Published:Updated:

ஃபேஷன் ஒரு வட்டம் !

ம.மோகன் படங்கள்: என்.விவேக்

ஃபேஷன் ஒரு வட்டம் !

ம.மோகன் படங்கள்: என்.விவேக்

Published:Updated:

- இப்படி ஒரு பன்ச் டயலாக்கே வைக்கலாம். ஆமாம்... நம்ம பாட்டி காலத்துல ஃபேஷனா இருந்தது, அம்மா காலத்துல ஓல்ட் ஆகி, மறுபடியும் நம்ம காலத்துல ட்ரெண்ட் ஆயிடும். நீளக் கை, குட்டைக் கை, த்ரீ ஃபோர்த்னு ஆடைகள் விஷயத்தில் மட்டுமில்ல... ஹேர் ஸ்டைல் ஏரியாவிலும் அதுதான் விதி!

''அப்படித்தான் அம்பிகா, ராதானு 80-கள்ல நாம திரையில பார்த்த ஹிட் ஹேர் ஸ்டைல்ஸ்... இப்போ அமலா பால், தமன்னா இவங்க தலையிலயும் ஜொலிக்குது. அந்த வகையில ஓல்ட் ஸ்டைல்ல இருந்து, இப்போ ரீ-பார்ன் ஆகி கலக்கிட்டிருக்குற 'டாப் ஃபோர் ஹேர் ஸ்டைல்'ஸ்... ஸிக் ஸாக் ட்விஸ்ட், ரோமன் ட்விஸ்ட், பட்டர்ஃப்ளை அட்டாச்டு செய்த சம்மர் ப்ளாயிட் மற்றும் சைடு போனி டெயில்!'' - செம கலகலப்பாகவே ஆரம்பித்தார் சென்னை, 'க்ளோ’ சலூனின் ஹேர் ஸ்டைலிஸ்ட் ஜெய்ஸ்ரீ.

ஃபேஷன் ஒரு வட்டம் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சினி ஸ்டார்ஸுக்கு மட்டுமில்ல... கேம்பஸ் கேர்ள்ஸ் ஏரியாவிலும் இப்போ இதுதான் ஹிட். குறுக்க நெடுக்க வகிடு எடுத்தா, அதுதான் ஸிக் ஸாக் டிவிஸ்ட்; ஒற்றை ஜடை பின்னலில் பட்டர்ஃப்ளை கிளிப்களை மாட்டினால் அது சம்மர் ப்ளாயிட்; போனி டெயில் ஹேர் ஸ்டைலை ஏதாவது ஒரு சைடாகப் போட்டால் அது சைடு போனி டெயில்; முடியை மடித்து தலையோடு சேர்த்து க்ளிப் மாட்டி அதன் மேல் பேண்ட் போட்டுவிட்டால் அது ரோமன் டிவிஸ்ட்!''

- மாடல்கள் ரேச்சல் மற்றும் பினிதாவை வெச்சு பிராக்டிகலா செய்து காட்டினாங்க ஜெய்ஸ்ரீ.

ஃபேஷன் ஒரு வட்டம் !

''ஹேர் ஸ்டைலை கேர் எடுத்து செஞ்சுக்கறது ஓ.கே... ஆனா, அதே அளவு முக்கியத்துவத்தை கூந்தல் பராமரிப்புக்கும் கொடுக்கணும். படிப்பு, வேலைனு பரபரப்பா ஓடிட்டே இருந்தாலும், கூந்தலுக்கும் நேரத்தை ஒதுக்கியே ஆகணும். இன்னிக்கு பெரும்பாலான கேர்ள்ஸ், கூந்தலை இறுகச் சுருட்டி 'லோ பன்’ அல்லது 'ஹை பன்’ அமைச்சுட்டு ராத்திரியில தூங்கப் போயிடுறாங்க. இது ரொம்ப தப்பு. பல மணி நேரத்துக்கு கேசத்தை இப்படி இறுக்கிக் கட்டறதால, அது டேமேஜ் ஆகலாம். பதிலா, நைட்ல ஃப்ரீ ஹேரா விடுறதுதான் நல்லது. அது கேசத்தை சேதப்படுத்தாததோட, அங்கங்க நெளிஞ்சு, வளைஞ்சுனு இல்லாம... மறுநாள் நாம விரும்புற ஹேர் ஸ்டைலை அமைச்சுக்கவும் வசதியா இருக்கும்'' என்ற ஜெய்ஸ்ரீ,

ஃபேஷன் ஒரு வட்டம் !

''அதேபோல ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஷாம்பு பாத் எடுக்கலாம். காலையில கிளம்புற அவசரத்துல தலைக்குக் குளிச்சு, ஷாம்புவை சரியா அலசாம, ஈரத்தை முழுமையா உலர்த்தாமனு காலேஜுக்கு ஓடுறதைவிட, முதல் நாள் இரவே ஹெட் பாத் எடுத்துடுறது பெட்டர். வெளிநாடுகள்ல இதுதான் வழக்கம். கண்டிஷனர் பயன்படுத்தும்போது, அதை தலையின் அடி வரை அப்ளை செய்யாம தலைமுடியில் மட்டும் அப்ளை செய்யணும்''னு சொன்ன ஜெய்ஸ்ரீ, கூந்தலை வாரும் முறைக்கும் டிப்ஸ் தந்தது... 'டாப்’!

ஃபேஷன் ஒரு வட்டம் !

''சுருள் கேசம் உள்ளவங்க, பற்கள் இடைவெளி அதிகமா இருக்கற சீப்பைப் பயன்படுத்தணும். இதனால முடி சிக்காவதும், உடைந்து போவதும் ஏற்படாது. தலைமுடியைச் சீவும்போது மேலிருந்து கீழ் நோக்கி இழுத்தா, முடியின் வேரில் அழுத்தம் அதிகமாகி உடையலாம். அதனால, கீழிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மேல் நோக்கி சீவப் பழகுங்க. அதாவது, ஸ்டெப் பை ஸ்டெப்பாக, கூந்தலை கையில் இறுகப் பிடித்துக் கொண்டு, அதற்கு கீழிருக்கும் ஏரியாவை மட்டும் சீவ வேண்டும். கூந்தல் ஆரோக்கியமா இருந்தாதான் அழகா இருக்கும்... மறந்துடாதீங்க!''னு முடிச்சாங்க ஜெய்ஸ்ரீ!

கேர்ள்ஸ்... நாளைக்கு ஃபேஷன் ரிட்டர்ன் ஹேர் ஸ்டைல்தானே காலேஜுக்கு..?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism