.பாலசுப்பிரமணி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பெரும்பாலானோர் நினைப்பது போல, பரு என்பது டீன் வயதினருக்கு மட்டும் உரித்தான பிரச்னையில்லை. 13 வயதில் அடையாளம் காட்ட ஆரம்பிக்கும் பரு, சிலருக்கு அதிகபட்சம் 45 வயது வரைகூட தொடரக் கூடும். பெண்களைவிட, ஆண்களுக்குதான் பரு தாக்கம் அதிகம். ஆனாலும் அவர்கள் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. அழகு பிரக்ஞை அதிகமிருக்கும் பெண்கள்தான், பருவுக்கு எதிரான போரில், அதை மென்மேலும் அதிகமாக்கிக் கொள்கிறார்கள்.

பெண்களைப் பொறுத்தவரையில்... ஹார்மோன் குறைபாடு, ஒழுங்கற்ற மாதப்போக்கு, சினைப்பை நீர்க்கட்டிகள் என பரு வருவதற்கு பல காரணங்கள் உண்டு. ஸ்டீராய்டு தொடர்பான மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும் பரு வரலாம்.

கொஸ்டீன் ஹவர்

தோலில் இருக்கும் 'சீபம்' (sebum)எனப்படும் மெழுகுப்பொருளின் சுரப்பே, பருவாக தெரிகிறது. முகத்தின் எண்ணெய் அளவை கட்டுக்குள் வைத்தால்... பருவைக் கட்டுப்படுத்தலாம். பருத்தொல்லை அதிகம் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனையின் பேரில் தகுந்த சோப்புகளைப் பயன்படுத்துவது நல்லது. அழகு சாதனப் பொருள்களின் அதிகப்படி பிரயோகத்தை குறைத்து... தூசு, வெயில், புகை போன்ற பாதிப்புகளில் இருந்து விலகியிருப்பது பரு பாதிப்பைக் குறைக்கும்.

சிலர், பருவில் கை வைத்து கிள்ளுவது, சுரண்டுவது போன்ற வேலைகளைச் செய்வார்கள். இப்படிச் செய்தால், நாட்பட்ட தழும்பு மற்றும் கரும்புள்ளிகள்தான் பரிசாகக் கிடைக்கும். சுயமாக மெடிக்கல் ஷாப்பில் மருந்துகளை வாங்கித் தடவிக்கொள்வதும் எதிர்வினையையே தரும்.

பருக்களின் துவக்க நிலை என்றால், அடிக்கடி முகம் கழுவி வந்தாலே போதுமானது. சோப் கூட தேவையைப் பொறுத்து இரண்டு முறைக்கு மேல் தவிர்த்துவிடலாம். உடனிருப்பவருக்கும் பரு பரவுவதைத் தவிர்க்க, தனியாக டவல், சோப் உபயோகிக்க வேண்டும். முகத்தில் தோன்றிய பரு... அளவிலும், பரப்பிலும் அதிகமானாலோ... அல்லது கழுத்து, முதுகு என்று பிற அவயங்களுக்கும் பரவினாலோ சரும மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

கொஸ்டீன் ஹவர்

பருவின் பாதிப்பை மருத்துவ வழக்கில் ஐந்து கிரேடுகளில் குறிப்பார்கள். முதல் மூன்று கிரேடுகள் பிரச்னையற்றது. 4 மற்றும் 5 போன்றவை... தோலின் நடு அடுக்கை தாண்டி பாதிப்பவை. இவை, முதுகு பகுதிக்கும் பரவும்.

பருவை போக்குவதற்காக கெமிக்கல் பீல் (chemical peel), மைக்ரோடெர்மப்ரேஸன் (microdermabrasion) மற்றும் லேசர் சிகிச்சை போன்றவை நவீன மருத்துவத்தில் பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. கெமிக்கல் பீல் என்பது, 15 நாட்களுக்கு ஒருமுறை என சுமார் 6 - 8 சிட்டிங்குகளில் மேற்கொள்ளப்படுவது. ஏற்கெனவே பருவால் உண்டான தழும்புகளையும் போக்கக் கூடியது இந்த சிகிச்சை. பருவுக்காக மட்டுமன்றி முகத்தின் கருமைத்திட்டுகள், தோல் சுருக்கம் போன்றவற்றுக்காகவும் இந்த சிகிச்சை முறை மேற்கொள்ளப்படுவதால், இதுவே பலரின் முதல் சாய்ஸாக இருக்கிறது.

பருவினால் உண்டான தழும்புகள் அதிகமிருப்பின், மைக்ரோடெர்மாப்ரேஸன் சிகிச்சையை மேற்கொள்ளலாம். பாதிக்கப்பட்ட தோல் இழையை, மிக நுண்ணிய முறையில் நீக்குவது இந்த சிகிச்சையின் அடிப்படை. அடுத்தது, லேசர் சிகிச்சை. பருக்கள், தழும்புகள், கரும்புள்ளிகளை இருந்த இடம் தெரியாமல் இதன் மூலமாக நீக்கிடலாம். இதன் பலனைப் போலவே பட்ஜெட் அதிகம் என்பதை கவனத்தில் கொள்ளவும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism