Published:Updated:

வயலுக்குத்தான் போகலாமடி !

வே.கிருஷ்ணவேணி படங்கள்: அ.ரஞ்சித்

வயலுக்குத்தான் போகலாமடி !

வே.கிருஷ்ணவேணி படங்கள்: அ.ரஞ்சித்

Published:Updated:
##~##

''நாம சாப் பிடற அரிசி எப்படி கிடைக்குது தெரியுமா?!''னு  பீட்ஸா, பர்கர் சென்னைப் பொண்ணுங்ககிட்ட கேட்டோம்!

''நான் அரிசியே சாப்பிட மாட்டேனே! நீங்க சாப்பிடுவீங்களா?!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அது ஒரு செடியில் இருந்து கிடைக்கும்!''

''நோ நோ... நிறைய அரிசி கிடைக்கறதால அது நிச்சயமா ஒரு பெரிய மரமாத்தான் இருக்கணும்!''

''களவாணி படத்துல பார்த்திருக்கேன். பட், சரியா ஞாபகம் இல்லையே..!''

- விதவிதமான பதில்களால வியக்க வெச்சாங்க பட்டணத்துப் பட்டாம்பூச்சிகள். அறுவடை திருநாள் நேரமும் அதுவுமா, அவங்களுக்கெல்லாம் விவசாய தரிசனம் கொடுக்க தீர்மானிச்சு, கால் டாக்ஸியில் அள்ளிப் போட்டுட்டு விரைந்தோம்... சென்னைக்குப் பக்கத்துல செழிப்பா இருக்கற பொன்னேரிக்கு.

சென்னை, டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி காலேஜ் மற்றும் எஸ்.டி.என்.பி வைஷ்ணவா காலேஜ் பொண்ணுங்களை இனிதே வரவேற்றது வயலும், வரப்பும்!

வயலுக்குத்தான் போகலாமடி !

''ஏய், நான் சொன்னதுதான் கரெக்ட். அரிசி செடிதான்... மரம் கிடையாது!''னு சந்தோஷப் பட்டுக்கிட்டாங்க பானுப்ரியா. வயல் முழுக்க பசுமை நடமாட, ஜீன்ஸை எல்லாம் ஏத்திவிட்டுக்கிட்டு வரப்புல நடந்தாங்க பட்டாம்பூச்சீஸ். நெற்பயிரை ஆர்வமா பிடிச்சுப் பார்த்த அஸ்வினி, ''இதென்னா எல்லோயிஷாவும், கிரீனிஷாவும் இருக்கு?''னு 'ஹார்ட் அட்டாக்' கேள்வி கேட்க, அதை வரப்பில் நின்ன ஆசீர்வாதம் தாத்தாவுக்கு மொழி பெயர்த்தாங்க ஷாலினி.

வயலுக்குத்தான் போகலாமடி !

''முதல்ல விதை விதைச்சு, நாத்தா வளர்ந்த பிறகு அதை பறிச்சு நடவு நட்டு, பயிரா வளர்ந்து, அதுலதான் இந்த நெல்லு வரும். இப்போதைக்கு பச்சையா நிமிர்ந்து நிக்கிற நெல்லு... முழுக்க மஞ்ச ளாகி தலை சாய்ச்சா... அறுவடைக்குத் தயார். பொங்கலப்போ இந்த அரிசியிலதான் பொங்கல் வெச்சு சாமி கும்பிடுவோம்!''னு கிளாஸ் எடுத்தார் தாத்தா.

''ஏதோ ஸ்டெப்ஸ் மிஸ் ஆகுதே..? ம்... மஞ்சள் கலர் நெல்லு எப்படி வெள்ளை கலர் அரிசியாகும்?''னு 'லார்ட் லபக் தாஸ்’ ரேஞ்சுக்கு இந்திமதி டவுட் கிளப்ப,

''அறுவடை செஞ்ச நெல்லை கதிர் அடிச்சு, அண்டாவுல வேக வெச்சு, காய வெச்சு, மில்லுல அரைச்சு வாங்கினா... தவுடு தனியா, அரிசி தனியா போயிடும். அரிசி... நமக்கு; தவுடு... மாட்டுக்கு! சீரகச் சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, பொன்னி, ஐ.ஆர்.18-னு அரிசியில பல வகை இருக்கு!''னு மறுபடியும் செமினார் எடுத்த தாத்தா... நெல்லை உருவி, உள்ளங்கையில வெச்சே நசுக்கி, பிள்ளைங்களுக்கு அரிசியாக்கிக் கொடுக்க, ''வாவ்!''னு தாத்தாவை ஹீரோ போல பார்த்தாங்க பர்கர் பார்ட்டிங்க!

தூரத்தில் கை காட்டின ஜெபஸ்வீட்டி, ''அது என்ன அந்த நெல்லுச் செடி மட்டும் அவ்வளவு உயரமா இருக்கு?''னு கேக்க, கெக்க பிக்கே ஆயிடுச்சு தாத்தாவுக்கு.

வயலுக்குத்தான் போகலாமடி !

''அது நெல்லு இல்லம்மா... கரும்பு!''னு தாத்தா க்ளியர் பண்ண, ஜீன்ஸ் கூட்டம் கரும்புக் காட்டுக்கு இடம் பெயர்ந்துச்சு. அங்கே கரும்பு வெட்டிக்கிட்டு இருந்தவங்க கையில அரிவாளோடு திரும்பிப் பார்க்க, மிரண்டு, ஸ்பீடு கொறஞ்சது பொண்ணுங்களுக்கு. அந்த அக்காக்களுக்கு எல்லாம், 'மிஸ். சென்னை'கள நாம அறிமுகப் படுத்தி பயம் தெளிய வைக்க, ''எவ்ளோ பெரிய கத்தி(!)..? நான் ஒரு தடவை ட்ரை பண்ணிப் பார்க்கட்டுமா?''னு கையில வாங்கின வித்யா... ஒரு வெட்டு, ரெண்டு வெட்டு, மூணு வெட்டு... ம்ஹும்... முடியல. நாலாவது வெட்டுல கரும்பு கையோட வர, பெருமை தாங்கல!

ஆர்வக் கோளாறுல கரும்பைக் கடிக்கப் போன சுதாமினிக்கு கையில் கரும்புச் சுனை குத்த, தோட்டத்தில் இருந்த ஒரு குட்டிப் பையன் அதை எடுத்துவிட்டான். ''அக்கா... கைல பட்டதால தப்பிச்சீங்க. இதுவே நாக்குல பட்டிருந்தா ரொம்பக் கஷ்டம்!''னு தன் பங்குக்கு திகில் கிளப்ப, ஏதோ உலக அழிவுல இருந்து தப்பிச்ச மாதிரி உருட்டி உருட்டி முழிச்சாங்க சுதாமினி.

''இந்தக் கரும்பைத்தான் பொங்கல் ஃபெஸ்டிவலுக்கு எங்க ஊருக்கு எல்லாம் அனுப்புவீங்களா..?''

- இது அஸ்வினியோட நியாயமான கொஸ்டீன்.

வயலுக்குத்தான் போகலாமடி !

''ஆலைக் கரும்பு, ரஸ்தாலிக் கரும்புனு கரும்புல ரெண்டு வகை இருக்கு. இது, ஆலைக் கரும்பு. இதுதான் ரொம்ப தித்திப்பா இருக்கும். ரஸ்தாலிக் கரும்புதான் பொங்கல் அப்போ சந்தைக்கு வர்றது''னு பொண்ணுங்களுக்கு பதில் சொல்லியே கிட்டத்தட்ட அக்ரி புரொபசர் லெவலுக்கு ஆயிட்டார் தாத்தா.

''அதென்ன ஆன்ட்டி சேலை மேல சட்டை போட்டிருக்கீங்க..?''

- திலகவதி கேட்க,

''கரும்போட தோகை குத்தினா தோலே கிழிஞ்சுடும்... அவ்வளவு கூர்மையா இருக்கும். அதான்... கரும்புத் தோட்ட வேலைக்கு வர்றவங்க எல்லாம் முழுக்கை சட்டை போட்டு, தலைக்கு துண்டு கட்டியிருக்கோம்!''னு விளக்கினாங்க ஆன்ட்டி!

வயலுக்குத்தான் போகலாமடி !

''ஹேய் ஒரு ரைடு போலாமா..?''னு பொண்ணுங்க மாட்டு வண்டியில் ஏற, ஏரியா இன்னும் கலகலத்தது. கொண்டாட்டம் எல்லாம் முடிஞ்சு பொண்ணுங்களை மறுபடியும் நாம கால் டாக்ஸியில் அள்ளிப்போட, ''மிஸ் யூ அரிசி!''னு மனசில்லாமக் கிளம்பினாங்க மெட்ரோபாலிட்டன் கேர்ள்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism