Published:Updated:

ஹைபிரிட் தேவதை !

மோ.அருண் ரூப பிரசாந்த்

ஹைபிரிட் தேவதை !

மோ.அருண் ரூப பிரசாந்த்

Published:Updated:
##~##

கேத்ரீனா கைஃப்... காஷ்மீர் தந்தையும், லண்டன் தாயும் தந்த ஹைபிரிட் தேவதை! ஹீரோயின், குத்துப்பாட்டு, விளம்பரத் தூதர் என எந்த வாய்ப்புகளிலும் சிக்ஸர் அடிப்பது... கேத்ரீனா ஸ்டைல். கூகுள் இணைய தளத்தில் அதிகமாகத் தேடப்படும் இந்திய நடிகை, ஆசியாவின் டாப் டென் அழகுப் பெண்களில் தொடர்ந்து நான்காவது வருடமாக முதல் இடம் என... செலிபிரிட்டி இமேஜையும் தாண்டிய யூத் ஐகான்!

'ஒலே’ அழகு சாதன பொருள் தயாரிப்பு நிறுவனத்தின், அழகு அம்பாஸடராக இருக்கும் கேத்ரீனாவுடன் நிகழ்ந்த அந்த 'ச்சோ ச்வீட்' மொபைல் சாட்டிங், சூப்பர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கேத்ரீனா ஏன் இவ்வளவு அழகா இருக்காங்க?!''

''நான் அழகா இருக்கேன்னு நான் முதல்ல நம்பறேன். அந்த தன்னம்பிக்கைதான் முதல் காரணம். எந்த காஸ்ட்யூம் போட்டாலும் செட் ஆகுற உடல் அமைப்பு என்னோட ப்ளஸ். பாடி வெயிட் அதிகமா இருக்குனு தோணினா, அடுத்த செகண்ட்... 'ஜிம்’ல வொர்க்-அவுட் பண்ண ஆரம்பிச்சுடுவேன். என் உடம்பு மேல நான் வெச்சுருக்கற அந்த அக்கறை... என் அழகோட அடர்த்தியைக் கூட்டுது. நீங்களும் டிரை பண்ணுங்களேன்!''

''உலகம்பூரா சுத்துறீங்க... எந்த நாட்டுப் பெண்கள் செம அழகுனு சொல்வீங்க..?''

''பாங்காக், சீனா, ஜப்பான், ஹவாய்னு சின்ன வயசுல இருந்தே பல நாடுகள்ல வாழ்ந்திருக்கேன். இப்பவும் ஷூட்டிங்குக்காக சுத்திக்கிட்டே இருக்கேன். மொழி, கலாசாரம்னு உலகம் முழுக்க ஒவ்வொரு நாடும் வெவ்வேறு மாதிரி இருக்கு. ஆனா, பெண்கள் எல்லா இடத்துலயும் அழகாத்தான் இருக்காங்க!''

ஹைபிரிட் தேவதை !

''சினிமா, விளம்பரம், டான்ஸ் ஷோ...னு சுழலுறதுக்கு நடுவுல, ரிலாக்ஸ் பண்ணலாம்னு தோணவே தோணாதா?''

''நெவர்! நான் வேலை செய்யல... மனசுக்குப் ரொம்ப பிடிச்ச விஷயங்கள... ஜாலியா, என்ஜாய் பண்ணி செய்துட்டு இருக்கேன். 'ஷீலா கி வோனி’னு குத்துப்பாட்டுக்கு நான் ஆடினா... ரசிகர்களும் ஆடுறாங்க. அடுத்த படமான 'ராஜ் தீதி’யில் மடிப்பு கலையாத காட்டன் புடவையோடு அரசியல்வாதியா நடிச்சா, அதையும் ஏத்துக்கறாங்க. அதனாலதான் ஒவ்வொரு படத்துக்கும் என்னைய நானே சேலஞ்ச் பண்ணிக்கிட்டு பரபரனு ஓடிட்டே இருக்கேன். அது எப்படி எனக்குச் சலிக்கும்?''

''கோடம்பாக்கம் தரிசனம் எப்போ மிஸ்..?!''

''கேட்பீங்கனு தெரியும்! மலையாளம், தெலுங்கு வரை வந்துட்டு... தமிழ்ப் படம் பண்ண ஆசை இருக்காதா? விக்ரமோட படங்களை மிஸ் பண்ணாமப் பார்த்துடுவேன். நிறைய டேலன்டட் டெக்னீஷியன்ஸ் இங்க இருக்காங்க. சீக்கிரமா தமிழ் ஸ்க்ரீன்ல சந்திப்போம்!''

- அழகாகச் சிரித்தது அந்த ஆறடி ஐஸ்க்ரீம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism