Published:Updated:

``கணவர் இறந்த பிறகு, கடற்கரைதான் காப்பாத்துது!" மெரினாவில் கடலை விற்கும் தங்கம்

``கணவர் இறந்த பிறகு, கடற்கரைதான் காப்பாத்துது!" மெரினாவில் கடலை விற்கும் தங்கம்

``கணவர் இறந்த பிறகு, கடற்கரைதான் காப்பாத்துது!" மெரினாவில் கடலை விற்கும் தங்கம்

``கணவர் இறந்த பிறகு, கடற்கரைதான் காப்பாத்துது!" மெரினாவில் கடலை விற்கும் தங்கம்

``கணவர் இறந்த பிறகு, கடற்கரைதான் காப்பாத்துது!" மெரினாவில் கடலை விற்கும் தங்கம்

Published:Updated:
``கணவர் இறந்த பிறகு, கடற்கரைதான் காப்பாத்துது!" மெரினாவில் கடலை விற்கும் தங்கம்

விடுமுறை நாளில் செலவின்றி, நேரம் செலழிக்கப் பலரும் தேர்ந்தெடுப்பது கடற்கரைக்குச் செல்வதைத்தான். சென்னையில் வசிப்பவர்கள் எனில், பெரும்பான்மையினர் தேர்வு மெரினா கடற்கரைதான். குழந்தைகளுக்கும் கடல் என்றால் அவ்வளவு பிடிக்கும். கடல் அலையில் ஆட்டம் போடுவதில் அவர்களுக்குத் தனி சுகம்தான். பொழுதுபோக்கச் செல்லும் கடற்கரையைத் தம் அன்றாடப் பிழைப்புக்காக சின்னச் சின்னப் பொருள்களை விற்பவர்களைப் பார்க்க முடியும். அவர்களின் ஒருவர்தான் தங்கம். பெரிய கூடை, அதன் அடிப்பாகம் ஈரமாகவிடக் கூடாது என பிளாஸ்டிக் சாக்கு வைத்துத் தைக்கப்பட்டிருக்கிறது. கால்களில் ரப்பர் செருப்பு. கடல் அலைகளின் சத்தத்தை மீறி, "கடல... கடல..." கூவிக்கொண்டே செல்கிறார் மெரினாவுக்குச் செல்பவர்களில் பலரும் அவித்த கடலை விற்கும் தங்கத்தைப் பார்த்திருக்கக் கூடும். அவரிடம் பேச்சுக்கொடுத்தோம். 

``கணவர் இறந்த பிறகு, கடற்கரைதான் காப்பாத்துது!" மெரினாவில் கடலை விற்கும் தங்கம்

``அக்கா, உங்க பேரு என்ன, சொந்த ஊரு சென்னையேதானா?"

அவித்த கடலை இருக்கும் கூடையை இறக்கி வைத்துக்கொண்டே, ``எம் பேரு தங்கம். சொந்த ஊரு ராம்நாடு. வீட்டுக்காரு, புள்ளைங்களோட அங்கேதான் இருந்தோம். அவருக்கு இருந்த குடிப்பழக்கம், அவரோட உசுரையே வாங்கிடுச்சு. அப்பறம் நான் வேலைக்குப் போய்தான் புள்ளைங்கள காப்பத்தணும். நல்லா படிக்க வைக்கணும் ஆசை. உள்ளூர்ல வேலை ஏதும் கிடைக்கல. அதனால, நான் மட்டும் தனியா நாலு வருஷத்துக்கு முன்னாடி சென்னைக்கு வந்தேன். அதுங்களுக்காகத்தான் இந்த பீச்சுல கடலைக் கூடையைத் தூக்கிட்டு நிக்கிறேன். இந்தக் கடற்கரைதான் எங்களைக் காப்பாத்துது"

``உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்... எங்கிருக்காங்க?"

``ஒரு பொண்ணு. ரெண்டு பசங்க. கஷ்டப்பட்டு பொண்ணைக் கட்டிக்கொடுத்துட்டேன். பசங்களையும் என்னால முடிஞ்ச அளவுக்கு படிக்க வெச்சிருக்கேன். பெரியவன் டிப்ளோமா முடிச்சிருக்கான். சின்ன பையன் ஐ.டி படிச்சிருக்கான். இவ்வளவு படிச்சி என்ன புரயோஜனம். சரியான வேலை கெடைக்கலன்னு சொல்றானுங்க. பொழப்பு ஓடணும்ங்கிறதுக்காக, சொந்த ஊர்ல கிடைக்கிற வேலைக்குப் போயிட்டு இருக்கானுங்க" 

``கணவர் இறந்த பிறகு, கடற்கரைதான் காப்பாத்துது!" மெரினாவில் கடலை விற்கும் தங்கம்

``தினமும் கடலை விற்க எப்போது கடற்கரைக்கு வருவீங்க?" 

``கூடை நிறைய கடல எடுத்துட்டு மத்தியானம் ரெண்டு மணிக்கெல்லாம் வந்துடுவேன். கூட்டம் வர, வர அங்கே இங்கேன்னு அலைஞ்சிட்டே இருக்கணும். பத்துப் பேரு கிட்ட கேட்டா, ரெண்டு பேரு வாங்குவாங்க. எல்லாத்தையும் வித்து முடிக்க, ராத்திரி ஒன்பது மணியாயிடும். வீட்டுக்குப் போகும்போது அடுத்த நாள் விக்கிறதுக்கான கடலையை வாங்கிட்டுப் போய்டுவேன். இப்போ ஒரு கிலோ 80 ரூவா விக்குது. அதைக் காலையிலேயே கொஞ்சம் அவிச்சும் கொஞ்சம் வறுத்தும் எடுத்துட்டு வருவேன்" 

``வருமானம் எல்லாம் எப்படி?"

``என்னத்த வருமானம்! ஒரு நாளைக்கு நூறுலேருந்து இருநூறு ரூவா வரைக்கும் கிடைக்கும். லீவு நாள்ல வியாபாரம் கொஞ்சம் நல்லா இருக்கும். சில நாள்ல கூட்டமே இருக்காது. கொண்டு வந்த கடலை கெட்டுப்போன கதையும் இருக்கு"

``எங்கே தங்கியிருக்கீங்க?"

``நொச்சிக்குப்பத்துலதான் தங்கியிருக்கேன். பாத்ரூம் வசதிகூட கிடையாது. ஆனா, வாடகை மூவாயிரம் ரூவா வாங்கிப்பாங்க. பல மாசம் கடன் வாங்கிதான் வாடகையையே கொடுக்கிற மாதிரி ஆயிரும். கடலையை வித்து, கடனை அடைப்பேன். அதுபோல மிஞ்சுற காசை புள்ளைங்களுக்குக் கொடுத்திருவேன். என் கையில எப்பவும் காசு இருக்காது. எவ்வளவு கஷ்டம்னாலும் புள்ளைங்களுக்காகச் சகிச்சிட்டு இருக்க வேண்டியதுதான். பசங்க நல்ல நெலமைக்கு வந்தா கொஞ்சம் நிம்மதியாயிருக்கும். சரி... சரி, நான் பொழப்பப் பாக்குறேன்" என்றபடி, கூடையைத் தூக்கிக்கொண்டு நடக்கத் தொடங்கினார். 

தங்கம் போன்ற எளிய மனிதர்களின் பொருளாதார தேவைகளுக்கும் அலையாடிக்கொண்டே உதவுகிறது கடல். 

- கோ.ஜெயசுதா, ஜெ.சந்தியா தேவி