''பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று செல்லும் இளம்பெண்கள் முதல், ஹாயாக 'வாக்கிங்’ செல்லும் பாட்டிகள் வரை வழிப்பறி மற்றும் பாலியல் சீண்டல்கள் என பிரச்னைக்கு உள்ளாவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இப்படிப்பட்ட அராஜகங்களில் ஈடுபடும் ஆண்களை, போலீஸ்தான் கவனிக்க வேண்டும் என்று காத்திருக்காமல், பெண்களே எதிர்கொள்வதுதான் உடனடி தீர்வாக இருக்கும். அதற்கு, தற்காப்புக்கலை கற்றிருக்க வேண்டியது காலத்தின் அவசியம்.

இதைச் சொன்னதுமே... 'கராத்தே, ஜூடோ, களரி... இதெல்லாம் கத்துக்கணுமா?' என்று ஒதுங்கத் தேவையில்லை. உங்களிடம் அந்தச் சமயத்தில் இருக்கும் வளையல், துப்பட்டா, குடை போன்ற பொருட்களே போதும்... சட்டென சுதாரித்து எதிராளியை விரட்டி அடிக்க!''

- காலத்தின் கட்டாயமாக தற்காப்புப் பாடத்தை பெண்களுக்கு வலியுறுத்துகிறார் 'கோபுடோ’ கிருஷ்ணமூர்த்தி.

தமிழக அளவில் பலருக்கும் கராத்தே பயிற்சி அளித்து வரும் கிருஷ்ணமூர்த்தியிடம் பயின்ற 16 மாணவ - மாணவிகள், உலக அள வில் 'தங்கப் பதக்கம்’ பெற்றுள்ளனர். தற்போது கராத்தே கலையில் பிஹெச்.டி-யும் செய்துவரும் இவர்... பெண்கள், தங்களை தற்காத்துக் கொள்ள கற்றுத் தரும் தற்காப்பு முறைகள், மிகமிக அவசியமானவை.

''ஒருவரின் உடலில் எளிதாகத் தாக்கக் கூடிய பாகங்களான கண், வாய், மூக்கு போன்ற பகுதிகளைத் தாக்கினாலே, எதிராளி எளிதில் தடுமாறிவிடுவான். கைவசம் பாக்கெட் கத்தி, மிளகாய்ப் பொடி, பெப்பர் ஸ்பிரே இல்லை என்றாலும்... துப்பட்டா, டவல், குடை, சாவிக் கொத்து, மோதிரம், சில்லறைக் காசு, சுருட்டப்பட்ட வார, மாத இதழ் என்று கையில் உள்ள பொருட்களையே ஆயுதமாகப் பயன்படுத்தலாம். குறைந்த கால பயிற்சியே இதற்குப் போதுமானது.

உதாரணமாக, ஒரு பெண் இரவு நேரத்தில் இருட்டான பகுதியில் செல்லும்போது முன்னெச்சரிக்கையாக துப்பட்டாவில் ஒரு கல்லை முடிந்து வைத்துக் கொள்ளலாம். யாரேனும் கத்தி அல்லது ஆயுதம் கொண்டு தாக்க வந்தால், தங்கள் கையில் உள்ள குடையை சட்டென ஆயுதமாக்க வேண்டும். எதிராளி குத்த வரும்போது குடையால் அதைத் தடுத்து, குடையின் வளைந்த கைப்பிடிக்குள் அவன் கையைச் சிக்க வைத்துத் திருகி, கீழே இழுத்துப் போட்டு, அவன் சுதாரிப்பதற்குள் தப்பிக்கலாம்.

வளையலைக் கழட்டி எதிராளியின் மணிக்கட்டில் வேகமாகக் குத்தினால், வலி தாங்காமல் கையை விட்டுவிடுவான். விடாமல் சட்டென அவன் முகத்திலும் வளையலால் குத்த வேண்டும். ஏதாவது ஓர் ஆயுதம் அவன் கையில் இருந்தால், துப்பட்டாவால் அவன் கையை முறுக்கி, கால் முட்டியால் அவன் நெஞ்சில் உதைத்துக் கீழே தள்ள வேண்டும். எதிராளி கழுத்தை நெரித்தால், கைவிரல்களே ஆயுதம். இரண்டு விரல்களைக் கொண்டு அவன் கண்ணைக் குத்தலாம். கட்டை விரல்களைக் கொண்டு வாயைக் கிழிக்கலாம்.

பெண்கள் பெரும்பாலும் எதிர்ப்பதில்லை என்பதாலேயே திருடர்களும், போக்கிரிகளும் தைரியம் பெற்று வாலாட்டுகிறார்கள்... தப்பிக்கிறார்கள். 'துப்பட்டாவே துப்பாக்கி', 'வளையலே வாள்' என்று மனதில் நினைத்துக் கொண்டு நீங்கள் ஒரு அடியேனும் திருப்பி அடித்தால், அதைச் சற்றும் எதிர்பார்க்காத எதிராளி கண்டிப்பாக நிலை தடுமாறுவான். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உதவிக்கு ஆட்களை அழைக்கும் வகையில் சத்தம் போடலாம். இது, அவனை நிலைகுலையச் செய்துவிடும். இதனால், திருடுவதையோ, சில்மிஷம் செய்வதையோவிட தப்பிக்கத்தான் அவன் நினைப்பான். இதன் மூலம் நம்மையும் நம் உடைமையையும் காப்பாற்றிக் கொள்ளலாம்!'' என்று நம்பிக்கை கொடுத்தார் கிருஷ்ணமூர்த்தி.

தூள் கிளப்புங்கள் தோழிகளே!