Published:Updated:

போட்டோவுல கொஞ்சம் பவுடர் போடுங்க !

ரா.ராபின் மார்லர் படங்கள்: ஜெ.முருகன்

போட்டோவுல கொஞ்சம் பவுடர் போடுங்க !

ரா.ராபின் மார்லர் படங்கள்: ஜெ.முருகன்

Published:Updated:
##~##

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் கொண்டாட்டங்களை எல்லாம் ஒன்றாகக் கலக்கிக் கொட்டியதுபோல்... படுஉற்சாகமாக இருந்தது, கடலூர், புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கல்ச்சுரல்ஸ் டே!  

வரவேற்புரையில் மேடை பிஸியாக இருக்க, கிடைத்த இடைவெளியில், பேக் ஸ்டேஜ் பக்கம் பார்வையை விட்டோம். அலங்காரங்கள், ரிகர்ஸல்கள் நடந்துகொண்டிருந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அண்ணி... அந்த ரிப்பனை எடுங்க...'', ''அண்ணி... இந்த ஸ்டெப்க்கு அடுத்து என்ன..?'', ''நம்ம புரோகிராம் எத்தனாவது அண்ணி..?'' என்று ஒரே 'அண்ணி’ குரல்களாக இருக்க, ''யாரு அந்த அண்ணி..?'' என்றோம். ''இது 'மச்சான்’ கான்செப்ட் பாஸ். அழகான அண்ணன் இருக்கிற தோழிங்க எல்லாம் 'அண்ணி’!'' என்று கண் சிமிட்டினார்கள் கேர்ள்ஸ்!

போட்டோவுல கொஞ்சம் பவுடர் போடுங்க !

ஆடியன்ஸ் பக்கம் ஆரவாரம் கேட்க, எட்டிப் பார்த்தால் ஃபேஷன் ஷோ ஆரம்பமாகி இருந்தது. 'வில்லேஜ் பியூட்டீஸ்’தான் ஃபேஷன் ஷோ கான்செப்ட். தாவணி, கண்டாங்கி என கலக்கல் கிராமத்து காஸ்ட்யூம்களோடு விளக்கு, கரும்பு, மண்பானை, கதிர் அரிவாள், வைக்கோல் என 'பிராப்பர்ட்டி’களிலும் கலக்கினர் பெண்கள்.

''ஊசி மணி பாசி மணி வாங்கிலியோ சாமீய்...'' என்றபடியே மேடை ஏறிய ஜெயபிரியங்கா, ''சாமியோவ்... இந்த அருக்காணிதான் படிக்கல. என் பொண்ணு திருகாணியையாவது படிக்க வைக்கணும்... நாலு பாசி வாங்கிக்க சாமீய்!'' என்று பெர்ஃபார்மன்ஸைப் போட்டவரிடம், பார்வையாளர்களே காசு கொடுத்து பாசி வாங்கும் அளவுக்கு அசத்திவிட்டார்.

லேட்டஸ்ட் வெர்ஷன் விஜயசாந்தி போல வந்தார் கராத்தே ஸ்டூடன்ட் பிந்து. கையில் நெருப்புடன் என்ட்ரி ஆனவர்... ஓடு, செங்கல் எல்லாவற்றையும் எகிறி அடித்த அடியில் ஆடிட்டோரியமே ச்சும்மா அதிர்ந்ததுல்ல!

போட்டோவுல கொஞ்சம் பவுடர் போடுங்க !

கிளாஸிக்கல் டான்ஸ் போட்டியில் 'காதலன்’ பிரபுதேவா ஸ்டைலில், ஸ்டேஜுக்கு கீழே ஒரு மூட்டை கோலப்பொடியைக் கொட்டி, பரதம் ஆடிக்கொண்டே அதில் இந்தியா உருவம் வரவழைத்து, வண்ணப் பூவும் தூவினார் கிருபாவதி.

ஆன் ஸ்டேஜ் போட்டிகள் ஒருபுறம் கலக்க, சாரி டிசைனிங், ஜுவல்லரி டிசைனிங், பாட் பெயின்ட்டிங், நெருப்பில்லாமல் சமைக்கும் போட்டி என்று ஆஃப் ஸ்டேஜ் ஈவன்ட்டுகளும் களைகட்டின!

'உங்களில் யார் அடுத்த மணிரத்னம்..?’ என்ற தலைப்பில் நடந்த குறும்படப் போட்டியில், கோடம்பாக்கக் கனவில் பல கன்னிகள் இருப்பது புரிந்தது.

பிரேக் நேரத்தில்... ''திவ்யா டான்ஸ் சூப்பர்டி!'', ''பாட்டுப் போட்டியில் சாங் செலக்ஷன் எல்லாம் செம இல்ல..?!'' என்று ரெவ்யூ செய்துகொண்டிருந்த பெண்களிடம், ''ஸ்மைல் ப்ளீஸ்!'' என்றோம். சட்டென ஃப்ரெஷ்ஷாகி விதவிதமாக போஸ் தந்த கேர்ள்ஸ், க்ளிக்கி முடித்ததும், ''போட்டோல கொஞ்சம் பவுடர் போட்டுக்கோங்க ப்ளீஸ்!'' என்றார்கள் டீன் குறும்புடன்!

போட்டோவுல கொஞ்சம் பவுடர் போடுங்க !

''சரி சொல்லுங்க... உங்க காலேஜ் குயின் யாரு..?!'' என்றால், ''ஜெயலட்சுமி!'' என்று முழங்கியது மொத்த ஆடிட்டோரியமும். இங்கிலீஷ் லிட்டரேச்சர் ஸ்டூடன்ட் ஜெயலட்சுமி... படிப்பு, டான்ஸ், யோகா, காலேஜ் கல்ச்சுரல்ஸ் குரூப் தலைவி என்று கலக்குவதுடன், 'அம்மா’ என்ற குறும்படத்துக்கும் தட்டியிருந்தார் முதல் பரிசு!

''பிராக்டீஸ், ஸ்டேஜ் டெக்கரேஷன், கோ-ஆர்டினேஷன்னு சொல்லி கல்ச்சுரல்ஸை சாக்கு வெச்சு ஒரு வாரமா கிளாஸுக்கு கட் அடிச்சோம். நாளையில இருந்து ரெகுலரா கிளாஸுக்குப் போகணும்னு நினைச்சாதான் கஷ்டமா இருக்கு!'' என்று ஒரு சுடிதார் வருத்தப்பட,

''ஃப்ரீயா விடு ஃப்ரீயா விடு ஃப்ரீயா விடு அண்ணி..!'' என்று அவரை கேர்ள்ஸ் ஜாலியாக்க... தேசிய கீதம் இசைந்தது மேடையில்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism