Published:Updated:

பூமிக்கு வந்த ஏஞ்சல் !

பூமிக்கு வந்த ஏஞ்சல் !

பூமிக்கு வந்த ஏஞ்சல் !

பூமிக்கு வந்த ஏஞ்சல் !

Published:Updated:
##~##

செமஸ்டர் பரீட்சைகள், விடுமுறைகள் என்று கொஞ்சம் இடைவெளி விட்டிருந்த 'அவள்- டீன் ஃபேஷன் ஷோ’, இதோ... ரீ-ஸ்டார்ட்!

குளுகுளு கோவையில் உள்ள ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் வாசலில் இருந்தே தோரணங்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சலசலக்க... வரவேற்பு பலமாக களைகட்டியிருந்தது! ஆடிட்டோரியம், மாணவிகளால் நிரம்பியிருந்தது!

கல்லூரியின் காட்சித் தொடர்பியல் துறைத் தலைவரான சார்லஸ், ''பல கல்லூரிகள், நமக்கு கிடைக்காதானு ஏங்கிட்டு இருக்குற வாய்ப்பு இது. நமக்குக் கிடைச்சுருக்கு. இதை முழுமையா பயன்படுத்திக்கோங்க!'' என்று மேடையேறி மாணவிகளை சியர்-அப் செய்தார்.

பூமிக்கு வந்த ஏஞ்சல் !

'என் ஃப்ரெண்டைப் போல யாரு மச்சான்...’ என்று இரண்டு மாணவர்கள் வெல்கம் டான்ஸ் ஆடிவிட்டு அரங்கத்தைவிட்டு வெளியேற, முழுக்க முழுக்க கேர்ள்ஸ் வசமானது ஆடிட்டோரியம்.

ஃபேஷன் ஷோவுக்கு நடுவராக, ஃபேஷன் டெக்னாலஜி துறையைச் சேர்ந்த ஷோபனா செல்வன் வந்து அமர, அழகு பெண்களின் அணிவகுப்பு ஆரம்பமானது. பிரின்சஸ் ஃப்ராக், பட்டர்ஃப்ளை பார்ட்டி வேர், கிராண்டான  பச்சை கலர் டிசைனர் புடவை என்று கேர்ள்ஸ் வெரைட்டி விருந்து கொடுக்க, உடைகளோடு அவர்களின் 'ஆட்டிட்யூட்’க்கும் மதிப்பெண்கள் குறித்துக் கொண்டார் நடுவர். பேக்கிர வுண்ட் மியூஸிக், ஆடியன்ஸ் கிளாப்ஸ், ஒய்யார நடை என்று நகர்ந்த அந்த நிமிடங்கள்... உற்சாகச் சாரல்!

பூமிக்கு வந்த ஏஞ்சல் !

இறுதியாக, மதிப்பெண் பட்டியலோடு மேடை ஏறினார் நடுவர் ஷோபனா. மேடையில் அணிவகுத்து நின்றிருந்த கேர்ள்ஸ் ஒவ்வொருவரிடமும், ''உங்க டிரெஸ் பத்தி நீங்களே சொல்லுங்க...'' என்று அவர் மைக் நீட்டியது, யாரும் எதிர்பாராத ஜாலி எபிசோட்.

''இதில் யாரை செலக்ட் பண்றதுனு ஒரே குழப்பமா இருக்கு. அத்தனை பேருக்கும் முதல் பரிசு கொடுக்கலாம்னுதான் ஆசை. வேற வழி இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டு மூணு பேரை செலக்ட் செய்திருக்கேன். அதுக்கு முன்னால போட்டியாளர்கள் அனைவருக்குமே ஆறுதல் பரிசு கொடுத்துடலாம்...'' என்று ஷோபனா சொல்ல, ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்ட எல்லா மாணவிகளுக்கும் 'நெய்ல் கேர் கிட்' பரிசாக வழங்கப்பட்டது.

பூமிக்கு வந்த ஏஞ்சல் !

''மூன்றாவது பரிசு... 'மயில் போல பொண்ணு ஒண்ணு'னு 'பீகாக் மாடல் பார்ட்டி வேர்’ ஆடை அணிந்து வந்து அசத்தின ஐஸ்வர்யாவுக்கு!'' என்ற ஷோபனா அவருக்கு 'ஐ ஷேட் கிட்’-ஐ வழங்கினார். ''இரண்டாவது பரிசு, பட்டாம்பூச்சிக்கு!'' என்றவுடன், பட்டர்ஃபிளை பார்ட்டி வேர் டிரெஸ்ஸில் கலக்கிய ஃபஸ்னா வந்து ஹேர் டிரையரைப் பெற்றுக் கொண்டார். ''முதல் பரிசுக்கு சஸ்பென்ஸ் தேவையில்லை. பிரின்ஸஸ் உடையில், ஒரு ஏஞ்சல் பூமிக்கு வந்ததுபோல் இந்த மேடைக்கு வந்த கீதாஞ்சலி...'' என்று ஷோபனா அறிவித்ததுதான் தாமதம், கைதட்டல்கள் காற்றைக் கிழிக்க மேடைக்கு வந்து, 'மெகா மேக்கப் கிட்’-ஐ பரிசாகப் பெற்றுக்கொண்டார் அவர். கூடவே, கல்லூரி மாணவிகள் சார்பாக 'மிஸ்.ஹிந்துஸ்தான்’ என்ற பட்டத்தையும் அவருக்கு சூட்டி தலையில் ஓர் கிரீடத்தை வைக்க, சந்தோஷத்தில் மிதந்தார் கீதாஞ்சலி.

பூமிக்கு வந்த ஏஞ்சல் !

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான சீனிவாசன், ''எந்தக் கல்லூரியிலும் இல்லாத அளவுக்கு இந்த நிகழ்ச்சியை சூப்பரா நடத்திடணும்னு எங்க பொண்ணுங்ககிட்ட சொல்லி, கடந்த ஒரு மாசமா இதற்கான வேலையில்தான் இருந்தோம். அதுக்கான பலன் கிடைச்சிருக்கு. இந்த ஆண்டில் எங்கள் கல்லூரியின் மறக்க முடியாத நினைவுகளில் 'டீன் ஃபேஷன் ஷோ’வும் ஒன்று. வாய்ப்பளித்த அவள் விகடனுக்கு நன்றி!'' என்று நெகிழ்ந்தார்.

கோவை தந்த உற்சாகத்தோடு அடுத்த ஊருக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். அது எந்த ஊர்? சஸ்பென்ஸ்..!

- கே.ராஜாதிருவேங்கடம், எஸ்.ஷக்தி
படங்கள்: வி.ராஜேஷ்,
செ.பாலநாக அபிஷேக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism