'வெல்கம்’ என்கிற வரவேற்புப் பலகையில் இருந்தே தொற்றிக் கொண்டது பரபரப்பு... சென்னை, எம்.ஓ.பி. கல்லூரியில் நடைபெற்ற 'எம்.ஓ.பி. பஜார்’ விழாவில்!

பஜாருக்குள் நுழைவதற்கு முன்பாக, நிகழ்ச்சியைப் பற்றி சின்ன இன்ட்ரோ கொடுத்தார் கல்லூரியின் 'ஸ்டூடன்ட் டிரெயினிங் அண்ட் பிளேஸ்மென்ட் செல்' டீன், டாக்டர் ரோஸி பெர்னாண்டோ. ''எங்கள் மாணவிகளுக்கு படிப்போடு பிஸினஸ் செய்வது எப்படி... அதை எப்படி மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் படிப்பாக அல்லாமல், பிராக்டிகலாக புரிய வைப்பதற்காகவே ஒவ்வொரு வருடமும் இரண்டு நாட்களுக்கு இந்த பஜாரை நடத்துகிறோம். யார் யார் என்ன ஸ்டால் போடப் போகிறார்கள் என்பதை லிஸ்ட்டாக கொடுத்துவிடுவார்கள். பொருட்களை வெளியில் இருந்தோ அல்லது சொந்தமாக தயாரித்தோ கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் ஸ்டால்களை பார்வையிடவும், பொருட்களை வாங்கவும் அனுமதி உண்டு. இதன் மூலம் கிடைக்கும் பணத்தை மாணவிகளே எடுத்துக் கொள்வார்கள். கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு வரும் விருந்தினர்களுக்கு, எங்கள் மாணவிகளே சமைத்துப் பரிமாறுவார்கள். அதற்கான ஊதியத்தையும் மாணவிகளுக்குக் கொடுத்துவிடுவோம். எங்கள் பெண்களுக்கு படிப்பு, சமையல், பிஸினஸ் என எல்லாமே அத்துப்படி. இதன் மூலம், எதிர்காலத்தில் சொந்தக் காலில் நிற்கும் பலத்தை மாணவிகளுக்குக் கற்றுத் தருகிறோம்'' என்று பெருமிதமாக சொன்னார் ரோஸி பெர்னாண்டோ.

பெரியவர்கள், சிறுவர்கள், கேர்ள்ஸ், கைஸ் என ஏதோ குட்டி ரங்கநாதன் தெருவுக்குள் நுழைந்ததுபோல பஜார் அத்தனை சுறுசுறுப்பாக இருந்தது. கிட்டத்தட்ட 80 ஸ்டால்கள், ஒரு ஸ்டாலுக்கு ஐந்து மாணவிகள் என 400 மாணவிகள். குறிப்பிட்ட ஒரு ஸ்டாலில் கூட்டம் குவிய, எட்டிப் பார்த்தோம். அங்கே ஒரு பாட்டி ஜோசியம் பார்த்துக் கொண்டிருக்க, பல மெஹந்தி கைகள் அவர் முன் நீண்டிருந்தன. ''ஒனக்கு இன்னும் நாலு வருஷத்துல கல்யாணம் முடியும்'' என்று பாட்டி சொல்ல, ''அவ்ளோ நாளா..?!'' என்று 'புஸ்’ ஆனார் அந்தப் பெண்.

அடுத்து கை நீட்டிய லூட்டி பார்ட்டி, ''கூடுதலா பத்து ரூபாய் வேணும்னாலும் வாங்கிக்கோங்க... ஒரே வருஷத்துல எனக்குக் கல்யாணம் முடிஞ்சுரும்னு நல்வாக்கு சொல்லுங்க!'' என்று பாட்டியிடம் கிசுகிசுக்க, அவரை ஓட்டி எடுத்தார்கள் தோழிகள்.

பஜாரில் கேம்ஸ் ஸ்டால்களுக்கும் குறைவில்லை. அதில் ஹைலைட், 'மிரர் கார் ரேஸ் கேம்’. அதாவது, ஒரு பேப்பரில் ரோடு வரைந்திருக்கும். அதை ஒரு கண்ணாடி முன்பு வைத்து விடுவார்கள். குட்டி பொம்மை காரும் உங்கள் கையில் கொடுத்து விடுவார்கள். கண்ணாடியில் தெரியும் பேப்பர் ரோடை பார்த்து... காரை ஓட்டிக் காட்டவேண்டும். 'ஊ.. ஹே... ஹாஹா' என்று பலவித சந்தோஷ குரல்களோடு அசரடித்தனர் கேர்ள்ஸ்.

எதிர்பாராத சர்ப்ரைஸாக, இன்ஸ்டன்ட் ஸ்டூடியோவும் இருந்தது. வருகிறவர்களை எல்லாம் போட்டோ எடுத்து, பிரின்ட் போட்டு, தாங்கள் உருவாக்கியிருக்கும் கிரீட்டிங் கார்டுகளில் சுடச்சுட கேர்ள்ஸ் ஒட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது... அந்த ஏரியாவையே செம 'லைவ்' ஆக்கியது! போட்டோ எடுப்பதற்கு முன் டச் அப் செய்துகொள்ள மேக்கப் பொருட்கள் மற்றும் பேன்ஸி தொப்பிகள் என அட்ராக்ட் செய்தது அவர்களின் ஐடியா.

ஃபேஸ் பெயின்ட்டிங் ஸ்டாலை அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்க்க, ''அட, யாராச்சும் வாங்கப்பா...'' என்று கூவிக் கூவி அழைத்தனர் கேர்ள்ஸ். ''எங்க ஹேண்ட்ல வேணும்னா பெயின்ட் பண்றீங்களா..?'' என்று அவர்களுக்குக் 'கை’ கொடுத்தனர் கைஸ். இளநீர்க் கடையில், கேர்ள்ஸ் லாகவமாக இளநீர் சீவிக் கொடுத்த அழகுக்கே இரண்டு இளநீர் கூடுதலாகக் குடிக்கலாம். கிரீட்டிங்

கார்ட்ஸ் ஸ்டாலில், 'இதெல்லாம் நாங்களே பண்ணினது’ என்று பெண்கள் புன்னகைக்க, ஒவ்வொரு கார்டும் ஒவ்வொரு விதமாகப் பிரமாதப்படுத்தியது. குலாப் ஜாமூன் தொடங்கி... காரம், ஐஸ்கிரீம், ஃபாஸ்ட் ஃபுட் என்று வயிற்றுக்கு விருந்து வைக்கும் ஸ்டால்களுக்கும் பஞ்சமில்லை!

''நீங்க போற தி.நகர், புரசைவாக்கம் ஷாப்பிங் ஏரியாக்கள்ல இருக்கிற எல்லாப் பொருட்களும், அங்க இருக்கறதவிட குறைஞ்ச விலையிலயே இங்க கிடைக்கும்!'' என்று 'நியூரா கலெக்ஷன்’ ஃபேன்ஸி ஸ்டோரில் இருந்த பெண்கள் மார்க்கெட்டிங் மாயாஜாலம் செய்து கொண்டிருக்க, அந்தக் கடையில் கூட்டமோ கூட்டம். பஜாரில் அதிக விற்பனை நடந்த கடை இதுதானாம்! இரண்டே நாட்களில் 37,500 ரூபாய்க்கு விற்பனை, 12,000 ரூபாய் லாபம்! ''வீட்டுல சொல்லி ஃபேன்ஸி ஸ்டோர் வெச்சுருக்கற மாப்பிள்ளையா பார்க்கச் சொல்லணும்!'' என்று ஒரு கேர்ள் கமென்ட் அடிக்க, கலகலத்தது ஏரியா!

வந்திருந்தவர்களின் கைகளையும், பைகளையும் நிறைத்து அனுப்பியது எம்.ஓ.பி. பஜார்!