Published:Updated:

கொஸ்டீன் ஹவர்

புதுமைப் பெண் என்பதே வேஷமா ?

கொஸ்டீன் ஹவர்

புதுமைப் பெண் என்பதே வேஷமா ?

Published:Updated:
##~##

''நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் எவர்க்கும் அஞ்சாத நெறிகள்... இப்படிப் பள்ளிப் பருவம் முதலே புதுமைப் பெண்ணாக என்னைச் செதுக்கிக் கொண்டேன். எல்லா போட்டிகளிலும் பரிசுகளை அள்ளியும் வருகிறேன்.

இது இப்படியிருக்க, கல்லூரியில் கால் வைத்த கொஞ்ச காலத்திலேயே, 'பார்வைக்கு சுமாராக இருப்பதையும், மாடர்னாக இல்லாததையும் மறைப்பதற்காகவே இப்படி புதுமை வேஷம் போடுகிறாய்' என்று தோழிகள் கமென்ட் அடிக்கிறார்கள். இதன்காரணமாக, இந்தப் பருவத்துக்கே உரிய நட்புக்கு ஏங்கி பரிதவிக்கும் சாமானிய மாணவியாக என்னை உணர்கிறேன். நான் இப்போது என்ன செய்யட்டும்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- தன்னுடைய சிக்கலான சூழலை வெளிப்படையாக தெரிவித்து ஆலோசனைக் கேட்டிருக்கிறார் புதுவை மாணவி தமயந்தி. அவருக்கு பதில் தருகிறார் திருச்சியைச் சேர்ந்த மனநல ஆலோசகர் பி.பிரதீபா.

''கை கொடுங்கள் தமயந்தி. ஓர் உதாரண மனுஷியாக உங்களை நீங்கள் கட்டமைத்திருக்கிறீர்கள். அதற்காக வாழ்த்துக்கள் முதலில்! பிற சராசரிப் பெண்களுக்கு மத்தியில், வித்தியாசம் காட்ட விழையும் பெண்கள் சந்திக்கும் நடைமுறை பிரச்னைதான் இது. ஒரு புதுமைப் பெண்ணாக உங்கள் இயக்கம் எப்போதும் தொடரட்டும். எதற்காகவும் யாருக்காகவும் உங்கள் தனித்தன்மைகளை விட்டுத்தர வேண்டாம்.

கொஸ்டீன் ஹவர்

அதேசமயம், உங்கள் நட்பு வட்டம், இந்த விஷயங்களுக்காகவே உங்களைக் கொண்டாட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதுதான் பிரச்னை. உண்மையான நட்பு வட்டம் என்பது ஜோடனையற்றது. பாசாங்குக்கு அங்கு இடம் இருக்காது. ஒரு மாணவி எத்தனை செல்வச் செழிப்பில் இருந்தாலும், படிப்பில் முதல் மாணவியாக வலம் வந்தாலும், உலக அழகி என்றாலும் அவளுடைய தோழிகள் வட்டத்தில் அவள் மற்றவர்களைப்போல ஒருவரே. இதுதான் நட்பின் ஆசீர்வாதம். வெற்றுப் பூச்சுகள் அற்ற அப்பட்டமான நட்பை உணர்ந்து கொண்டாடுங்கள்.

மாறாக, 'என்னைக் கேலி செய்கிறார்கள்...’ என்று கவலைப்படத் தேவையில்லை. கல்லூரி கால நட்பில் எல்லா விஷயங்களையுமே இப்படித்தான் பட்டவர்த்தனமாக போட்டு உடைப்பார்கள், கமென்ட் செய்வார்கள். இதை ஸ்போர்டிவ்வாக ரசிக்கப் பழகிக் கொள்ளுங்கள். உங்களது திறமைகளை வெளிப்படுத்திக் கொள்ள உங்களுக்கென வேறு மேடைகள் இருக்கும்போது, தோழிகளிடம் 'நீங்கள் என் திறமைகளைப் பாராட்டவில்லை...’ என்று குறைபட்டுக்கொள்வது தவறான எதிர்பார்ப்புதானே?

கொஸ்டீன் ஹவர்

ஓர் உண்மை தெரியுமா தமயந்தி... உங்கள் தோழிகள், நட்பு வட்டத்தில் உங்களை வெளிப்படையாகக் கொண்டாடவில்லையே தவிர, அவர்கள் மனதில் உங்கள் தனித்தன்மையின் மீது நிச்சயம் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பார்கள். அவர்கள் பெற்றோர், உறவுகளிடம், 'என் ஃப்ரெண்ட் தமயந்தி அவ்ளோ டேலன்டட்...’ என்று பெருமைப்படுவார்கள். நிதானமாகக் கவனித்தால்... அதையும் உங்களால் உணர முடியும். எனவே, மேடைக்கு உரிய அலங்காரங்களைக் கழற்றி வைத்துவிட்டு எளிமையாக தோழிகள் மத்தியில் வலம் வந்து பாருங்களேன்... சீக்கிரம் உங்களை தங்களில் ஒருவராக அங்கீகரித்துவிடுவார்கள். இயல்பான மாணவியாக உங்களது கல்லூரித் தருணங்களை நினைவுகூரவும் இதுவே உதவும்.

உங்களின் கேள்வியை வைத்துப் பார்க்கும்போது, உங்களிடம் தாழ்வு மனப்பான்மையும் ஈகோவும் கொஞ்சம் போல ஒட்டியிருப்பதாகவும் யூகிக்க முடிகிறது. இது உண்மை என்றால், இவற்றையும் களைந்துவிட்டு நட்பைக் கொண்டாடுங்கள்... நட்பு நிச்சயம் உங்களைக் கொண்டாடும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism