''முதல்வர் பாராட்டி ஊக்கத் தொகை கொடுத்தப்போ, இன்னும் நிறைய சாதிக்கணும்னு உறுதி வந்தது!''

- திக்கித் திணறிய வார்த்தைகளில் தங்களின் சந்தோஷம் பகிர்கிறார்கள் சுபாஷினி, வர்ஷா சகோதரிகள்!

மிகவும் வறுமையான குடும் பத்தில் பிறந்திருக்கும் சுபாஷினி, வர்ஷா இருவருக்கும் காது கேட்காது, சரிவரப் பேச முடியாது, மற்றவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்வதும் கடினம். ஆனால், இத்தனை இன்னல்களுக்கு இடையிலும்... 'படிக்க முடியும்', 'சாதிக்க முடியும்' என்று நிரூபித்திருக்கிறார்கள் இந்த தன்னம்பிக்கை சகோதரிகள்!

ஆம்... கடந்த ஆண்டு (2010-11) ப்ளஸ் டூ அரசுப் பொதுத்தேர்வில் சுபாஷினி 942/1000 மதிப்பெண் பெற்று, செவித்திறன் குறைபாடு உடையோர் பிரிவில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறார். அவருடைய தங்கை வர்ஷா, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 381/400 மதிப்பெண் பெற்று, இதே பிரிவில் மாநிலத்தில் முதல் மாணவியாக வந்திருக்கிறார். இதற்காகத்தான் சமீபத்தில் பாராட்டையும், ஊக்கத் தொகையையும் வழங்கியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா!

சென்னை, அண்ணாநகரில் உள்ள அவர்களின் சிறிய வீட்டில் புன்னகை பூத்து வரவேற்கிறார்கள் அதன் மனிதர்கள். அதைத் தாண்டி பேச ஆரம்பித்தால், அதிர்ச்சி அறைகிறது. ஆம்... ரயில்வேயில் பெயின்ட்டிங் வேலை செய்யும் அப்பா சீனிவாசன், இல்லத்தரசியான அம்மா கமலா, சுபாஷினி மற்றும் இரட்டைச் சகோதரிகள் வர்ஷா - காவ்யா என யாருக்குமே காது கேட்காது. மௌனமே மொழியாக இருக்கும் குடும்பத்தின் பெரிய துயரம் தாண்டித்தான் சாதித் திருக்கிறார்கள் சுபாஷினியும், வர்ஷாவும். சிரமப்பட்டு பேசிய சுபாஷினியின் வார்த்தைகளைச் சேகரித்தோம்....

''மேற்கு அண்ணாநகர்ல இருக்கிற 'அஜய் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப்பள்ளியில்’தான் படிச் சோம். வர்ஷா அதே பள்ளியில ப்ளஸ் ஒன் படிக்கிறா. நான் மாநிலக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படிக்கிறேன்.

'குடும்பக் கஷ்டத்திலிருந்து மீளணும்னா... படிப்புதான் ஒரே பிடிமானம்'னு உணர்ந்து படிச்சோம். தினமும் ஒரு கிலோமீட்டர் நடந்துதான் ஸ்கூலுக்கு போகணும். ஒரு நாள்ல சுமார் 16 மணி நேரம் படிப்போம். டி.வி. எல்லாம் பார்க்க மாட்டோம். ஆனா, செய்தித்தாள்களைத் தொடர்ந்து படிப்போம். காரணம்... எங்களைப் போல ஏழைகளுக்கு என்னென்ன உதவிகள் எல்லாம் கிடைக்கும்ங்கிற விவரத்தை தெரிஞ்சுக்கத்தான்.

இப்போ நாங்க முதல் மதிப்பெண் எடுத்திருக்கறதுக்குக் காரணம் எங்களோட உழைப்பு மட்டுமில்ல... ஸ்கூல்ல கிடைச்ச பயிற்சியும்; ஆசிரியர்கள், அப்பா, அம்மா கொடுத்த ஊக்கமும்தான். குறிப்பா, இலவசப் புத்தகம், இலவசக் கல்வினு எங்க ஸ்கூல் கை தூக்கி விடலைனா, இந்த வெளிச்சத்துக்கு நாங்க வந்திருக்க முடியாது'' என்ற அக்காவை நிறுத்தி, தான் தொடர்ந்தார் வர்ஷா...

''அக்காவுக்கு பரதநாட்டியம், யோகா இதுலயெல்லாம்கூட ஆர்வம். மூணு வருஷத்துக்கு முன்ன ராமநாதபுரத்துல 2,000 போட்டியாளர்கள் கலந்துக்கிட்ட தேசிய யோகா போட்டியில மூணாவது பரிசு வாங்கினாங்க. பாடலைக் கேட்க முடியாதுனாலும், பயிற்சியாளரோட சைகைகளுக்கு ஏற்ப அக்கா பரதம் ஆடும்போது, எங்களுக்கு எல்லாம் கண்ணில் நீர் வரும்!'' என்று அக்காவைக் கட்டிக்கொள்கிறார் வர்ஷா.

எம்.காம், சி.ஏ படித்து ரயில்வேயில் வேலை பார்க்க வேண்டும் என்கிற கனவு சுபாஷினிக்கு. ஆனால், படிப்பு, வேலை என்று குறிப்பிட்டுச் சொல்லத் தெரியவில்லை வர்ஷாவுக்கு. ஆனாலும், ''நல்லா படிக்கணும். பெரிய வேலைக்குப் போகணும். நிறையச் சம்பாதிக்கணும். அப்போ எங்க குடும்பக் கஷ்டம் எல்லாம் போயிடும்!'' என்று கண்களில் ஆயிரம் வார்த்தைகள் பேசுகிறாள் வர்ஷா!

இவர்களின் இந்த வெற்றியும், இனி நிகழ்த்தப் போகும் வெற்றிகளும் சாதனைகளுக்கெல்லாம் சாதனையாக பேசப்படட்டும்!