ராஜா ரவி வர்மா, ஓவியக் கலையின் மாமனிதர். இவரின் ஓவியங்கள், வெறும் காட்சிப்பொருளாக அழகுகாட்டுபவை அல்ல; நம்முடன் பேசுபவை, உணர்வுகளைப் பரிமாறுபவை, உயிர்ப்புள்ளவை. ருக்மிணியின் ஓவியங்களைப் பார்க்கும்போதும் இதே உணர்வுகள் எழுகின்றன.

பின்னே ருக்மிணியின் ரத்தத்தில் கலந்திருப்பது ரவி வர்மாவின் மரபணுக்கள் அல்லவா?

பெங்களூரில் வசிக்கும் ருக்மிணி வர்மா, ராஜா ரவி வர்மாவின் எள்ளுப்பேத்தி. `தி ராஜா ரவி வர்மா ஹெரிட்டேஜ் ஃபவுண்டேஷ’னின் நிர்வாகி.

ரவி வர்மா என்கிற கலைஞன் இறந்து 100 ஆண்டுகளுக்குப் பிறகு, ருக்மிணி வர்மா தனது `தி ஹிட்டன் ட்ரூத் - ராஜா ரவி வர்மா’ என்ற புத்தகத்தில் தாத்தாவின் பெருமைகளை நினைவுகூர்ந்திருக்கிறார்.

78 வயதிலும் 18-ன் உற்சாகத்தையும் உழைப்பையும் பார்க்க முடிகிறது ருக்மிணியிடம். ஃபவுண்டேஷன் நிர்வாகம், ஓவியங்கள், எழுத்துப்பணி, பிளாகிங், சமூக வலைதள ஈடுபாடு என, 24 மணி நேரம் போதாமல் ஓடிக்கொண்டிருக்கிறவரும், தாத்தாவைப்போலவே ஓர் உதாரண மனுஷிதான்!

``திருவாங்கூரில் `சேட்டெல்மாண்டு' (Satelmond) அரண் மனையில் 1940-ம் ஆண்டில் பிறந்தேன். ஆங்கில இலக்கியம் படித்தேன். ஆங்கிலத்தின் அழகு, இன்றும் எனக்குள் பிரமிப்பைத் தக்கவைத்திருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிறகு என் பெற்றோர் பெங்களூருக்கு இடம்பெயரும்வரை நான் திருவாங்கூர் அரண்மனைகளில்தான் ஓடியாடி வளர்ந்தேன். ஆடம்பரங்களையும் பிரமாண்டங்களையும் பார்த்து வளர்ந்த பால்யம் என்னுடையது.

சிறுவயதிலேயே நடனத்தின் மீது ஈர்ப்பு வந்ததால் பரதநாட்டியம், கதக் மற்றும் மோகினியாட்டம் கற்றுக்கொண்டேன். அரச குடும்பத்தில் பிறந்ததால், பொதுவெளிகளில் நடனமாட எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. என்னால் அதை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை. ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு நடனம் கற்றுக்கொடுத்து என் ஆற்றாமையைத் தீர்த்துக்கொண்டேன். நடனம் ஆடுவதையும் கற்றுக்கொடுப்பதையும்போலவே எனக்கு நடனம் ஆடுபவர்களை ரசிக்கவும் பிடிக்கும். குறிப்பாக கதகளி...’’ என்கிறவர், தன் ஆறு வயதிலிருந்தே ஓவியங்கள் வரைகிறார்.

``பெருமைக்காகச் சொல்லிக்கொள்ள வில்லை. கலை ஆர்வமும் கலைத்திறனும் என் மரபணுக்களில் இருப்பவை. எங்கள் குடும்பத்தில் எத்தனையோ ஓவியர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், ராஜா ரவி வர்மா அளவுக்கு யாரும் வெற்றி பெறவில்லை. என் மகன் ஜெய் வர்மாகூட ஓவியர்தான். எனக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்தவை என் ஓவியங்கள். முறைப்படி அந்தக் கலையைக் கற்றுக்கொள்ள விரும்பினேன். ஆனால், அதற்கெல்லாம் குடும்பத்தில் அனுமதி கிடையாது. ஓவியங்கள் வரைவதுகூட கவனத்தைச் சிதறடிக்கிற செயலாகப் பார்க்கப்பட்ட காலம் அது. அப்பாவுக்கு நாங்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதனால் ரகசியமாகத்தான் ஓவியங்கள் வரைந்து பழகினேன். என் பாட்டிக்கு மட்டும் அது தெரியும். அவருக்கு ஓவிய நுணுக்கங்கள் பற்றி அதிகம் தெரியாது என்றாலும், அவர்தான் என்னை ஊக்கப்படுத்தினார். வாட்டர் கலர் வைத்து முதலில் வரைய ஆரம்பித்தேன். என் ஓவிய பாணியும் திறமையும் வளர வளர, ஆயில் பெயின்ட் வைத்து வரைய ஆரம்பித்தேன். இன்றுவரை அது தொடர்கிறது.’’

ருக்மிணியின் ஓவியங்களில் ரவி வர்மா ஓவியங்களின் சாயலை அதிகம் பார்க்க முடிகிறது.

``தாத்தாவின் படைப்புகள், என்னுள் ஏற்படுத்திய தாக்கம்தான் இதற்குக் காரணம். அவரது ஓவிய பாணியை அடிப் படையாகக்கொண்டு அதேநேரம் என் பாணி தெரியும்படியான ஓவியங்களை வரைகிறேன். பிரபல ஓவியர் பீட்டர் பால் ரூபின் போன்றோரின் ஃபார்முலாவையும் என் ஓவியங்களில் பின்பற்றுவேன். ஆனாலும், அவற்றில் என் தனித்தன்மை தெரியும். தாத்தா தன் ஓவியங்களில் உடைகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்திருப்பார். என் ஓவியங்கள் சருமத்தை ஹைலைட் செய்பவையாக இருக்கும். உடலமைப்புக்கும் முக்கியத்துவம் இருக்கும். சருமத்தைத் தத்ரூபமாகக் காட்டு வதன் மூலம் அந்த ஓவியத்தையே உயிர்த்தெழச் செய்கிறார் ஓவியர் என்பது என் எண்ணம்.’’

ஆண்கள் மற்றும் பெண்களின் உருவங்களை உடைகளைவிட அதிகமாக நகைகள் மூடியிருக்கும்படியான இவரின் ஓவியங்கள், பெரும் கவனம் ஈர்த்தன. 1970-ம் ஆண்டில் இவரது முதல் ஓவியக் கண்காட்சியிலேயே அத்தனை படங்களும் விற்றுத்தீர்ந்தன. விமர்சனங்களையும் எழுப்பின.

``நிர்வாண ஓவியங்களை வரைந்ததன் பின்னணியில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்தக் காரணமும் இல்லை. ஒருவரின் மனக்கண்கள் காட்சிப்படுத்துபவற்றின் வெளிப்பாடு அவை. அவ்வளவுதான். அந்த ஓவியங்களுக்கு, முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி, பிரபல ஓவியர் எம்.எஃப்.ஹுசைன் உள்ளிட்ட பல பிரபலங்களின் பாராட்டுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது’’ - ஓவியப் புரட்சி, இவரது குரலிலும் தெரிகிறது.

``தாத்தா மாதிரியான ஒரு ஜாம்பவானைப் பற்றி, அவரது ஆன்மா பற்றி எழுத இதுதான் சரியான தருணம் எனத் தோன்றியது. இந்தப் புத்தகம், அவரது வாழ்க்கை வரலாற்றைப் பேசுவதல்ல; அவரைப் பற்றி நான் உணர்ந்த வற்றையும் என் பாட்டியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டவற்றைப் பற்றியுமான ஒரு தொகுப்பு. தாத்தா குறிப்புகள் எழுதிவைத்திருந்த ஒரு புத்தகம், 25 வருடங்களுக்கு முன்பு எனக்குக் கிடைத்தது. அந்தக் குறிப்புகள் ஒன்றிரண்டு வார்த்தைகளில் இருந்தன. அவற்றை இணைத்துப் புரிந்துகொள்வது சவாலாக இருந்தது. அவற்றின் மூலம் அவர் என்ன சொல்ல நினைத்திருப்பார் என்கிற என் உள்ளுணர்வின் அடிப்படையில் புரிந்துகொண்டேன். அடுத்த நொடியே என் மனக்கண்களில் அவை காட்சிகளாக விரிந்தன. தாத்தாவே என்னுடன் நேரடியாகப் பேசுவதுபோல உணர்ந்தேன். இப்படித்தான் இந்தப் புத்தகம் உருவானது’’ - புத்தகப் பின்னணி சொல்பவருக்கு, அந்த முயற்சிக்காகக் கேட்டறிந்த பல கதைகளும் புதிய சேதிகள் சொல்லியிருக்கின்றன.

``தாத்தாவுக்கும் பாட்டி பாகீரதிக்கும் ஐந்து பிள்ளைகள். தாத்தா, குடும்பத்தினரோடு வீட்டில் இருந்த நாள்கள் அரிதானவை. பெரும்பாலும் பயணத்தில் வாழ்க்கையைக் கழித்தவர். ஆனாலும், பிள்ளைகளிடமும் பேரக்குழந்தைகளிடமும் பேரன்பு கொண்டவராகவே இருந்தார். அவரது அதீதமான ஓவிய ஈடுபாடு, குடும்பத்துடன் அதிக நேரத்தைச் செலவிட அனுமதிக்கவில்லை. பாட்டியின் மீதும் தாத்தாவுக்கு அளவு கடந்த அன்பு இருந்தது. ஒவ்வொருமுறை ஊரிலிருந்து வீடு திரும்பும்போதும் பாட்டிக்கு அன்பளிப்புகள் வாங்கி வருவதை வழக்கமாகக்கொண்டிருந்தாராம். பாட்டி அளவுக்குத் தாத்தாவை நெருக்கமாகப் புரிந்துகொண்டவர்கள் யாரும் இல்லை’’ - தாத்தாவின் வாழ்க்கை வரலாறு சொல்பவருக்கு அவரின் ஓவியங்களின் மீது பெருங்காதல்!

``தாத்தாவின் ஓவியங்கள், வெறும் கலையார்வத்தின் பிரதிபலிப்புகள் மட்டுமல்ல; தன் கற்பனையைத் தத்ரூபமாகக் காட்ட நினைத்த அவரது விருப்பத்தின் வெளிப்பாடு. அதுவரை கோயில்களில் சிற்பங்களையும் உருவங்களையும் மட்டுமே கடவுள்களாகப் பார்த்த எங்களுக்கு, தாத்தாவின் ஓவியங்கள் கடவுள்களை நேரில் பார்ப்பது போன்ற உணர்வைத் தந்தன. தாத்தாவின் ஓவியங்களில் எனக்கு மிகவும் பிடித்தது `விக்டரி ஆஃப் இந்திரஜித்’. ஜகன்மோகன் அரண்மனையில் மைசூர் கலெக்ஷனில் ஒன்றாக இருக்கிறது அது. ஓவியத் தொழில்நுட்பங்களில் தாத்தாவுக்கு இருந்த நிபுணத்துவத்துக்கு அந்த 3டி ஓவியம் ஓர் உதாரணம்’’ - ருக்மிணி சொல்லும்போதே அந்த ஓவியத்தைப் பார்க்கும் ஆர்வம் எழுகிறது.
``ராஜா ரவி வர்மாவின் பாரம்பர்யத்தையும் பெருமையையும் அடுத்தடுத்த தலைமுறை களுக்குச் சொல்லவேண்டிய கடமை எனக்கு இருப்பதாக உணர்ந்தேன். அதற்காகத் தொடங்கியதுதான் `தி ராஜா ரவி வர்மா ஹெரிட்டேஜ் ஃபவுண்டேஷன்.’’

புதிய பொறுப்புக்கான காரணம் சொல்பவருக்கும், அவரின் தாத்தாவுக்கும் ஓவியத்தைப்போலவே இன்னோர் ஒற்றுமையும் இருக்கிறது. அது, சென்னைப் பாசம்.

``தாத்தாவுக்கு, சென்னை பிடிக்கும். 1904-ம் ஆண்டில் தாத்தா சென்னையில் ஓர் ஓவியக் கண்காட்சியில் தன் ஓவியங்களைக் காட்சிக்கு வைத்து, முதல் பரிசையும் வென்றார். என் அம்மாவின் சகோதரி சென்னையில் இருந்தவர். அடிக்கடி சென்னைக்கு வந்திருக் கிறேன். இன்றும் என் நெருங்கிய உறவினர் சென்னையில் வசிக்கிறார். அந்த வகையில் சென்னை, எனக்கும் மிகவும் பிடித்த இடம்.’’

ஆஹா!

- ஆர்.வைதேகி