''ஆறாவது படிக்கும் என் மகள், தன் தோழிகளின் வீட்டில் 'பெட்’ நாய்கள் வளர்ப்பதைப் பார்த்துவிட்டு, நாய் வளர்க்க வேண்டும் என்கிறாள். 'கடித்துவிடும்', 'தொற்று நோய் வரும்' என என் கணவர் தயங்குகிறார். பாதிப்புகள் எதுவுமின்றி செல்லப்பிராணிகள் வளர்க்க வழி கூறுங்களேன்'' என்று கேட்டிருக்கும் விருதுநகர் மகாலட்சுமிக்காக குறிப்புகள் தருகிறார், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கால்நடை உதவி மருத்துவர் க.ஜவஹர்.

''ஒரு சில கவனக் குறிப்புகளை வீட்டில் உள்ளவர்கள் பின்பற்றினால், செல்லப்பிராணிகள் நமக்கு அனுகூலமாகவே இருக்கும். கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து அபார்ட்மென்டுகளில் சிறை போல மாறிவிட்ட சூழலில், வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு செல்லப்பிராணிகள், பெரும் வரப்பிரசாதம். உதவும் தன்மை, அன்பு, கருணை போன்ற குணாதிசயங்கள் மட்டுமன்றி, இக்காலப் பிள்ளைகளின் மன அழுத்த நெருக்கடிக்கு செல்லப்பிராணிகள் அருமையான வடிகால். எனவே அதை வளர்ப்பது குறித்து பயப்படத் தேவையில்லை. ஆனால், செல்லப்பிராணி வளர்ப்புக்குத் தேவையான அனைத்தையும் முறைப்படி செய்யத் தவறக்கூடாது.

புதிதாக நாய் வாங்கி வந்தால், சின்னச்சின்ன கட்டளைகளுக்கு உடன்பட வைப்பது, நாய்க்குப் பிடித்தது... பிடிக்காதது போன்றவற்றை அறிந்து கொள்வது என பெரியவர்கள் ஓரளவுக்கு பழக்கிய பிறகே, பிள்ளைகளிடம் பழகவிட வேண்டும். எந்த நேரத்தில் நாயின் அருகில் செல்லலாம், செல்லக் கூடாது; நாயானது, இறைச்சியை உண்ணும்போதோ, குரைக்கும்போதோ அதன் அருகில் செல்லக் கூடாது; நாய் விரட்டினால் ஓடக்கூடாது; கையில் உணவை வைத்துக்கொண்டு அதற்குக் கொடுக்காமல் போக்குக் காட்டக் கூடாது... என்பது போன்ற அறிவுரைகளையும் பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டும். உங்கள் வீட்டுக் குழந்தை, பிராணியுடன் நன்றாகப் பரிச்சயமாகி விளையாடுகிறது என்பதற்காக பக்கத்து வீட்டுப் பிள்ளைகளிடமும் எடுத்த எடுப்பில் நாயை அனுமதிக்கூடாது. வாந்தி, வயிற்றுப் போக்கு, சரியாகச் சாப்பிடாமல் துவண்டு போய் முடங்குவது போன்றவை பிராணிகளின் சுகவீனத்துக்கான ஆரம்பகட்ட அறிகுறிகள். இவை தென்பட்டால்... நாயைத் தனிமைப்படுத்தி உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதுபோன்ற சமயங்களில் நாயின் வயிற்றிலிருக்கும் கொக்கிப்புழு, உருண்டைப்புழு போன்றவற்றின் முட்டைகள் அதன் கழிவில் அதிகம் வெளிப்பட்டு வீட்டில் உள்ளவர்களைத் தொற்ற வாய்ப்பு உண்டு ஜாக்கிரதை.

