Published:Updated:

" எல்லாமே எனக்கு 'நெளஃபல்'தான் !"

" எல்லாமே எனக்கு 'நெளஃபல்'தான் !"

பிரீமியம் ஸ்டோரி

ஆஹா...ஆர்ஜே !

" எல்லாமே எனக்கு 'நெளஃபல்'தான் !"

கோடை பண்பலையோட குளிர் குரல் ஆர்.ஜே... நஸ்ரீன் சஹானா! 'பண்பலைப் படைப்பாளிகள்’, 'வானவில்’னு கோடை எஃப்.எம்-ல பல 'ஹிட்’ நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கற நஸ்ரீன்கிட்ட ஆட்டோகிராஃப் கேட்கற ரசிகர்கள், தென் மாவட்டங்கள்ல அதிகம்! எஃப்.எம்-ல வர்ற குடுகுடு தமிழா இல்லாம, நிதானமா வார்த்தைகள் கோக்கற நஸ்ரீனோட பேச்சு, அழகோ அழகு!  

''பிறந்து, வளர்ந்ததெல்லாம் கொடைக்கானல்லதான். சின்ன வயசுல எங்க அக்கா ரேடியோ கேட்டுட்டே இருப்பாங்க. 'எப்ப பார்த்தாலும் இதை அலறவிட்டுட்டே இருக்கீங்களே’னு கோவிச்சுக்குவேன். ஆனா, பி.எஸ்சி. அப்ளைடு எலெக்ட்ரானிக்ஸ் படிச்சு, கோடை ரேடியோ ஸ்டேஷன்லயே வேலைக்குச் சேருவேன்னு நினைக்கல. புரொடக்ஷன் பிரிவுல வேலை. எல்லா ரூம்லயும் எஃப்.எம். ஒலிபரப்பாயிட்டே இருக்கும். 'அக்காவை எல்லாம் திட்டினதுக்கு பனிஷ்மென்ட்’னு நொந்துட்டே வேலை பார்த்த எனக்கு, போகப் போக பிடிச்சுப் போச்சு.

கவிதை, கதையெல்லாம் எழுதறதுல ஆர்வம் அதிகம். புனைப்பெயர்ல என்னோட கற்பனைகளை எழுதி, கோடை எஃப்.எம். ஸ்டேஷனுக்கே அனுப்பி வெச்சேன். 'கதவைத் தட்டும் கற்பனைகள்’ங்கற புரோகிராம்ல அதை ஒலிபரப்பினப்போ, அவ்ளோ சந்தோஷம்! அடுத்ததா... 'அறிவிப்பாளர் தேவை'னு ஒரு தகவலைக் கேள்விப்பட்டு அப்ளிகேஷன் போட்ட நான், இப்ப 'ஆர்ஜே' நஸ்ரீன் ஆகிட்டேன்!

##~##

என்னோட முதல் புரோகிராம் 'மாலை மயக்கம்’. ஆக்சுவலா அதைப் பண்ண வேண்டியவங்க அன்னிக்கு வரல. 'நீ பண்ணிடும்மா’னு திடீர்னு உக்கார வெ

" எல்லாமே எனக்கு 'நெளஃபல்'தான் !"

ச்சுட்டாங்க. எல்லாரும் கொடுத்த தைரியத்துல தப்பில்லாம பண்ணி பாராட்டு வாங்கிட்டேன்! அதுல ஆரம்பிச்சது... இதோ ஏழு வருஷமா பேச்சும், பாட்டும், கொண்டாட்டமுமா போயிட்டிருக்கு!

என் வேலையை சுவாரஸ்யமாக்கறது... ரசிகர்கள். கால் பண்ணி பேசறவங்க, லெட்டர்ஸ் போடறவங்க, நேர்ல வர்றவங்கனு ஏகக் கூட்டம். பொழுதுபோக்குக்காக இல்லாம ரொம்ப அன்போட இருப்பாங்க. எனக்கு கல்யாணம் ஆனப்போ, குழந்தை பிறந்தப்போ எல்லாம் அவங்க அனுப்பி குவிச்ச வாழ்த்துக்கள், என்னை ரொம்ப ஸ்பெஷலா உணர வெச்சுது!

என் கணவர் ஜாகீர் உசேன், மெடிக்கல் எக்ஸிகியூட்டிவா இருக்கார். மூணு வயசுப் பொண்ணோட பேரு, 'நௌஃபல்’. 'இறைவனின் அன்பளிப்பு’ங்கறது பெயருக்கான அர்த்தம். இந்த வேலையும், என் ரசிகர்களும்கூட எனக்கு 'நௌஃபல்’தான்!''

- ஜி.பிரபு  
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு