'வேலன்டைன்ஸ் டே' திருநாளை முன்னிட்டு நாம அறிமுகப்படுத்துற லவ் கேம்... நவ் ரிங்க்ஸ்!

'விளையாட வாரீயளா..?’னு மதுரை காலேஜ் கேர்ள்ஸை அழைச்சோம்.

''என்ன, ஏதுனு கேட்காம வந்துட்டோம். கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்க..?''னு உஷாரான பொண்ணுங்ககிட்ட, விளையாட்டைப் பத்தி விளக்கம் கொடுத்தோம்!

''நவ் ரிங்க்ஸ். இது லவ்வர்ஸுக்கான கேம். பேருக்கு ஏத்த மாதிரி சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம்னு மொத்தம் ஒன்பது நிற ரிங்க்ஸ் இருக்கும். கூம்பு வடிவத்துல இருக்கற இந்த டான்ஸிங் ஸ்டிக்ல ஒவ்வொரு ரிங்கா போடணும். 9 ரிங்ஸையும் போடுறவங்களுக்கு, காதல் கல்யாணத்துக்கு கிளியர் க்ரீன் கார்டு கிடைக்கும். 6-8 ரிங்க்ஸ் போடுறவங்க, கொஞ்சம் பிரச்னைகள் தாண்டி மணமேடைக்குப் போவாங்க. 3-5 ரிங்க்ஸ் போடறவங்க பாடு டண்டணக்கா திண்டாட்டம்தான். அதுக்கும் கீழ போயிடுச்சுனா... சந்தேகமே இல்லாம ஊத்திக்கும். கமான்!''னு நாம சட்ட மசோதாவை வரையறுத்துவிட்டு, தெம்பாக ஒரு லுக் விட்டோம்.

கேர்ள்ஸெல்லாம் ஷாக் ஆகி, 'ஆத்தீ!’னு அப்ஸ்காண்ட் ஆயிடுவாங்கங்கனு பார்த்தா... ஷாக் அடிச்சது நமக்குத்தான். ''மோதிப் பார்க்க நாங்க ரெடி... கேம் ஆரம்பிக்க நீங்க ரெடியா?''னு தில் சவுண்ட் கொடுத்தாங்க. ஸ்டார்ட் மியூஸிக்!

ஓபனிங் ரிங் வீச்சாளரா (!) களத்தில் குதிச்சாங்க கேங் லீடர் அபிராமி. அதிரடியா முதல் ரிங்கை ஸ்டிக்ல போட்டு, ''எப்பூடி..?''னு மாஸ் காட்ட, ''தலைவி... யூ ஆர் கிரேட்!''னு கேர்ள்ஸ் சவுண்ட் கொடுக்க, அடுத்த ரிங்ல அபி அவுட்! ''அடச்சே... பில்ட் அப் எல்லாம் வேஸ்டா போச்சே!''னு தோழிகள் நொந்து நிற்க,

''யாமிருக்க பயம் ஏன்..?''னு களத்துல இறங்கினாங்க காயத்ரி. ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு... எல்லா ரிங்கையும் ஸ்டிக்குக்கு வெளிய போட்டு ஜீரோ ஸ்கோர். பொண்ணுங்க எல்லாம் பாவமா பார்க்க, ''மச்சி... லாங் ஸ்டிக்... ரவுண்டு ரிங்... ஹாரி பாட்டர் ஆல்ஸோ டீலிங் தி சேம் பிராபளம்!'னு காயத்ரி அழுகாச்சி காவியம் பாடினாங்க.

அடுத்து வந்த கற்பகம், ''ஸ்டிக்கை கொஞ்சம் பக்கத்துல வெச்சுக்கறோமே..?!''னு நம்மகிட்ட டீலிங் பேச, அந்த கேப்ல ஸ்டிக்கையும் ரிங்ஸையும் கடத்திருச்சு ஒரு காத்துக் கருப்பு. 'யார் அந்தக் களவாணி?'னு களேபரமாகித் தேடிப் பார்த்தா, ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டு எல்லா ரிங்க்ஸையும் அவசரமா ஸ்டிக்ல மாட்டி, ''ஹையா! நான் ஆல் பாஸ்!''னு கத்தினாங்க அபிநயா.

