காலையில் பரபரப்பாக சுழன்று குழந்தைகளைப் பள்ளிக்கு கிளப்பி 'பை’ சொல்லி அனுப்பி வைக்கும் அம்மாக்களை நாம் அறிவோம். அதேநேரத்தில் காலையில் அவசரமாக காலேஜுக்குக் கிளம்பும் மம்மிகளுக்கு 'பை’ சொல்லி அனுப்பும் பிஞ்சுக் குழந்தைகளும் ஆங்காங்கு உண்டு. அப்படியான 'ஸ்டூடன்ட் கம் மதர்’ இருவரிடம், அவர்களின் அனுபவம் கேட்டோம்.

திண்டுக்கல், காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி பயின்று வரும் மரகதம், இரண்டு வயதுப் பெண் குழந்தைக்குத் தாய். ''மூணு வருஷத்துக்கு முன்ன திருமணம் முடிஞ்சுது. கணவர் ராம்ராஜ், டிராவல்ஸ் வெச்சுருக்கார். கல்யாணமானவுடனேயே அவர்கிட்ட பிஹெச்.டி பண்ணணும்ங்கிற என்னோட ஆசையைச் சொன்னேன். சந்தோஷமா உற்சாகப்படுத்தினார். 'சங்க இலக்கியத்தில் பாலியல் அணுகுமுறைகள்’ எனும் தலைப்பில் ஆய்வை ஆரம்பிச்சேன். ஒரு வருஷத்தில் எங்க பாப்பா சற்குணா பிறந்தா. மூணு மாசம் வரைக்கும் அவகூட பிரேக்ல இருந்துட்டு, மறுபடியும் ஆய்வுல கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டேன். என் கணவரும், மாமியாரும் சப்போர்ட்டிவ்வா இருக்கறதால, படிப்பைத் தொடர்றேன்.

தினமும் காலையில 5 மணிக்கு எழுந்து, 7 மணிக் குள்ள சமையல் உள்ளிட்ட எல்லா வேலைகளையும் முடிச்சுட்டு, 7.30 மணிக்கெல்லாம் பாப்பாவைக் கொண்டுபோய் மாமியார் வீட்டுல விட்டுட்டு, யுனிவர்சிட்டிக்குக் கிளம்பிடுவேன். சாயங்காலம் வீட்டுக்கு வர ஆறு மணி ஆயிடும். ஓடி வந்து என்னைக் கட்டிக்கிற சற்குணாவுக்கு நான் கொடுக்கிற முத்தம், அந்த நாளோட என் ஏக்கம் எல்லாத்தையும் இறக்கி வைக்கும். சில நேரங்கள்ல ஏதாவது டைப்பிங் வொர்க் இருந்தா, ஏழு மணிக்கு மேலகூட ஆயிடும். அப்படிச் சில சந்தர்ப்பங்கள்ல நான் வீட்டுக்குப் போறதுக்குள்ள பாப்பா தூங்கிடும். எனக்கு மனசெல்லாம் பாரமா இருக்கும். காலையில எழுந்து, 'எப்போ வந்து என் பக்கத்துல படுத்தே’னு கேட்கிற மாதிரி பாப்பா என்னைக் கழுத்தோட கட்டிக்கிட்டுச் சிரிக்கும்போது, மறுபடியும் உற்சாகம் வந்துடும். ஒரு வயசு வரைக்கும் தினமும் காலையில் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிடுவா. இப்போ அவளுக்கு எல்லாம் பழகிடுச்சு. சிரிச்சுட்டே 'பை’ சொல்றா!''

நாகர்கோவில், கலைவாணர் என்.எஸ்.கே. இன்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக்., மூன்றாமாண்டு தகவல் தொழில்நுட்ப மாணவி விக்னேஸ்வரி. வீட்டில் ஒரு வயதுக் குழந்தை அர்ஜுனுக்கு அம்மா!

''நல்ல இடம், நல்ல குணமுள்ள மாப்பிள்ளைனு சிறப்பா ஒரு வரன் வந்ததால, எங்க வீட்டுல எனக்கு ஃபர்ஸ்ட் இயர் படிக்கும்போதே கல்யாணத்தை முடிச்சுட்டாங்க. என் கணவர் தனியார் பொறியியல் கல்லூரியில் லெக்சரரா இருக்கார். 'விருப்பம் இருந்தா தொடர்ந்து படி’னு அவர் ஆதரவா இருக்க, என் படிப்பு எந்தப் பிரச்னையும் இல்லாம தொடர்ந்தது. என் கணவர் வீடு, நான் படிக்கிற காலேஜில் இருந்து ரொம்ப தூரம்ங்கிறதால, எங்கம்மா வீட்டில் இருந்துதான் காலேஜுக்குப் போயிட்டு இருக்கேன். காலை ஒன்பது டு சாயங்காலம் அஞ்சு மணி வரைக்கும் காலேஜ். என் பையன் அர்ஜுன்கூட செலவிடற நேரம் குறைவுதான்னாலும், அதை குவாலிட்டி டைமா செலவிடுறேன். அம்மாகிட்ட விட்டுட்டுப் போறதால, அவங்க சரியான நேரத்துல அவனுக்குச் சாப்பாடு, தூக்கம்னு பார்த்துக்குவாங்கங்கிற நிம்மதி இருக்கும். சொல்லப்போனா அர்ஜுன் என்னைவிட எங்கம்மாகிட்டதான் நெருக்கமா இருப்பான்.

காலேஜ்ல மொபைல் பயன்படுத்தக் கூடாதுதான். ஆனா, என்னை மாதிரி ஸ்டூடன்ட் அம்மாக்களுக்கு அதில் எக்ஸ்க்யூஸ் உண்டு. ஃப்ரீ ஹவர்ஸ்ல அம்மாவுக்கு போன் பண்ணி அர்ஜுன் சேட்டைகளைக் கேட்டுக்குவேன். அவன் முதன் முதலா குப்புத்துக்கிட்டது, தவழ்ந்தது, நடந்ததுனு பல ஸ்பெஷல் மொமென்ட்டுகளை மிஸ் பண்ணியிருக்கேன். அந்த வருத்தம் எனக்குள்ள நிறைய இருக்கு. அர்ஜுன் வளர்ந்ததும், 'எவ்வளவு ஏக்கத்துக்கு நடுவுல அம்மா படிப்பை முடிச்சேன் தெரியுமா..?’னு அவனுக்குச் சொல்லி, அந்த முக்கியத்துவத்தை அவனோட படிப்புக்கும் அவனைக் கொடுக்கச் சொல்வேன்.''

சூப்பர் ஸ்டூடன்ட் மம்மீஸ்!