ஆரோக்கியமாக இருக்கும் நாயானாலும்கூட, அதனுடன் விளையாடி முடித்ததும் கைகளை நன்றாக சோப் போட்டு கழுவ வேண்டும். செல்லப்பிராணியின் உடலில் ரோமங்கள் அதிகம் இருப்பின், அதனுடன் அந்யோன்யமாக விளையாடிய குழந்தைகள், வேறு உடைகளை மாற்றிக் கொண்ட பிறகு சாப்பிடுவது உள்ளிட்ட வேலைகளைச் செய்ய அனுமதிக்கலாம்.

நாய் பிறந்த ஒன்றரை மாதத்தில் தடுப்பூசி தற்காப்பைத் துவக்கிவிட வேண்டும். எலிக்காய்ச்சல் பாதிப்பு, வலிப்பு நோய், ஹெபாடைட்டிஸ் போன்ற நோய்களைத் தவிர்ப்பதற்கான கலவை மருந்துகளின் தடுப்பூசி இந்தச் சமயத்தில் போடவேண்டும். மூன்றாவது மாதத்தில் ரேபீஸ் தடுப்பூசி போடுவதோடு, டாக்டரின் ஆலோசனையின் கீழ் வருடம் ஒருமுறை இதைத் தொடரவேண்டும். குட்டி

நாய்களுக்கு மாதம் ஒரு முறையும், ஒரு வயதுக்கு மேற்பட்ட நாய்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையுமாக குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.

வெளித்தள்ளிய நாக்கோடு எச்சில் ஒழுகுவது, சாப்பிடாமலிருப்பது, தண்ணீர் அருந்தாமலிருப்பது, அருகில் யாரையும் அனுமதிக்காமலிருப்பது போன்றவை இருந்தால்... ரேபீஸ் எச்சரிக்கை அவசியம். உடனடியாக நாயைத் தனிமைப்படுத்தி டாக்டரை அழைக்க வேண்டும். ரேபீஸ் பாதிப்புள்ள நாய், எவரையேனும் கடித்துவிட்டால்... காலம் தாழ்த்தாது டாக்டரைப் பார்க்க வெண்டும். 'வெறிநாய் கடித்துவிட்டால், தொப்புளைச் சுற்றி 14 ஊசி போடுவார்களே' என்கிற அச்சமெல்லாம் தேவையில்லை. இப்போது, சாதாரண ஊசிகளை கைகளில் போடுவது போலவே... சுமார் ஆறு ஊசிகளை, வெவ்வேறு தினங்களில் (0 மற்றும் 3, 7, 14, 28, 90 தினங்கள்) தவறாது போட்டுக்கொள்ள வேண்டும். ரேபீஸ் பாதிப்புக்கான அறிகுறியுள்ள நாய், ஒருவரை கடித்தால் அதைத் தனிமைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்து, சுமாராக 10 தினங்களில் அந்த நாய் இறந்து போனால் அதற்கு வைரஸ் வீரியம் அதிகம் என்ற எச்சரிக்கையோடு கடிபட்டவர் கவனமாக சிகிச்சையைப் பின்பற்ற வேண்டும். ரேபீஸ் பாதிப்புள்ள நாய், இன்னொரு நாயைக் கடித்திருப்பினும், இதே ரீதியிலான சிகிச்சை தேவை.

ஒரு வயதுக்கு மேற்பட்ட நாய், பருவமெய்தியதன் அறிகுறியாக வீட்டுக்குள் தங்காது, இணை தேடி வெளியில் பாயும். குட்டி நாய் வேண்டுபவர்கள், தங்கள் நாய்க்கான ஆரோக்கிய இணையை அறிந்து கலக்க விடலாம். அல்லது மருத்துவரிடம் அழைத்துச்சென்று ஆண்மை நீக்கம் அல்லது கருப்பை நீக்கம் செய்துவிடலாம். ஒரு வயதுக்கு முன்பாக இவற்றை மேற்கொண்டால்... பிராணியின் வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகும். அதிக வயதான நாய்கள், நோய்க்கு அதிகம் இலக்காகும் என்பதால்... குழந்தைகள் உள்ள வீடுகளில் அவற்றைத் தவிர்ப்பதே நல்லது.''