''ரூல்ஸ் மீறி இருந்தா... போனா போகுது பாவம்னு சான்ஸ் கொடுத்திருக்கலாம். இவ்வளவு கொடூரமா மொக்கை போட்டதுக்காக உன்னை ஊரைவிட்டே ஒதுக்கி வைக்குறோம். இனிமே ஆரும் அவகிட்ட அசைன்மென்ட், புராஜெக்ட் புழங்கக்கூடாது''னு நாட்டாமை கணக்கா அபிராமி தீர்ப்புச் சொன்னாங்க.

''இது எமோஷனல் கேமா இருந்தாலும், இதுக்கு டெக்னிக்கல் அறிவை யூஸ் பண்ணணும்ப்பா!''னு ஸீனுக்கு வந்த கீர்த்தி... ''இதோ... இப்படி ஆங்கிள் பார்த்து... இப்படி எய்ம் பண்ணி... இப்படி தூக்கிப் போடணும்!''னு கீர்த்தி போட்ட 9 ரிங்ஸும்... ஸ்டிக்குக்கு வெளியில.

''மெகா பல்ப். என்னடி ஆச்சு உன் டெக்னிக்கல் அறிவு..?'னு காயத்ரி கிண்டிவிட, கீர்த்தி கப்சிப்!

தொடர்ந்து சொதப்பல்ஸாவே இருக்க, கேங்கோட படிப்ஸ், பிஸிக்ஸ் புலி, ஆக்ஷன் கேர்ள்னு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோட களத்துல இறங்கிவிடப்பட்டாங்க... யாழினி. தொடர்ந்து 4 ரிங் போட, ஆட்டம் சூடு பிடிக்க, கூட்டத்துக்கு சந்தோஷ சர்ப்ரைஸ். ஆனா, 5-வது ரிங்க்ல புலி புல்லைக் கவ்வினது, ஆன்ட்டி க்ளைமாக்ஸ்!

யாரும் எதிர்பார்க்காத நேரத்துல பத்ரா சடசடனு 6 ரிங் போட்டு திடீர்னு ஸ்டார் பிளேயர் ஆகிட, ஏழாவது ரிங்கை கையில வெச்சுட்டு, சென்ச்சுரி பாலுக்கு முன்னால வார்ம் அப் பண்ற சச்சின் மாதிரி செம பில்ட் அப் விட்டாங்க. அத்தனை பேரும் சீரியல் பார்க்குற மாதிரி அவங்களை சீரியஸாப் பார்த்துட்டே இருக்க, பத்ராவின் 7-வது ரிங்... அவுட் ஆஃப் பவுண்டரி.

''அவுச்!''னு கோரஸ் எக்ஸ்பிரஷன் காட்டினாங்க கேர்ள்ஸ்.

''ஆட்டம் ஓவர். இப்போ எல்லாரும் அவங்கவங்களோட லவ் ஸ்டோரி சொல்லுங்க!''னு நாம ரெடியானோம்.

''என்னது... லவ்வா..? நாங்கெல்லாம் சமர்த்தோ சமர்த்துங்க. அம்மா, அப்பா சொல்ற பையனைத்தான் கல்யாணம் செய்துக்குவோம்னு சபதம் எடுத்திருக்குற குலவிளக்குங்க. போர் அடிச்சுக் கிடந்தப்போ டைம் பாஸா நீங்க வந்து சிக்குனீங்க. ஜாலியா விளையாடினோம். அவ்ளோதான் பாஸ்.

எனிவே... ஒரிஜினல் (!) லவ்வர்ஸ் இந்த கேம்-ஐ ட்ரை பண்ணுங்கப்பா... இன்ட்ரஸ்டிங்கா இருக்கு!''னு பரிந்துரைச்சாங்க பாசக்காரப் பொண்ணுங்க!

நவ் ரிங்க்ஸ்... லவ் ரிங்க்ஸ் !