Published:Updated:

இணைந்த இளம் ரத்தங்கள் !

இணைந்த இளம் ரத்தங்கள் !

பிரீமியம் ஸ்டோரி

இளம் ரத்தம் என்றாலே... வேகம்தானே! இதோ இங்கே இளம் ரத்தங்கள் ஒன்று சேர்ந்து, சமீபத்தில் சென்னையில் நடத்திய ரத்த தான முகாம், 'சபாஷ்’ செய்தியாகியிருக்கிறது! சென்னை, மருத்துவக் கல்லூரி மாணவிகள் மற்றும் மாணவர்கள் இணைந்து... மற்ற கல்லூரி மாணவிகள் மற்றும் மாணவர்களை கூட்டுச் சேர்த்துக் கொண்டு நடத்தியுள்ள இந்த முகாம்... ரத்த தானம் பற்றிய விழிப்பு உணர்வுக்கு புதிய பாதையைப் போட்டிருக்கிறது!

இணைந்த இளம் ரத்தங்கள் !

ரத்த தானத்துக்காகவே சென்னை மருத்துவக் கல்லூரியில், 'பிளட் டொனேட்டர்ஸ் கிளப்' என்ற ஒன்றை மாணவ-மாணவிகளே உருவாக்கியுள்ளனர். அதன் ஜாயின்ட் செக்ரெட்டரி யாக இருக்கும் மூன்றாம் ஆண்டு மாணவி வித்யா, இதுபற்றி உற்சாகம் பொங்க பேசினார்...

##~##

''பிளட் டோனர்ஸ் கிளப் உருவாகி ஒரு வருஷம்தான் ஆச்சு. விருப்பப்படுறவங்க எப்போ வேணும்னாலும் இங்க வந்து ரத்தம் கொடுக்கறதுக்கு வசதியாத்தான் இதை ஆரம்பிச்சோம். எமர்ஜென்சி சமயம்னா... கிளப்ல பதிவு செய்திருக்கறவங்களுக்கு தகவல் தந்து, தேவைப்படுறவங்களுக்கு ரத்தம் கொடுத்து உதவச் செய்வோம். இந்த முயற்சிக்கு எங்க கல்லூரி மாணவ, மாணவிங்க நிறைய பேர் கை கொடுத்தாங்க. இந்த ஒரு வருஷத்துலயே ஆயிரம் மெம்பர்ஸ் சேர்ந்திருக்காங்க! எங்க கல்லூரி மாணவ, மாணவிகள் கொடுத்த பிளட்... 506 யூனிட்ஸ்ஸ தாண்டிடுச்சு ஒரு வருஷத்துல!

இப்படி ஒரு வரவேற்பு கிடைச்சதால, கிளப் தொடங்கின முதலாம் ஆண்டு நிகழ்ச்சியை சிறப்பா நடத்த முடிவெடுத் தோம். மத்த கல்லூரி மாணவ- மாணவி களுக்கு அழைப்பு வெச்சோம். சுமார் 500 பேருக்கும் மேல் கலந்துக்கிட்டு பிளட் டொனேட் பண்ணினாங்க. நான்காவது முறை, ஐந்தாவது முறை, ஏழாவது முறை ரத்ததானம் பண்ணின ரெகுலர் பிளட் டொனேட்டர்ஸும் இதுல இருக்காங்க.

இந்த முயற்சியைப் பார்த்து நெகிழ்ந்து போய், தமிழ்நாடு ஹெல்த் அண்ட் பேமிலி வெல்ஃபேர் செக்ரெட்டரி சுப்புராஜ் எல்லாரையும் பாராட்டினார். அதிக தடவை பிளட் டொனெட் பண்ணியிருக்கறவங்களுக்கு மெடல் கொடுத்து கௌரவிச்சார்'' என்று சொன்னார் வித்யா. மெடல் பெற்றவர்களில் இவரும் ஒருவர்.

'''பெண்கள் அதிகமா பிளட் டொனேட் பண்றதில்லை’ங்கறதை பொய்யாக்கிட்டோம்தானே?!'' என்கிறார் வித்யா, ஐந்தாவது முறையாக ரத்த தானம் செய்திருக்கும் பெருமையோடு!.

  - வே.கிருஷ்ணவேணி
படம்: வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு